என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபைல்போன்"

    • 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
    • ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர்.

    இப்போது கையில் உள்ள மொபைல்போன்களில் வழியாக ஆபாச இணையதளங்களில் பலரும் ஆபாச படங்களை பார்க்கின்றனர். 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.

    இந்நிலையில், 18 வயதிற்கும் குறைவான இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்துநிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாகவுள்ளது.

    ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர் என்று தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பார்ன் பாஸ்போர்ட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.

    இதன்படி ஸ்பெயின் நாட்டில் வசிப்பவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த பார்ன் பாஸ்போர்ட்ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும். அந்த ஆப் அவர்களது வயதை உறுதிப்படுத்தும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு அவர்களது வயது சரிபார்க்கப்படும். விரைவில் இந்த ஆப் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயனாளர்களின் வயது சரிபார்க்கப்பட்ட பின்பு, அவர்களுக்கு மாதந்தோறும் 30 கிரெடிட்களை வழங்கும். ஒவ்வொரு கிரெடிட்டும் ஆபாச இணையதளங்களை அணுகுவதற்கு QR குறியீட்டை உருவாக்கும்.

    • இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    • அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு, மாற்றுத்திறனாளி சிறுமியை இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு ஒரு மொபைல்போனை அவர் பரிசாக வழங்கினார்.

    இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.

    • கூடுதல் செயலாளர்கள் ரூ.30,000 வரை மொபைல் போன்கள் வாங்கலாம்.
    • மாதத்திற்கு ரூ.3,000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

    ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மொத்தம் 30 புதிய முன்மொழிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அதில், ஜார்கண்ட் அரசின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ரூ.60,000 வரையிலான மொபைல் போன்களை வாங்கலாம் என்றும் மாதத்திற்கு ரூ.3,000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற முன்மொழிவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    சிறப்பு செயலாளர் நிலை அதிகாரிகள் ரூ.45,000 வரை மொபைல் போன்களை வாங்கலாம் மற்றும் மாதம் ரூ 2,000 வரை ரீசார்ஜ் செய்யலாம் என்றும் கூடுதல் செயலாளர்கள், கூடுதல் இயக்குநர்கள் ரூ.30,000 வரை மொபைல் போன்கள் மற்றும் 750 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்யலாம் என்று அமைச்சரவை செயலாளர் வந்தனா தாடெல் கூறினார்.

    • பூ விற்கும் தாய் ஒருவர் தனது மகனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    கோவிலுக்கு வெளியே பூ விற்கும் தாய் ஒருவர் தனது மகன் அடம்பிடித்ததால் அவருக்கு ஐபோன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    மொபைல்கடையில் ஐபோன் வாங்கிய மகன் மற்றும் அவரது தாயிடம் பேட்டி எடுத்துள்ளனர். அந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில் பேசிய அவரது அம்மா, "நான் ஒரு கோவிலுக்கு வெளியே பூ விற்கிறேன். என் மகன் தனக்கு ஐபோன் வேண்டும் என அடம்பிடித்து 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. மகன் சாப்பிடாமல் இருந்ததால் அவனுக்கு நான் ஐபோன் வாங்குவதற்கு பணம் கொடுத்தேன். அந்த பணத்தை சம்பாதித்து தனக்கு திருப்பி தருமாறு என் மகனிடம் நான் கூறியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த மகனின் செயலை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • அமரன், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
    • அமரன் நாளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ளது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

    ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

    இதைதொடர்ந்து, அமரன் நாளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ளது.

    இந்நிலையில், அமரன் படத்தில் தனது செல்போன் எண்ணை பயன்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதுதொடர்பான மனுவில், " சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த மனுவில், மொபைல் எண் வரும் காட்சியை நீக்கக் கோரி ஏற்கனவே தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தவறை திருத்தவில்லை.

    அதனால், படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும், தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    • சாம்சங் கேலக்ஸி S25, S25+ மற்றும் S25 Ultra ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • சாம்சங் கேலக்ஸி S25ன் ஆரம்ப விலை ரூ. 80.999 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy S25 Series மொபைல் போன்கள் நேற்று வெளியாகின.

    சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கொ மாகாணத்தில் நடைபெற்றது.

    ஜெமினி ஏஐ வசதியுடன் சாம்சங் கேலக்ஸி S25, S25+ மற்றும் S25 Ultra ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. S25ன் ஆரம்ப விலை ரூ. 80.999 ஆகவும், S25+ன் ஆரம்ப விலை ரூ. 99,999 ஆகவும், S25 Ultraன் ஆரம்ப விலை ரூ. 1.29,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி S24 இந்த ஆரம்ப விலையை விட சாம்சங் கேலக்ஸி S25 இன் ஆரம்ப விலை வெறும் 1000 ரூபாய் மட்டும் தான் அதிகமாகும். ஆனால் S24 இல் 8GB ரேம் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், S25 இல் 12GB ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இன்று முதல் சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸ் மொபைல் போன்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். பிப்ரவரி 7 முதல் மொபைல் போன்கள் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

    ×