என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜானதிபதி"

    • மறுசீரமைப்பு சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது.
    • எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே எஞ்சியுள்ளது

    ஜம்மு காஷீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து  ஜம்மு காஷ்மீர் பகுதிகளை ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக கடந்த 2019 ஆம் ஆண்டு கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பிரித்தது. இதற்காக பிரத்தேயகமாக ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது.

    இந்நிலையில் வரும் செப்டெம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது  சர்ச்சையாகியுள்ளது.

     

     

    இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக உள்ள மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரங்கள்  வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலத்தின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் நீதித்துறை, காவல்துறை, அதிகாரிகளை நியமித்தல் மற்றும் இடம்மாற்றுதல் உள்ளிட்டவற்றில் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள்ளன.

    இந்த துறைகளில் அதிகாரிகளை நியமிப்பதற்கு ஆளுநரின் ஒப்புதல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே எஞ்சியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அதிகாரிங்கள் ஜூலை 12 முதல் நடைப்முறைக்கு வந்துள்ளன.  

    • அரசைக் கலைக்கக் கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடித்தத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.
    • நாளையே கூட தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது

    டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசைக் கலைக்கக் கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடித்தத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கிலும் கலால் கொள்கை வழக்கிலும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் டெல்லி அரசின் நிர்வாக பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதாகவும் கூறி டெல்லி அரசை கலைக்க பாஜக எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் பாஜகவின் ஒரே குறிக்கோள் அரசை கவிழ்ப்பதுதான் என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார்.

    'டெல்லியில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக ஏற்கனவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது. எனவே தேர்தலில் வெல்ல காவி கட்சி செய்யும் சதிதான் இது. தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்த உடனே இந்த சதி வலையை பாஜக பின்னியுள்ளது. அரசை கவிழ்த்து அடுத்த தேர்தல் வரை ஜானதிபதி ஆட்சியை அமல்படுத்தச் செய்வதே அவர்களின் திட்டம்' என்று அதஷி விமர்சித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், நாங்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம், பாஜக சீக்கிரமே தோற்க வேண்டும் என்று நினைகிறது போலும், எனவே நாளையே கூட தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

    • ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர்
    • தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.

    ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர்.

    இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.

     

     

    இந்த சம்பங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனாதிபதி போலா டினுபு, வரவிருக்கும் அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.

    இந்த துயரங்களுக்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, அதிக உணவு விலைகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் ஓபி குற்றம் சாட்டியுள்ளார். 

    ×