search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலப்பட நெய்"

    • மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்று கேள்வி.
    • ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்க உத்தரவு.

    திருப்பதி திருமனை தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம் நெய் வழங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

    கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை என்றும் ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டாமா ? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலம், மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

    சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் எங்கே ? ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்க உத்தரவிட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    • சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரூ.7 லட்சம் மதிப்புடைய 5,500 கிலோ நெய்யை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

    இந்தூர்:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட கலப்பட நெய்யை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கலப்பட நெய் உற்பத்தியை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள ஒரு நிறுவனம் கலப்பட நெய்யை உற்பத்தி செய்துவருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த நிறுவனத்தில் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் பிற சமையல் எண்ணெய்களை கலந்து தரமற்ற நெய் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.7 லட்சம் மதிப்புடைய 5,500 கிலோ நெய்யை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். பின்னர் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனர்.

    • கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
    • 3 வகை நெய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருப்பதி லட்டில் கலப்பட நெய் சேர்க்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜோய்ஸ், மேன்மா, எஸ்.ஆர்.எஸ். ஆகிய நிறுவனத்தினர் நெய்யுடன் தாவர எண்ணெய், வனஸ்பதி ஆகியவை சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து இந்த 3 வகை நெய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
    • நிறுவனத்துக்கு தடை விதித்த தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்த நெய் தரம், மணம், சுவையில் குறைபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

    இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் வனஸ்பதி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு தடை விதித்த தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

    • நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் வழங்கும் நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் நிறுவனம் 8.50 லட்சம் கிலோ நெய் வழங்க ஒப்பந்தம் பெற்று இருந்தது. இதுவரை 68 ஆயிரம் கிலோ நெய் வழங்கி உள்ளது.

    அதில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றது என திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. தரமற்ற நெய்யை வினியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×