search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல் முடிவுகள்"

    • பா.ஜனதா தனியாக 240 இடங்கள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் ஜே.பி. நட்டா அமித் ஷாவுடன் ஆலோசனை.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    பா.ஜனதா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான 272 என தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான் கட்சி ஆகியவற்றின் ஆதரவு ஆட்சி அமைக்க தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டா வீட்டிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.

    தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து விரிவான ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பு ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2019 தேர்தலில் பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 240 இடங்களில்தான் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கருத்துக் கணிப்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
    • ஆனால், மம்தா பானர்ஜியின் கட்சி 29 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு பா.ஜனதாவை தனியாக எதிர்த்து நின்றார் மம்தா பானர்ஜி. சந்தேஷ்காளி உள்ளிட்ட பல்வேறு விசயங்களை கையில் எடுத்து பா.ஜனதா மம்தா பானர்ஜி கட்சியை ஓரம் கட்ட பார்த்தது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 22 இடங்களை பிடிக்கும் என தகவல் வெளியானது. அப்போது மம்தா பானர்ஜி கருத்து கணிப்பு பொய்யாகும் என உறுதியாக கூறினார்.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் முன்னணி வகித்தது. நேரம் செல்ல செல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.

    தற்போது 29 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 12 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

    கடந்த முறை 18 இடங்களை பிடித்த பாஜக, தற்போது 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மம்தாவின் 29 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

    • கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணிப்பு.
    • பாஜக வெற்றி பெற்றால் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுமா? என்பது சந்தேகம்.

    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதியுடன் (சனிக்கிழமை) முடிவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் எதிர்கட்சிகள் (இந்தியா கூட்டணி) அதை ஏற்க மறுக்கின்றன.

    ஒரு குழப்பமான சூழ்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு நாளை மாலை மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை இல்லையெனில் புதன்கிழமை காலை நடைபெற வாய்ப்புள்ளது.

    தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்தியா கூட்டணி தலைவர்களின் வெளிப்படையான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 543 தொகுதிளில் 295 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×