search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக்ஸ் 2024"

    • வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஓய்வு பெறுவதாக பி.ஆர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

    33-வது ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில், ஹாக்கி இந்தியா அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் சிங் அடுத்தடுத்து 2 கோல் அடிக்கவே இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்று வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.

    இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக பி.ஆர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.

    இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.

    முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் வழங்கும் முடிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணியில் இளம் வீரர்களை இணைக்கும் இலக்கை நோக்கி இளைஞர்களுக்கு ஸ்ரீஜேஷ் ஹாக்கி பயிற்சி அளித்து வருகிறார்.

    இந்நிலையில், இந்திய ஹாக்கியில் அவர் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

    • 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

    33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியன் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

    இறுதியில், அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு அரையிறுதி போட்டி நடைபெற்றது.

    அப்போது, ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராத் அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார்.

    இதையடுத்து, அரையிறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் செஹ்ராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக (1 வெள்ளி, 5 வெண்கலம்) உயர்ந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் பெற தகுதியானவள்.
    • வினேஷ் போகத்-இடம் நாங்கள் இன்னும் பேசவில்லை.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

    எனினும், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார். இதையடுத்து சர்வதேச மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    வினேஷ் போகத் விவகாரம் குறித்து பேசிய அவரின் மாமனார் ராஜ்பால் ரதி, "அவள் தனது 100 சதவீதத்தை கொடுத்துவிட்டாள். இந்த விஷயத்தில் ஏதேனும் சதி இருக்கலாம். ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க பிரமதரை கேட்டுக் கொள்கிறோம். இது நம் உரிமை, அவள் நம் தேசத்தின் மகள்."

    "வெள்ளிப் பதக்கம் அவளின் உரிமை. நாங்கள் இன்னும் அவளிடம் பேசவில்லை. அவள் இங்கு திரும்பி வந்ததும், ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு நாட்டிற்கு தங்கம் வெல்ல தயாராகுமாறு பேசுவோம்," என்று தெரிவித்தார். 

    • மீராபாய் சானு 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டியில் பங்கேற்றார்.
    • மீராபாய் சானு 199 புள்ளிகளுடன் 4 ஆம் இடம் பிடித்தார்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார்.

    அவர், ஸ்ட்ரச் பிரிவில் 88 புள்ளி கிளீன் அண்ட் ஜர்க் பிரிவில் 111 புள்ளிகள் என மொத்தம் 199 புள்ளிகள் பிடித்து 4ம் இடம் பிடித்தார். 114 கிலோவை தூக்கும் இறுதி முயற்சியில் மீராபாய் சானு தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மீராபாய் சானு 199 புள்ளிகளுடன் 4 ஆம் இடம் பிடித்தார்.

    இதே சுற்றில் பங்கேற்ற தாய்லாந்து வீராங்கனை மீராபாய் சானுவை விட ஒரு புள்ளி (200 புள்ளிகள்) அதிகமாக பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ஒருபுள்ளி வித்தியாசத்தில் மீராபாய் சானு பதக்க வாய்ப்பை இழந்தார்.

    • வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம்.
    • இந்திய பயிற்சியாளர்களிடம் வினேஷ் போகத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    பின்னர், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைதொடர்ந்து, மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சீத் ராணி ஆகியோர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்தனர்.

    அப்போது, "இது விளையாட்டின் ஒரு பகுதி" என்று இந்திய பயிற்சியாளர்களிடம் வினேஷ் போகத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து இந்திய பயிற்சியாளர்கள் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் மல்யுத்தக் குழுவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. செய்தி வெளியான பிறகு வீராங்கனைகள் மிகவும் மோசமாக உணர்ந்தனர். நாங்கள் வினேஷைச் சந்தித்து ஆறுதல் கூற முயற்சித்தோம். அவள் தைரியமாக இருந்தாள்.

    அவர் எங்களிடம்," நாங்கள் பதக்கத்தைத் தவறவிட்டது கடினமான துரதிர்ஷ்டம். ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி" என்று கூறினார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×