என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டு எண்ணிக்கை"

    • 32 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று தொடங்கியது.
    • சிக்கிம் எதிர்க்கட்சிகள் இடையே பரபரப்பு காணப்படுகிறது.

    காங்டாக்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் செல்வாக்குமிக்க மாநில கட்சியான சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.

    முதல்-மந்திரியாக பிரேம்சிங் தமாங் ஆட்சி நடத்தி வந்தார். அவரது பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவதால் பாராளுமன்ற தேர்தலுடன் சிக்கிம் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    அதன்படி சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவானது.

    இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பிற மாநில காட்சிகள் களத்தில் இருந்தாலும் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் தான் கடும் போட்டி நிலவுகிறது.

    சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், அவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், முன்னாள் முதல்-மந்திரி பவன் குமார் சாம்லிங் மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

    இவர்களில் யார்-யார் வெற்றி பெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேசிய கடசிகளானபாரதீய ஜனதாவுக்கும், காங்கிர சுக்கும் அங்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு இல்லாததால் அந்த குட்டி மாநிலத்தை பெரிதாக யாரும் கண்டுகொள்ள வில்லை.

    இந்தநிலையில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே ஆளும் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா கட்சி முன்னிலை பெற்றது. மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 30 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங் முதல் சுற்று முடிவில் 6,443 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதே சமயத்தில் முன்னாள் முதல்-மந்திரி பவன்குமார் முதல் சுற்றில் பின்தங்கி இருந்தார்.

    அதுபோல பிரபல முன்னாள் கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியாவும் தனது பார்புங் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தார். இதனால் சிக்கிம் எதிர்க்கட்சிகள் இடையே பரபரப்பு காணப்படுகிறது.

    ஆளும் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா மீண்டும் அமோக வெற்றியுடன் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சி 90 சதவீத வெற்றியுடன் ஆட்சியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்கிறார்.

    • வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்.
    • காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தோ்தல் நடைபெற்றுள்ளது.

    ஸ்ரீநகர்:

    90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரே கட்டமாகத் தோ்தல் நடை பெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலை யில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்று கருத்து கணிப்புகள் கூறி உள்ளன. முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.


    இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் போட்டியிட்ட நிலையில், இவை சில தொகுதிகளில் வெல்லக் கூடும். ஆம் ஆத்மிக்கு ஒரு இடம் கூட கிடைப்பதே கடினம் என்று கருத்து கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வருகிறது.

    அரியானா, ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதை யொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகு திகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதி களில் தோ்தல் நடைபெற்றது.

    மொத்த வாக்காளா்கள் சுமாா் 88 லட்சம் போ் என்ற நிலையில், மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகின. சமீபத்திய பாராளுமன்றத் தோ்தலில் பதிவான வாக்குகளைவிட (58.58 சதவீதம்) இது அதிகமாகும்.

    ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.

    20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ஜம்மு-காஷ்மீா் தோ்த லில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி யாகவும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது.

    அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதி கள் கிடைக்கும். பா.ஜ.க. வுக்கு கடந்த முறையைவிட (25) சற்று அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பி.டி.பி.-க்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்றாலும், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி துருப்புச் சீட்டாக மாறக்கூடும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    அதுபோல 5 நியமன எம்.எல்.ஏ.க்களின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    • தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியீடு.
    • காங்கிரஸ் கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என கணிப்பு.

    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடை பெற்றது.

    இந்த தேர்தலில் பா.ஜனதா சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் அணி) ஆகிய கட்சிகள் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ்சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) ஆகிய எதிர்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. நாளை (சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இதற்கிடையே வாக்குப் பதிவு முடிவடைந்த சில மணி நேரங்களில் அங்கு ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 145 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டிருந்தது.


    இந்நிலையில் மேலும் 2 கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்து கணிப்பின் படி பா.ஜ.க கூட்டணி 178-200 இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி 82-102 இடங்களை வெல்லும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

    இதேபோல டூடேஸ் சாணக்கியா கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கே 175 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • பாலக்காடு தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளுமா?
    • இடைத்தேர்தலில் களம் கண்ட பிரியங்கா காந்தி வெற்றிபெறுவாரா?

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

    வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவி யேற்றதால், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    அதேபோன்று செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதா கிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியிலும், பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    அவர்கள் இருவரும் அந்த தொகுதிகளின் எம்.பி.க்களாக பதவியேற்றனர். இதன் காரணமாக வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாகின.

    வயநாடு மற்றும் செலக்கரா தொகுதி களுக்கு கடந்த 13-ந்தேதி இடைத்தேர்தல் நடை பெற்றது. பாலக்காடு சட்ட மன்ற தொகுதிக்கு நேற்று முன்தினம் (20-ந்தேதி) இடைத்தேர்தல் நடத்தப் பட்டது.

    இந்தநிலையில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை (23-ந்தேதி) நடை பெறுகிறது.

    வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டி யிட்டனர். தேர்தலில் 64.69 சதவீத வாக்குகள் பதிவாகின.

    கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.


    இந்நிலையில் தற்போது நடந்த இடைத்தேர்தலில் களம் கண்ட பிரியங்கா காந்தி, அது போன்ற வெற்றியை பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அதேபோன்று செலக்கரா சட்டமன்ற தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், பாலக்காடு சட்ட மன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சியும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதும் நாளை தெரிந்து விடும். 3 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.

    ×