என் மலர்
நீங்கள் தேடியது "இன்ஜினீயர்"
- பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரோ [Arrow] நிறுவனத்தில் ஒரு ஊழியர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
- இது அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஷன் படேல் கவனத்துக்கு வந்துள்ளது.
இந்தியர்கள் வேலையில் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் விஸ்வாசத்தால் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் பரவி இருக்கின்றனர். வெளிநாட்டு முதலாளிகள் விரும்பிக் வேலைக்கு சேர்ப்பது இந்தியாவில் தயாரான பட்டதாரிகளையே என்ற அளவுக்கு நிலைமை இருக்கும் சூழலில் அதை எடுத்துக்காட்டும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரோ [Arrow] நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்யும் இந்திய ஊழியர் ஒருவர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இது அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஷன் படேல் கவனத்துக்கு வந்துள்ளது. இதனால் அந்த ஊழியருக்கு மெசேஜ் செய்த அவர், 'நீங்கள் வெகு நாட்களாக விடுப்பு எடுக்காமல் வேலை செய்வதாக நான் அறிந்தேன். எனவே நீங்கள் நிச்சயம் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அந்த ஊழியர், 'எனக்கு விடுப்பு வேண்டாம் சார், நமது நிறுவனத்தின் பிராடக்ட் மார்க்கெட் தரத்தினை அடைய எனது உடல் படகாக செயல்படும்' என்று கூறி சிஇஓவை பூரிக்க வைத்துள்ளார். ஊழியரின் கடமை உணர்ச்சியை எண்ணி மனம் நெகிழ்ந்த சிஇஓ, அவர்களின் இந்த உரையாடலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இந்திய இன்ஜினியர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டவர்கள் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை கமன்ட் செக்சனில் குவித்து வருகின்றனர்.

- திருமண சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது மாப்பிள்ளை கவர்மெண்ட் இன்ஜினீயர் இல்லை, தனியார் இன்ஜினீயர் என்று தெரியவந்தது.
- மணப்பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் மணப்பெண் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
இந்திய சமூகத்தில் ஆண்- பெண் மக்கள் தொகை விகிதத்தில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மை ஆண்கள் திருமண வரன் தேடும்போது உள்ளாகும் அவஸ்தையிலிருந்து புலனாகும். அப்படியே ஒரு வரன் கிடைத்தாலும் ஆயிரத்தெட்டு கண்டிஷனுக்கு ஆளாக வேண்டி உள்ளதாக மகன்களை பெற்ற பெற்றோர் நோந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் மாப்பிள்ளை மாதம் 1.2 லட்சம் சம்பளம் வாங்கினாலும் அரசு வேலையில் இல்லை என்று கூறி மாலை மாற்றும் கடைசி நொடியில் மணப்பெண் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரை சேர்ந்த இன்ஜினீயருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மாப்பிள்ளை கவர்மெண்ட் இன்ஜினீயர் என்றும் மாதம் 1.2 லட்சம் சம்பளம் என்றும் இடைத்தரகர் கூறியுள்ளார். கவர்மெண்ட் மாப்பிளை என்றதும் பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதிக்கவே திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருமண சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது மாப்பிள்ளை கவர்மெண்ட் இன்ஜினீயர் இல்லை, தனியார் இன்ஜினீயர் என்று மணப்பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது.

இதை மணப்பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் மணப்பெண் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எனவே மாலை மாற்றும்போது அவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார். இரு வீட்டாரும், கல்யாணத்துக்கு வந்தவர்களும் பெண்ணை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். மாப்பிள்ளையும் அவசரமாக நிறுவனத்தை போன் மூலம் அணுகி தனது சம்பள ரசீதை பெற்று அதை பெண்ணிடம் காண்பித்தார்.
அதில் அவர் ரூ.1.2 லட்சம் மாத சம்பளமாக அந்த தனியார் நிறுவனத்தில் வாங்குவது உறுதியானது. ஆனாலும் கவர்மண்ட் மாப்பிள்ளை கனவிலிருந்த பெண் ஒரே அடியாகத் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். இதனால் திருமண ஏற்பாட்டுக்கு ஆன செலவை இரு வீட்டாருக்கும் பகிர்ந்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டு அவரவர் அவரவர் வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினர்.
- பெங்களூருவில் பல வருடங்களாக இருந்தும் இன்னும் கன்னடம் பேச முடியவில்லையா?
- டெல்லி மேரி ஜான்[ டெல்லி எனது அன்பே] என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் ஐடி தொழில்நகரமாக கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு விளங்கி வருகிறது. கேரளா முதல் வட மாநிலங்கள் வரை பல்வேறு மாநிலங்களை சேந்த இளைஞர்கள் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாற்றி வருகின்றனர்.
பெங்களூரில் இருக்க வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் கன்னட மொழி தான் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கன்னடர்களிடையே இருந்து வருகிறது. முதல்வர் சித்தராமையா தொடங்கி ஆட்டோ டிரைவர்கள் வரை அதையே வலியறுத்தி வருகின்றனர்.
இந்த அழுத்தம் சில நேரங்களில் எல்லை மீறி செல்வதும் உண்டு. இந்நிலையில் கன்னடம் தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள், டெல்லிக்கு வாருங்கள் என Cars24 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [CEO] விக்ரம் சோப்ரா இன்ஜீனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய அவரது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "பெங்களூருவில் பல வருடங்களாக இருந்தும் இன்னும் கன்னடம் பேச முடியவில்லையா? பரவாயில்லை. ஆ ஜாவோ தில்லி (டெல்லிக்கு வா).
டெல்லி என்சிஆர் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் திரும்பி வர விரும்பினால், vikram@cars24.com என்ற தளத்தில் எனக்கு எழுதுங்கள் - டெல்லி மேரி ஜான்[ டெல்லி எனது அன்பே] என்று பதிவிட்டுள்ளார்.
வேலைக்கு ஆள் தேட விக்ரம் சோப்ரா இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளார் என்றும் ஒரு வகையில் பெங்களூரு வாசிகளை, கன்னடர்களை தவறாக சித்தரிக்கும் பதிவாகவும் இது உள்ளதாக இணைய வாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Cars24 என்பது பயன் படுத்திய கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் ஆகும்.
- 100 ஜூனியர் டெவலப்பர் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புக்காக வாக்-இன் நேர்காணல் நடந்துள்ளது.
- இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வாசல் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மக்கள் தொகையில் கணிசமான அளவு இளைஞர்களைக் கொண்டுள்ள இந்தியாவில் வேலையின்மை பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி) வேலைக்காக இளைஞர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலைக்காக ஐடி நிறுவன வாசலைக் கடந்து சாலை வரை வரிசையில் நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவை தளமாகக் கொண்ட ஒரு ஐடி நிறுவனத்திற்கு வெளியே 3,000 க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வாக்-இன் நேர்காணலுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
100 ஜூனியர் டெவலப்பர் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புக்காக நிறுவனம், வாக் -இன் நேர்காணலுக்கு அழைப்பு விதித்திருந்த நிலையில் 3000 க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் அங்கு படையெடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் விவாதப் பொருளாக மாறி வருகிறது.