என் மலர்
நீங்கள் தேடியது "அரசியல் சாசனம்"
- மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களை அல்ல என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
- அரசியல மைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறியவர்கள்.
புதுடெல்லி:
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டி விமர்சித்தார். மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களை அல்ல என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்தார். "50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்து விட்டீர்கள்.
நாங்கள் மக்களுக்காக பாராளுமன்றத்திலும், தெருக்களிலும் அனைவருக்கும் முன்பாக குரல் எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்"என்றார்.
இந்த நிலையில் அரசியலமைப்பு சட்டத்தை அடியோடு தகர்த்து நாட்டை சிறைக்குள் அடைத்த நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்து இன்றுடன் 50 ஆண்டுகளாகும் நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் இது தொடர்பாக கூறியதாவது:-
அவசர நிலையை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்றாகும். அவசர நிலையில் இருட்டு நாட்கள் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் எப்படி எதிர்த்தது என்பதை நினைவூட்டுகிறது.
ஆட்சியை பிடிக்க அன்றைய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு ஜனநாயக கொள்கையையும் புறக்கணித்து தேசத்தை சிறைக்குள் அடைத்தது. காங்கிரசுக்கு உடன்படாத அனைவரும் சித்ரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். நலிந்த பிரிவினரை குறி வைத்து சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
எமர்ஜென்சியை கொண்டு வந்தவர்கள் நமது அரசியலமைப்பு மீது அன்பை வெளிப்படுத்த எந்தவித உரிமையும் இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் 356-வது சட்டப் பிரிவை திணித்தவர்கள். பத்திரிகை சுதந்திரத்தை அழிக்கும் மசோதாக்களை கொண்டு வந்தவர்கள்.
கூட்டாட்சி முறையை அழித்தவர்கள். அரசியல மைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறியவர்கள். அவர்களின் செயல்களை இந்திய மக்கள் பார்த்ததால்தான் மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார்.
- ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
- மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது என்றார் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்.
ஐதராபாத்:
பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.எல்.சி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினர்.
இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாரதி ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறோம்.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். சமீபத்திய கட்சித் தாவல்களின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களான அனைவரையும் சந்திப்போம்.
ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதுபோல் ஆஸ்கார் லெவலில் செயல்படுகிறார்.
பா.ஜ.க மற்றும் காங்கிரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் கட்சி மாறுதலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- என்.சி.இ.ஆர்.டி.யின் 3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.
- அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா?
சென்னை:
மதுரை சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்,
வெறும் பக்கம் அல்ல...
இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதம்...
என்.சி.இ.ஆர்.டி.யின்
3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.
அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் என்.சி.இ.ஆர்.டி.யின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று தெரிவித்துள்ளார்.
வெறும் பக்கம் அல்ல...இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதம்...என்.சி.இ.ஆர்.டி யின்3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் என். சி. இ. ஆர். டி யின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை… pic.twitter.com/M1w9vQVoxX
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 6, 2024
- நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றமாட்டோம். வேறு யாரையும் மாற்ற விடமாட்டோம்.
- அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.
சுயநலனுக்காக இந்திய அரசியலமைப்பை சிதைத்த காங்கிரஸ், தற்போது பா.ஜ.க. மீது குற்றம்சாட்டுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடோல் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சரன்சிங் தாகூரை ஆதரித்து மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
பா.ஜ.க. கட்சி அரசியலமைப்பு மாற்றும் என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றமாட்டோம். வேறு யாரையும் மாற்ற விடமாட்டோம். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.
அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களான பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், சமூகநீதி, மதசார்பின்மை போன்ற அடிப்படை உரிமைகளை யாராலும் மாற்ற முடியாது. எமர்ஜென்சியின்போது இந்திரா காந்தி அரசியலைமைப்பை சிதைத்தார். நாட்டின் வரலாற்றில் அரசியலமைப்பை சிதைத்த பாவத்தை செய்த காங்கிரஸ்தான் இப்போது நம் (பா.ஜ.க.) மீது குற்றம் சுமத்துகிறது.
நீங்கள் ராம ராஜ்ஜியத்தை நிறுவ விரும்பினால் அது தலைவர்கள் கையில் இல்லை. மக்கள் கையில் உள்ளது. சாதி, இனம், மதம், மொழி அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது. மனிதன் ஜாதியால் பெரியவன் அல்ல அவனுடைய குணங்களால் மட்டுமே பெரியவன். தீண்டாமை, சாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும்.
நீங்கள் உணவு மற்றும் ஆரோக்கியத்திற்காக சிறந்த நபரிடம் அவர்களின் சாதியைப் பார்க்காமல் செல்கிறீர்கள். நேர்மையான, ஊழலற்ற தலைவர்களையும், கட்சியையும் தேர்ந்தெடுக்கும் வரை உங்கள் எதிர்காலம் மாறாது
இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.
- வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் மக்களவையில் அரசியல்சாசனம் மீதான விவாதம் நடைபெறும்.
- மாநிலங்களவையில் அடுத்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும்.
