என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம்
- கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணிப்பு.
- பாஜக வெற்றி பெற்றால் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுமா? என்பது சந்தேகம்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதியுடன் (சனிக்கிழமை) முடிவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் எதிர்கட்சிகள் (இந்தியா கூட்டணி) அதை ஏற்க மறுக்கின்றன.
ஒரு குழப்பமான சூழ்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு நாளை மாலை மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை இல்லையெனில் புதன்கிழமை காலை நடைபெற வாய்ப்புள்ளது.
தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்தியா கூட்டணி தலைவர்களின் வெளிப்படையான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 543 தொகுதிளில் 295 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.