என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிக்ஸர்"
- 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷமார் ஜோசப் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.
- கஸ் அட்கின்ஷன் வீசிய 4வது பந்தை முரட்டுத்தனமாக அடித்து பெரிய சிக்சரை ஷமார் ஜோசப் பறக்க விட்டார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்க்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கவெம் ஹாட்ஜ் 120 ரன்களும் அலிக் அத்தானாஸ் மற்றும் ஜோஷ்வா டா சில்வா 82 ரன்களும் அடித்தனர்.
குறிப்பாக 10-வது விக்கெட்டுக்கு ஷமார் ஜோசப், ஜோஷ்வா டா சில்வா ஜோடி 71 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷமார் ஜோசப் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.
107வது ஓவரில் கஸ் அட்கின்ஷன் வீசிய 4வது பந்தை முரட்டுத்தனமாக அடித்து பெரிய சிக்சரை ஷமார் ஜோசப் பறக்க விட்டார். அது ரசிகர்கள் அமரும் மைதானத்தின் மேற்கூரையில் இருந்த சில ஓடுகளை அடித்து நொறுக்கியது. அந்த துண்டுகள் கீழே அமர்ந்திருந்த ரசிகர்கள் மீதும் விழுந்தது. நல்லவேளையாக ரசிகர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- டி20 உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடிய கெய்ல் 16 சிக்ஸர்களை விளாசினார்.
- டி20 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பூரன் 17 சிக்ஸர்களை விளாசி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், அமெரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மோதின. முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இப்போட்டியில் 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் குவித்தார் நிகோலஸ் பூரன். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் விளாசியவர் என்ற கெய்லின் சாதனையை பூரன் முறியடித்துள்ளார்.
2012 ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடிய கெய்ல் 16 சிக்ஸர்களை விளாசினார்.
2024 டி20 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பூரன் 17 சிக்ஸர்களை விளாசி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள்
1. 2024 - நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 227 ரன்கள் - 17 சிக்ஸர்
2. 2012 - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) - 222 ரன்கள் - 16 சிக்ஸர்
3. 2012 - ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - 249 ரன்கள் - 15 சிக்ஸர்
4. 2012 - மார்லன் சாமுவேல்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 230 ரன்கள் - 15 சிக்ஸர்
5. 2016 - தமீம் இக்பால் (வங்காளதேசம்) - 295 ரன்கள் - 14 சிக்ஸர்
6. 2021 - பட்லர் (இங்கிலாந்து) - 269ரன்கள் - ௧௩ சிக்ஸர்
- மும்பையின் தானே பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டி சோகத்தில் முடிந்தது அனைவரையம் கலங்கடித்துள்ளது.
- சிக்ஸர் அடித்த பின் அவர் நிலைகுலைந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை பதற வைக்கிறது.
இந்தியாவில் அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் விளங்குகிறது. கிரிக்கெட்டைப் பார்ப்பது என்பதைத் தாண்டி இந்தியாவின் பட்டிதொட்டி எங்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிடைக்கும் நேரங்களில் எல்லாம் விளையாடும் ஆட்டமாக கிரிக்கெட் உள்ளது.
அந்த வகையில் மும்பையின் தானே பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டி சோகத்தில் முடிந்தது அனைவரையம் கலங்கடித்துள்ளது. மும்பை மாநகரின் தானே பகுதியில் மீரா சாலையின் அருகே உள்ள சிறிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்துள்ளது. இதில் பிங்க் நிற ஜெர்ஸி அணிந்த இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பவ்லரின் தலைக்கு மேல் சிக்சர் ஒன்றை அடித்துப் பறக்கவிட்ட அவர், அடுத்த பந்துக்கு தாயாராக நின்றுகொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
சக ஆட்டக்காரர்கள் உடனே அவருக்கு முதலுதவி அளிக்க முயற்சி செய்தும் எதுவும் பயனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்ததார். சிக்ஸர் அடித்த பின் அவர் நிலைகுலைந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரின் மனதை பதற வைப்பதாக உள்ளது.
அந்த நபர் யார் என்ற விபரம் இன்னும் தெரியவராத நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சமீப காலமாக மாரடைப்பு மரணங்களும், ஹீட் ஸ்டிரோக் மரணங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தத்க்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்