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. டிசம்பர் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
அதானி உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் அவை நடவடிக்கை முழுமையாக செயல்படாமல் பாதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்கள் அவைகள் ஒத்திவைக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் அரசியல்சாசனம் (Constitution) மீதான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளும், என்.டி.ஏ. அரசும் சம்மதித்துள்ளது. அதன்படி வருகிற 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி (வெள்ளி மற்றும் சனி) ஆகிய இரண்டு நாட்கள் மக்களவையில் அரசியல்சாசனம் மீதான விவாதம் நடைபெறும். சனிக்கிழமை பிரதமர் மோடி விவாத்தின் மீது பதில் அளிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவையில் 16 மற்றும் 17 (திங்கள் மற்றும் செவ்வாய்) ஆகிய இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி பதில் அளிக்க இருக்கிறார்.
மக்களவையில் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை விவாதத்தை தொடங்குவார். மாநிலங்களவையில் திங்கட்கிழமை அமித் ஷா விவாதத்தை தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.
- அரசியல் சாசனத்திற்கு பதிலாக மனு ஸ்மிருதி நாடு வழி நடத்தப்பட வேண்டு என கூறியவர் சாவர்க்கர்.
- நாட்டை நீங்கள் விரும்பியபடி வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
மக்களவையில் இன்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசியல் சாசனம் உலகிலேயே மிக நீண்ட காலம் எழுதப்பட்ட அரசியல் சாசனம் என்று மக்கள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட சிந்தனைகளையும், குறிப்பிட்ட சித்தாந்தங்களையும் உள்ளடக்கியது தான் நமது அரசியல் சாசனம்.
அரசியல் சாசனத்தை திறந்தால் அதில் அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் குரல்களையும், சிந்தனைகளையும் கேட்க முடியும்.
இந்த சிந்தனை எல்லாம் நமது நாட்டின் ஆழமான பாரம்பரியத்தில் இருந்து வந்தது.
அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் வெவ்வேறு வடிவங்களின் ஒரே சிந்தனை தான்.
அரசியல் சாசனத்திற்கு பதிலாக மனு ஸ்மிருதி நாடு வழி நடத்தப்பட வேண்டு என கூறியவர் சாவர்க்கர்.
உங்கள் தலைவரின் வார்த்தைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக நீங்கள் பேசும்போது உங்கள் தலைவரான சாவர்க்கரை அவமதிக்கிறீர்கள்.
என்னுடைய முந்தைய உரையில் மகாபாரத குருஷேத்திர போர்களை பற்றி குறிப்பிட்டேன். இந்தியாவில் இன்று அத்தகைய போர் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு பற்றி கேட்டால் பெரியார் என்று சொல்லுவோம்.
நாட்டை நீங்கள் விரும்பியபடி வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு 4 வயது குழந்தை ஒருவன் அதிகாலையில் எழுந்து தவம் செய்து கொண்டிருந்தான். நான் பல ஆண்டுகளாக கடுமையாக தவம் செய்கிறேன். என்னை குருவாக்குங்கள் என்று அந்த சிறுவன் துரோணாச்சார்யாவிடம் கூறினார். ஆனால், நீ அந்த சமூகத்தை சேர்ந்தவர் அல்ல என்று துரோணாச்சாரியார் அந்த சிறுவனை நிராகரித்தார்.
சிறுவன் மீண்டும் காட்டுக்குச் சென்று தன்னுடைய தவத்தை தொடர்ந்தான்.
பாண்டவர்களும், துரோணாச்சாரியாரும் காட்டை விட்டு சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய் அவர்களை பார்த்து குறைத்தது.
துரோணாச்சாரியார் எப்படி ஏகலைவனின் விரலை வெட்டினாரோ, அதேபோல நீங்களும் இந்த தேசத்தின் விரலை வெட்டிவிட்டீர்கள்.
அதானிக்கு தாராவியை தாரைவார்த்து விட்டீர்கள். தாராவி பகுதியில் உள்ள சிறு வணிகர்களின் விரல்களை வெட்டி விட்டீர்கள்.
நாட்டில் உள்ள விமானங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு நிறுவனங்களை அதானிக்கு கொடுத்து விட்டீர்கள்.
அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களின் விரல்களை துண்டித்து விட்டீர்கள்.
நாட்டில் 70 முறை வினாத்தாள் கசிவுகள் நடைபெற்றுள்ளது. வினாத்தாள் கசிவின் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களின் விரல்களை துண்டித்துவிட்டீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 75 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, அரிதான நிகழ்வு.
- காலங்களை கடந்து, இந்திய அரசியல் சாசனத்தின் வலிமை நிற்கிறது.
மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அரசியல் சாசனத்தின் 75வது ஆண்டு பயணம் என்ற திருவிழாவை கொண்டாடி வருகிறோம்.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்தது.
அதனை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணமாக இருக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
75 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, அரிதான நிகழ்வு. இந்திய சாசனத்தை வடிவமைத்தவர்களுக்கு நன்றி.
