என் மலர்
நீங்கள் தேடியது "தேவேந்திர பட்நாவிஸ்"
- இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்.
- மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்கசீப்பின் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதனால் அவுரங்கசீப் கல்லைறை இருக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை காண்பித்துதான் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலவைர் ஹர்ஷ்வர்தன் சப்கால், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை அவுரங்கசீப் உடன் ஒப்பிட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது "அவுரங்கசீப் கொடுங்கோல் ஆட்சி செய்தார். இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார். ஆனால், சர்பாஞ்ச் சந்தோஷ் தேஷ்முக் கொலை போன்ற வழக்குகளில் எதுவுமே செய்யவில்லை" எனக் கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்துள்ளது.
பாஜக எம்.பி. பகவத் கராத் இது தொடர்பாக கூறுகையில் "இது மிகவும் தவறானது, கண்டிக்கத்தக்கது. பட்நாவிஸ் மாநிலத்திற்கான நல்ல விசயங்களை செய்து வருகிறார். அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. விக்ஷித் மகாராஷ்டிரா நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிஸ் தலைவரின் ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது.
தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் ஒப்பீடு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.
- பட்னாவிசுக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல் வெளியானது.
- ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.
முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்று கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்று கொண்டனர்.
இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உங்களுக்கு பிரச்சனை கொடுத்தால், எங்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமாறு துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் நானா படோல் அழைப்பு விடுத்துள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நானா படோல், "ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் உங்களை தொந்தரவு செய்தால், நாங்கள் உங்களுடன் நின்று ஒன்றாக ஒரு அரசாங்கத்தை அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
நானா படோலின் கருத்துக்கு பதில் கூற மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் மறுத்துவிட்டார்.
- அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது.
- சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.
கேம்லின் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் உடல்நல குறைவால் நேற்று இரவு காலமானார்.
சுபாஷ் தண்டேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர், கேம்லின் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழில் துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.
இந்த 93 ஆண்டு பழமையான கேம்லின் நிறுவனம் 1946ல் தனியார் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, 1998ல் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது.
ஸ்டேஷனரி தயாரிப்பில் கேம்லின் நிறுவனம் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேம்லின் நிறுவனம் 2011 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் நாட்டின் கோகுயோ என்னும் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. தற்போது கேம்லின் நிறுவனத்தில் சுமார் 51 சதவீத பங்குகளை ஜப்பான் நாட்டின் கோகுயோ வைத்துள்ளது.
- மகாயுதி- மகா விகாஸ் அகாடி இடையே கடும் போட்டி.
- மகாயுதியில் பா.ஜ.க., சிவசேனா, என்.சி.பி. கட்சிகள் உள்ளன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் கட்சி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மகாயுதி, மகா விகாஸ் அகாடி ஆகிய இரண்டு கூட்டணிகளிலும் அதிருப்தி தலைவர்கள் எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க இரு கூட்டணி தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன்பின் நவம்பர் முதல் வார இறுதியில் இருந்து கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாநில தேர்தலின்போதும் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய உத்தரவாத கார்டு (guarantee card) ரிலீஸ் செய்து வருகிறார். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கான உத்தரவாத கார்டையும் ரிலீஸ் செய்வார் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ், ராகுல் காந்தியின் உத்தரவாத கார்டு இங்கு செல்லுபடியாகாது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பட்நாவிஸ் கூறியதாவது:-
ராகுல் காந்தியின் உத்தரவாத கார்டு ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், சத்தீஸ்கரில் வெற்றி பெறவும் உதவவில்லை. தெலுங்கானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உத்தரவாத கார்டு ஏன் அமல்படுத்தப்படவில்லை என்பதை ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும். அவருடைய உத்தரவாத கார்டு இங்கேயும் தோல்வியடையும்.
ஏராளமான அதிருப்தி கட்சி தலைவர்கள் எதிர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாங்கள் ஒன்றாக அமர்ந்து அந்த பிரச்சனைகளை பேசி சமூகமாக முடித்துள்ளோம். நவம்பர் 4-ந்தேதி அதிப்தி தலைவர்கள் வேட்புமனுவை திரும்பப் பெறுவதை நீங்கள் பார்க்கலாம்.
