என் மலர்
நீங்கள் தேடியது "நீட் தேர்வு முறைகேடு"
- மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
- தேசிய தேர்வு முகமையின் விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.
சென்னை:
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. இதில் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
இதற்கிடையே நீட் தேர்வில் சுமார் 1500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வழங்கியது. தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் எதிர்பாராமல் விரயமானால் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
இதை எதிர்த்து 20 ஆயிரம் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று பிசிக்ஸ் வாலா என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளது.
இந்த விவகாரத்தை தெளிவுப்படுத்தும் வரை இளநிலை மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடந்தது.
அப்போது சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறும் போது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவை திரும்ப பெறுகிறோம்.
அந்த மாணவர்களுக்கு ஜூன் 23-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும். அதன்படி முடிவுகள் ஜூன் 30-ந்தேதி அறிவிக்கப்படும்.
தேர்வு எழுத விரும்புவோர் எழுதலாம். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும். மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை சேர்க்காத உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இதர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 6-ந்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
நீட் மறுதேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தனர். தேசிய தேர்வு முகமையின் விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. மேலும் கலந்தாய்வு பாதிக்கப்படாத வாறு நீட் மறுதேர்வு விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். கருணை மதிப்பெண்களை தவிர்க்க மனுதாரர்கள் எழுப்பியுள்ள பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
நீட் தேர்வு குளறுபடி, வினாத்தாள் கசிவு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் மனு உள்பட நீட் தொடர்பாக அனைத்து மனுக்களும் ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டு உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பிறகு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
நீட் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. தேசிய தேர்வு முகமை நம்பகமான அமைப்பாகும். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. அதன் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நீட் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்து வருகிறோம்.
- நீட் தேர்வு முறைகேடுகளால் பல ஆண்டுகாலம் உழைத்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. நீட் முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2017-ம் ஆண்டு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது.
* நீட் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்து வருகிறோம்.
* நீட் விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை நிலவி வருகிறது.
* மருத்துவ துறையிலும் சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது.
* முனைவர் அனந்த கிருஷ்ணன் பரிந்துரையின்பேரில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அடித்தளமிட்டவர் கருணாநிதி.
* நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய நிலையில் மருத்துவப்படிப்பு மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது.
* நீட் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அண்மைக்காலமாக எழுந்து வருகின்றன.
* நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
* அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் அரங்கேறிய சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை நிலை குலையச் செய்துள்ளன.
* நீட் தேர்வு முறைகேடுகளால் பல ஆண்டுகாலம் உழைத்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
* நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் இந்தியாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
- சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு பிறகு தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரிய தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு பிறகு தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றினார்.
இதைத்தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரிய தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
நீட் தேர்வு ஒழிப்புக்கான அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கும் என்று முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் கூறினார்.
- ஜனாதிபதி உரையின்போது நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
- பாராளுமன்றத்தில் இன்று நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு 18-வது மக்களவை அமைக்கப்பட்டு உள்ளது. புதிய அரசின் முதல் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
ஜனாதிபதி உரையின்போது நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் இன்று நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தனர்.
இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில்,
பாராளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்க முடிவெடுத்த பின் நேற்றிரவு முதல் எங்களின் மின்னஞ்சல் வசதிகள் காலாவதியாவிட்டதாகச் சொல்லி முடக்குவது தான் பாஜக-வின் ஜனநாயக மரபு.
இந்தச் செயலுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு அவசர பிரச்சனையாக விவாதிக்க வேண்டுமென இன்று ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு கைகளில் எழுதி நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
- ஜவாஹிருல்லா நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை விமர்சனம் செய்து பேசினார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்து பேசியதாகக் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கொந்தளித்து பேசினார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.
அப்போது சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை விமர்சனம் செய்து பேசினார்.
அதை தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்து பேசியதாகக் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கொந்தளித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரிய தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் வெளிநடப்பு செய்தனர்.
- ஜூலை 3-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.
சென்னை:
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 3-ந்தேதி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஜூலை 3-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் என்பது பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சமூக நீதிக்கு எதிரான தேர்வு முறை. நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.
நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது.
- ஜூலை 7-ந்தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இந்த குழுவிடம் கூறலாம்.
புதுடெல்லி:
மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்திலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது.
இந்தநிலையில் மாணவர்களிடமிருந்து புகார்களை பெற மத்திய அரசு உயர்நிலைக்குழு ஒன்று அமைத்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் கூறியிருப்பதாவது,
இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 7-ந்தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இந்த குழுவிடம் கூறலாம்.
நீட் தேர்வு தொடர்பான புகார்கள் மட்டுமின்றி, பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை தெரிவிப்பதற்கான https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ என்று இணையதள முகவரியையும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- 10 மாணவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
- நீட் தேர்வு முறைகேடு பற்றி பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளன.