அரசியல் சாசனத்தை வடிவமைத்ததில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றி உள்ளனர். வெவ்வேறு பின்னணி கொண்ட 15 பெண்கள் அரசியல் நிர்ணய சபையில் இருந்தனர்.
ஜனநாயகத்தின் தாய் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் கொண்டாட வேண்டிய நேரம் இது.
காலங்களை கடந்து, இந்திய அரசியல் சாசனத்தின் வலிமை நிற்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளும் விடுதலைக்கு பின் பெண்களுக்கு வாக்குரிமை தர பல ஆண்டுகளை எடுத்துக் கொண்டனர். இந்தியாவில் தான் சுதந்திரம் பெற்ற உடனேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
இன்று மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களின் மையமாக பெண்கள் உள்ளனர்.
இன்று நாட்டின் குடியரசுத் தலைவரே பழங்குடியின வகுப்பை சேர்ந்த ஒரு பெண் தான். கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.
நமது நாடு விரைவில் உலகின் 3வது மிகப்பெரிய சக்தி கொண்ட நாடாக உருவெடுக்கும். இது 140 கோடி இந்திய மக்களின் சங்கல்பம்.
நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதில் நமது அரசியல் சாசனம் தான் ஆதாரமாக உள்ளது. பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தும் இந்தியா ஒற்றுமையாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பு 60 முறை மாற்றியுள்ளது.
- எமர்ஜென்சி காலத்தில் மக்களின் உரிமைகளை பிறத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.
மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு, அவரச சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சியை போல அழித்தது வேறு யாரும் அல்ல.
1976ல் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியபோது அந்த தீர்ப்பை மாற்றியவர் இந்திரா காந்தி. காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பு 60 முறை மாற்றியுள்ளது.
எமர்ஜென்சி காலத்தில் மக்களின் உரிமைகளை பிறத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. நீதிமன்றம் இந்திரா காந்தியின் எம்பி பதவியை பறித்ததால், கோபத்தில் நாட்டில் எமர்ஜென்சியை கொண்டு வந்தார்.
தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். நேரு விதைத்த விஷ விதைக்கு, தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் இந்திரா காந்தி. அரசியல் சாசனத்தை காரணம் காட்சி சிலர் தங்களது தோல்வியை மறைக்க பார்க்கின்றனர்.
தனது பதவி பறிப்பதற்கு காரணமானவர்களை எமர்ஜென்சி மூலமாக பழி வாங்கினார் இந்திரா காந்தி.
தனது வெற்றி செல்லாது என அறிவித்த நீதிபதி கண்ணாவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வர இந்திரா காந்தி அனுமதிக்கவில்லை.
அமைச்சரவை முடிவெடுத்த ஒரு அரசியல் மசோதாவை, ஒரு சாதாரண எம்.பி ஊடகத்தினர் முன்னிலையில் கிழித்தெறிந்தார்.
2015ம் ஆணடு எங்களுடைய ஆட்சி வந்த பிறகு தான் அம்பேத்கர் சர்வதேச மையம் கொண்டு வரப்பட்டது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கூட காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போதுதான் வழங்கப்பட்டது.
நேரு முதல் ராஜீவ் காந்தி வரை இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தவர்கள். இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மிக நீண்ட கடிதங்களை எழுதியவர் முன்னாள் பிரதமர் நேரு.
நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியவர்கள் காங்கிரஸ் கட்சியினர். வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின, பழங்குடியின மக்களை காங்கிரஸ் வஞ்சித்தது.
மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் மிக நீண்ட விவாகதங்களை நடத்தினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் உரை இடையே, காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
- கர்நாடகா என்றால் பசவண்ணா என்று சொல்லுவோம்.
- மகாராஷ்டிரா என்றால் அம்பேத்கர், பூலே என்று சொல்லுவோம்.
மக்களவையில் இன்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு பற்றி கேட்டால் நாங்கள் பெரியார் என்று சொல்லுவோம். கர்நாடகா என்றால் பசவண்ணா என்று சொல்லுவோம். மகாராஷ்டிரா என்றால் அம்பேத்கர், பூலே என்று சொல்லுவோம். குஜராத் என்றால் காந்தி என்று சொல்லுவோம். சமூக மாற்றங்களுக்கு வித்திட்டவர்களே தங்களுக்கு முன்மாதிரி" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், துரோணாச்சாரியார் எப்படி ஏகலைவனின் விரலை வெட்டினாரோ, அதேபோல நீங்களும் இந்த தேசத்தின் விரலை வெட்டிவிட்டீர்கள்.
அதானிக்கு தாராவியை தாரைவார்த்து விட்டீர்கள். தாராவி பகுதியில் உள்ள சிறு வணிகர்களின் விரல்களை வெட்டி விட்டீர்கள். அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களின் விரல்களை துண்டித்து விட்டீர்கள்.
நாட்டில் 70 முறை வினாத்தாள் கசிவுகள் நடைபெற்றுள்ளது. வினாத்தாள் கசிவின் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களின் விரல்களை துண்டித்துவிட்டீர்கள்" என்று தெரிவித்தார்.