என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய அணி"
- லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
- இவர் ஏற்கனவே டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மென். செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரான இவர் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவரது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலக பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.
லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நடந்தது.
இந்நிலையில், சிறந்த கிரிக்கெட் அணி எது இந்தியாவா, பாகிஸ்தானா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி பதில் கூறியதாவது:
விளையாட்டுக்கு உலகம் முழுவதையும் உற்சாகப்படுத்தும் சக்தி இருப்பதாக நினைக்கிறேன்.
விளையாட்டு உணர்வு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கிறது. மனித பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என உண்மையிலேயே நம்புகிறேன். அவை வெறும் விளையாட்டுகள் அல்ல, அவை மக்களை ஆழமான மட்டத்தில் இணைக்கின்றன.
இப்போது யார் சிறந்தவர் அல்லது இல்லாதவர் என்ற கேள்விக்கு வருகிறேன். விளையாட்டின் நுட்பங்களைப் பொறுத்தவரை நான் ஒரு நிபுணர் அல்ல. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே அதை மதிப்பிட முடியும்.
எந்த அணி சிறந்தது, எந்த வீரர்கள் சிறந்தவர்கள் என்பதை அவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் சில நேரங்களில், முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன.
சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் முடிவு எந்த அணி சிறந்தது என்பதை வெளிப்படுத்தியது என தெரிவித்தார்.
- டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று நாடு திரும்பியது.
- உலகக் கோப்பையுடன் டெல்லி வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படாசில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர். உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, வெஸ்ட் இண்டீசில் ஏற்பட்ட புயல் மழையால் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு இயக்க திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்துசெய்யப்பட்டது.
அந்த பயணிகள் விமானம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அழைத்துச் செல்ல பார்படாசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மாற்று விமானம் எதுவும் வழங்கப்படவில்லை என பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை டிஜிசிஏ கோரியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- இந்திய அணி ஏற்கனவே வலுவான அணியாக உள்ளது.
- அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது கூடுதல் பலனளிக்கும் என்றார்.
சிட்னி:
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.
அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்.
எல்லா போட்டிகளையும் அங்கு விளையாடுவதன் மூலம் அவர்கள் வெளிப்படையான பலனைப் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் தோல்வியை தொடங்கியது.
- ரோகித் 11 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 14 முறை டாஸில் தோற்று புதிய சாதனை படைத்துள்ளது.
2023-ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டி முதல் இன்று வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தொற்றுள்ளது. இதில் ரோகித் 11 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக அதிக முறை டாசில் தோற்ற கேப்டன்கள்:
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரையன் லாரா - 12 (அக். 1998 - மே 1999)
நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் - 11 (மார்ச் 2011 - ஆகஸ்ட் 2013)
இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா - 11 (நவம்பர் 2023 - மார்ச் 2025)
- சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்ற இந்தியாவின் வெற்றியை நாடுமுழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேசியக் கொடியை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
- கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெற்றியை உறுதி செய்ததும் ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதும் வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். கோப்பையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து வென்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
- 76 ரன் எடுத்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.
கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார். கில் 31 ரன்னும், ஷ்ரேயாஸ் அய்யர் 48 ரன்னும், அக்சர் பட்டேல் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 34 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவினார்.
இறுதியில், இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வு செய்யப்பட்டனர்.
- கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
- இந்திய அணி சாம்பியன் டிராபி கோப்பையை தட்டிச்சென்றது.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார். ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:
எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இது எங்களுடைய சொந்த ஆடுகளம் இல்லை. ஆனால், கூடியிருக்கும் கூட்டம் இதனை எங்களுடைய சொந்த ஆடுகளம் போன்று மாற்றியிருக்கிறது.
எங்களுடைய ஆட்டம் எப்படி இருக்க போகிறது என பார்க்க திரளாக கூடிய மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளித்து இருக்கும்.
தொடர் முழுவதும் உண்மையில் சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடினோம். நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள், எதிரணியின் பலம் என்ன என அறிந்து செயல்பட்டனர்.
நீங்கள் ஏதேனும் வித்தியாசம் காட்ட வேண்டும் என முயற்சிக்கும்போது அணியின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவை. அணியினர் என்னுடன் இருந்தனர். நான் மனதளவில் தெளிவாக இருந்தேன் என்பதே முக்கியம் வாய்ந்த விசயம்.
எதிர்கால திட்டங்கள் இல்லை. என்ன நடந்தாலும் அது தொடரும். நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.
- இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது.
- சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 254 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்ற இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேசியக் கொடியை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வீரர்களின் உருவப்படங்களுக்க்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது.
- இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.
புதுடெல்லி:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றை படைத்ததற்காக, வீரர்கள், நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் மிக உயரிய பாராட்டுகளை பெற தகுதி பெற்றவர்கள். இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.