search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லெஜண்ட்ஸ் லீக்"

    • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் ஷிகர் தவான் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 38 வயதாகும் இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

    ஓய்வை அறிவித்த ஷிகர் தவானுக்கு விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் இணைந்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் லெஜெண்ட்ஸ் லீக் துவங்குகிறது.

    லெஜெண்ட்ஸ் லீக்கில் இணைந்தது குறித்து தவான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் விளையாடுவதற்கான உடல் தகுதியுடன் தான் நான் இருக்கிறேன். கிரிக்கெட் என்பது என் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதி. எனது கிரிக்கெட் நண்பர்களுடன் இணைந்து புதிய நினைவுகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் நான் ஆவலுடன் உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் நடந்தது.
    • இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    மும்பை:

    இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய ஐ.பி.எல். போன்ற தொடரை உருவாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குறிப்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதிலாக இந்தியாவிலேயே விளையாட விரும்புகின்றனர். அதை பி.சி.சி.ஐ.யிடம் முன்னாள் வீரர்கள் சேர்ந்து கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

    இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பி.சி.சி.ஐ. வருங்காலத்தில் முன்னாள் வீரர்களுக்கென ஐ.பி.எல். தொடரை நடத்த பரிசீலிக்க உள்ளது.

    இதுகுறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறுகையில், முன்னாள் வீரர்கள் வைத்துள்ள கோரிக்கை தற்போது முன்மொழிவு கட்டத்தில் உள்ளது. இந்த வருடம் அதை நடத்த வாய்ப்பில்லை. அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற மற்றும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காத வீரர்கள் அந்த லீக்கில் இடம்பெறுவார்கள் என தெரிவித்தார்.

    ×