நவம்பர் 5-ந்தேதியில் இருந்து முழு வீச்சில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வோம்" என்றார்.
- சிவசேனா தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
- அதிக இடங்களை பிடித்ததால் முதல்வர் பதவியை பெற வேண்டும் என பா.ஜ.க. தலைவர் பிடிவாதம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 288 தொகுதிகளில் சுமார் 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முன்னதாக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். பா.ஜ.க.-வின் தேவேந்திர பட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக இருந்தனர்.
தற்போது பா.ஜ.க. தனித்து 130 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. இதனால் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வராக வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதுதான் வெற்றிக்கு காரணம். இதனால் அவர்தான் முதல்வரான நீடிக்க வேண்டும் என சிவசேனா காட்சி தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் பீகார் மாடலில் (பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையிலும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்) ஆட்சியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் முதல்வர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் பட்நாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன்பின் பா.ஜ.க. தேர்வு செய்யும் முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அதேபோல் பா.ஜ.க. யாரை முதல்வராக அறிவித்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று அல்லது நாளை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
5-ந்தேதி பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் பதவி ஏற்க இருக்கிறார்கள். தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.
- மந்திரி சபையில் 43 பேர் இடம் பெற வாய்ப்பு.
- பா.ஜ.க. 22 மந்திரிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சி கூட்டணிகளான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.-வை சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகியோர் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளனர்.
பதவி ஏற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இலாகாக்களும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.
முதல்வரான பட்நாவிஸிடம் நிதியமைச்சர் இலாகா இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் அஜித் பவார் நிதி இலாகாவை குறிவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.எல்.சி.-யுமான மிட்கரி "அஜித் பவாருக்கு மட்டுமே நிதித்துறையை கையாளும் திறன் உள்ளது. 10 முறை பட்ஜெட் தாக்குதல் செய்துள்ள அவருக்கு, நிதியை ஒவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பது தெரியும்.
அஜித் பவாரை நிதியமைச்சராக ஆக்கவில்லை என்றால், இந்த அரசுக்கு (மகாயுதி) பயனுள்ளதாக இருக்காது" என்றார்.
14-ந்தேதி (நாளைமறுநாள்) கேபினட் விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக முதல்வருடன் சேர்த்து 43 மந்திரிகள் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும், பா.ஜ.க. 21 முதல் 22 இடங்களை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர்கள் 24/7 என்ற அடிப்படையில் பணியாற்றுகிறோம்.
- நான் மதியம் முதல் இரவு வரை பணியாற்றுவேன்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பதில் அளித்தார்.
அப்போது பட்நாவிஸ் கூறியதாவது:-
நீங்கள் (அஜித் பவார்) நிரந்தர துணை முதல்வர் என அழைக்கப்படுகிறீர்கள். ஆனால், ஒருநாள் நீங்கள் முதல்வராவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.
மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர்கள் 24/7 என்ற அடிப்படையில் பணியாற்றுகிறோம். அஜித் பவார் காலையிலேயே எழுந்துவிடுவார். அப்போதில் இருந்து மதியம் வரை பணியாற்றுவார். நான் மதியம் முதல் இரவு வரை பணியாற்றுவேன். அதன்பின் யார் பணியாற்றுவார் என்பது உங்களுக்கு தெரியும். ஏக்நாத் ஷிண்டே நள்ளிரவு தாண்டியம் பணியாற்றுவார்" என்றார்.
அஜித் பவார் ஆறு முறை மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தனஞ்சே முண்டேயின் ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார்.
- குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உள்ள சந்தோஷ் தேஷ்முக் மீது சிறுநீர் கழிப்பதும் பதிவாகியுள்ளது.
கொலை
மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள மசோஜோக் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் (சார்பாஞ்ச்) ஆக இருந்தவர் சந்தோஷ் தேஷ்முக். இவர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி ஆறு பேரால் காரில் கடத்தப்பட்டு, அன்று இரவே கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த படுகொலையில் தொடர்புடைய உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தனஞ்சே முண்டேயின் ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார்.

