search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசு கடத்தல்"

    • பசுவின் கொழுப்பு , தோல் மற்றும் எலும்புகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
    • பைன்வாகி பகுதியில் சமீப காலமாக பசு கடத்தல் அதிக அளவில் நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை சட்ட விரோதமாக இறைச்சிக்காக வளர்த்ததாக கூறி 11 இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மண்டலாவில் உள்ள பழங்குடியினப் பகுதியான பைன்வாகியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளில் சட்டவிரோதமாக சுமார் 150 பசுக்கள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டுள்ளது.

     

    இதை அறிந்த போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அந்த வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் மாட்டிறைச்சி கண்டெடுக்கபட்டது. மேலும் பசுவின் கொழுப்பு, தோல் மற்றும் எலும்புகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டது மாட்டிறைச்சிதான் என்று உறுதி செய்யப்பட்டதாலும் 11 பேரின் வீடுகளும் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததாலும் அவை இடித்து அகற்றப்பட்டன.

     

     

     

    மேலும் அங்கிருந்த பசுக்களை மீட்ட போலீசார் எப்.ஐ.ஆர் பதிந்து ஒருவரை கைது செய்த நிலையில் மற்ற 10 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் இஸ்லாமியர்கள் என்றும் பைன்வாகி பகுதியில் சமீப காலமாக பசு கடத்தல் அதிக அளவில் நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  மத்தியப் பிரதேசத்தில் பசுக்களை கடத்தி இறைச்சிக்காக வதைக்கும் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.




     

    ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அருகே உள்ள அம்ரோரா கிராமத்திற்கு அருகே, சரஸ்வதி ராம் என்ற அந்த 60 வயது முதியவர் நேற்று முன்தினம் தனது கால்நடைகளை வண்டியில் ஏற்றி அருகில் உள்ள பன்ஷிதர் நகர் என்ற சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர்ம், முதியவரை மறித்து, மாடு கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரது ஆடைகளைக் களைந்து இரு சக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று சிறிதுதூரத்தில் கட்டை அவிழ்த்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சமயம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த மூவரில் ஒருவரை கைது செய்துள்ளனர். பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

    ×