புதுடெல்லி:
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நீட் வினாத்தாளை கசிய விட்டு மோசடி செய்ததாக பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு பள்ளி முதல்வர் நீட் வினாத்தாள் விற்பனையில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிய வந்தது. அவரை சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே சி.பி.ஐ. நடத்திய முதல் கட்ட விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சிலருக்கும் நீட் தேர்வு முறைகேட்டில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 10 மாணவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
நேற்று அதிரடியாக அந்த 10 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 10 மாணவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு முறைகேடு பற்றி பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளன. நாளை மறுநாள் பாராளுமன்றம் மீண்டும் தொடங்கியதும் நீட் விவகாரத்தை விவாதத்துக்கு எடுக்க வலியுறுத்தி பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
2-ந்தேதி பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச உள்ள நிலையில் நீட் விவகாரம் அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஓரிரு நாட்களில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
- நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.
நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.
எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
- நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம்.
- சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.
நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.
எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
இதனையடுத்து தலைமை நீதிபதி சந்திரசூட் மத்திய அரசை நோக்கி பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்,
கசிந்த நீட் வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி?, வினாத்தாள் லாக்கருக்கு எப்போது அனுப்பப்பட்டது?, லாக்கர்களில் இருந்து எப்போது அவை எடுக்கப்பட்டன?, நாடு முழுவதும் எத்தனை மையங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டன?, நீட் மறுதேர்வு கோர முகாந்திரம் என்ன?, 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? அதில் முழு மதிப்பெண்கள் பெற்ற 6 தேர்வர்களும் அடக்கமா?
நீட் தேர்வுத்தாள் கசிவு நடைபெறவில்லை என்று தேசிய தேர்வு முகமை நிலைப்பாடாக கொண்டாலும் 2 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டால் மொத்த தேர்வும் ரத்து செய்யப்படுவதில்லை. ஆனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது. நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம். எந்த கட்டத்தில் நீட் வினாத்தாள் கசிந்தது?, கசிவுக்கு காரணமானவர்கள் மீதும், பலனடைந்தவர்கள் மீதும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
டெலிகிராம், வாட்சப் போன்ற சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது. ஒரு இடம் மட்டும் இல்லாமல் பல இடங்களில் பெருமளவில் நீட் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது.
வினாத்தாள் கசிவின் தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும். எத்தனை மாணவர்களின் தேர்வு முடிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்ட மாணவர்களின் இருப்பிடங்கள் எங்கே உள்ளது.
இறுதியாக நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம் என்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான பதிலை மத்திய அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
- பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.
சென்னை:
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, போனஸ் மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சையானது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. பீகார், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தியதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளியின் முதல்வர், துணை முதல்வரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கடந்த 8-ந்தேதி நடந்த விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் முழுமை யாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி. தொழில்நுட்ப மதிப்பீடு, மதிப்பெண்கள் வினியோகம், நகரம் மற்றும் மையங்கள் வாரியாக ரேங்க் வினியோகம் போன்றவற் றின் தரவுகளை ஆய்வு மேற்கொண்டது.
ஐ.ஐ.டி. சென்னை வழங்கிய அறிக்கையின்படி எந்த ஒரு பெரிய அளவிலான முறைகேடும் நடக்கவில்லை. எந்த அசாதாரணமும் இல்லை. மேலும் மோசடி காரணமாக பெரும்பாலான முறைகேடுகள், அதிக மதிப்பெண் பற்றிய எந்த ஆதாரமும் இல்லை.
மதிப்பெண்களில் ஒட்டுமொத்த அதிகரிப்பு உள்ளது. குறிப்பாக 550 முதல் 720 வரை இந்த அதிகரிப்பு நகரங்கள் மற்றும் மையங்கள் முழுவதும் காணப்படுகிறது.
பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.
கூடுதலாக அதிக மதிப் பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் பல நகரங்கள், பல மையங்களில் பரவி உள்ளனர். இது முறை கேடுக்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்பதை குறிக்கிறது.
சென்னை ஐ.ஐ.டியின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
- நீட் வினாத்தாள் கசிவு குறித்து மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது.
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, போனஸ் மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சையானது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. பீகார், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தியதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளியின் முதல்வர், துணை முதல்வரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கடந்த 8-ந்தேதி நடந்த விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், "நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் முழுமையாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ஐ.ஐ.டி. சென்னை வழங்கிய அறிக்கையின்படி நீட் தேர்வில் எந்த ஒரு பெரிய அளவிலான முறைகேடும் நடக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்ய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "நீட் வினாத்தாள் கசிவு குறித்து மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது. கசிந்த நீட் வினாத்தாள் சிலருக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. பலருக்கு கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூட வினாத்தாள் கசிவு பரவலான அளவில் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது. ஆகவே மிகச்சிறிய அளவில் தான் நீட் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.