தனஞ்சே முண்டே
பின்னணி
மசோஜோக் கிரமத்தைச் சுற்றி அமைந்த காற்றாலை கம்பெனிகளை மிரட்டி வால்மிக் கராட், கோடிக்கணக்கில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் சந்தோஷ் தேஷ்முக் எதிர்த்து வந்தார்.
இதன் பின்னணியிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. வால்மிக் கராட் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தனஞ்சே முண்டே பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வந்தன.
ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் முக்கிய தலைவராக இருப்பவர் தனஞ்சே முண்டே. எனவே அஜித் பவார் அவருக்கு ஆதரவு அளித்து வந்தார். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பொறுமை காத்தார்.
குற்றப்பத்திரிகை
ஆனால் சந்தோஷ் தேஷ்முக் கொலை தொடர்பான 15 வீடியோக்கள் மற்றும் 8 புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. போலீஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட வீடியோ ஒன்றில், அரை நிர்வாணமாக இருக்கும் சந்தோஷ் தேஷ்முக்கை குற்றம்சாட்டப்பட்டவர்கள் கியாஸ் குழாய், மரக்கட்டைகள், கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குவது பதிவாகியுள்ளது.
மற்றொரு வீடியோவில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உள்ள சந்தோஷ் தேஷ்முக் மீது சிறுநீர் கழிப்பதும் பதிவாகியுள்ளது. குற்றப்பத்திரிகை வெளியான நிலையில் இந்த கொலை மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனஞ்சே முண்டே பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.


பதவி விலகல்
எனவே இவ்விவகாரம் குறித்து முடிவு செய்ய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உயர் மட்ட கூட்டத்தைக் கூட்டினார். இதில் அஜித்பவார், சுனில் தட்கரே, தனஞ்சே முண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். நிலைமை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும்படி தனஞ்சே முண்டேயிடம் பட்நாவிஸ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து முண்டே தனது அமைச்சர் பதவியை இன்று (மார்ச் 04) ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பதவி விலகல் குறித்து தனஞ்சே முண்டே வெளியிட்டுள்ள அறிக்கை "நான் மிகவும் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் கல்லறை உள்ளது.
- ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்
400 வருடத்திற்கு முன் வாழ்ந்த முகலாய மன்னர் அவுரங்கசீப்பை முன்வைத்து மகாராஷ்டிரா அரசியல் அல்லோலகல்லோலப்பட்டு வருகிறது. சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கையை தழுவி சாவா என்ற பெயரில் விக்கி கௌஷல் நடிப்பில் இந்தி படம் ஒன்று வெளியானது.
அதில் வில்லனாக வரும் அவுரங்கசீப் இந்து மன்னர் சாம்பாஜிக்கு பல்வேறு சித்திரவதைகளை செய்யும் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதை சமாஜ்வாதி எம்எல்ஏ அபு அஸ்மி மறைமுகமாக பேட்டி ஒன்றில் விமர்சித்தார்.

அவர் கூறியதாவது, ஔரங்கசீப்பை நான் ஒரு கொடூரமான, சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராகக் கருதவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.
அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்று தெரிவித்தார்.

இந்த புகழ்ச்சி மகாராஷ்டிர ஆளும் பாஜக கூட்டணி இடையேயும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா இடையேயேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அபு அஸ்மி சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்தே இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்தும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்று பாஜக கூட்டணி தலைவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
நேற்று அவர் பேசுகையில், ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இதில் ஒரு சட்டத் சிக்கல் உள்ளது. அதாவது, காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ஔரங்கசீப்பின் கல்லறையை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் (ASI) ஒப்படைத்திருந்தது.
இப்போது, சட்டத்தின்படி, ASI பாதுகாப்பின் கீழ் உள்ள எந்த இடத்தையும் அகற்றுவது குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியாது. எனவே கல்லறையை அகற்றுவதானால் அதை சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.