என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுத் திட்டம்"

    • இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை மேற்கு வங்காள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
    • இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது, உள்ளிட்ட அம்சங்கள் அதில் உள்ளன

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேலைக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது

    மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தின்மூலம் அரசுக்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

    இதற்கிடையில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசு, நைட் சஷிப்ட் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின்படி,

    நகர்களில் முழு சிசிடிவி கண்காணிப்புகளுடன் கூடிய பாதுகாப்பு மண்டலங்களை [safe zones] உருவாக்குவது, இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது,

    ஆபத்து சமயங்களில் போலீசை உடனே தொடர்பு கொள்ள ஏற்ற வகையில் உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் கண்ரோல் ரூம்களுடன் இணைக்கப்பட்ட அலாரம் சிஸ்டம் கொண்ட பிரத்தியேக செல்போன் செயலியை உருவாக்கி வேலைக்கு செல்லும் பெண்கள் அதை பதிவிறக்கம் செய்வதைக் கட்டாயமாக்குவது,

    மருத்துவமனைகள், பெண்கள் விடுதிகள், கல்லூரிகளில் நுழையும் நபர்கள் மது அருந்தியதை கண்டறியும் ப்ரீத் அனலைசர் சோதனையை கட்டாயமாக்குவது,

    மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் பெண்களுக்கான கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது,

    பெண்கள் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் போலீஸ் ரோந்தை அதிகரிப்பது,

    தெளிவாக தெரியும் வகையில் அடையாள அட்டைகளை மருத்துவமனை மற்றும் கல்லூரியை சேர்நதவர்கள் அணிவதை கட்டாயமாக்குவது,

    இங்குள்ள செக்யூரிட்டிகளை போலீஸ் மேற்பார்வையில் கொண்டுவருவது,

    பெண்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யாமல் இருப்பதை உறுதிப் படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் பெண்கள் முடிந்த அளவு நைட் ஷிப்டை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

    • ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்
    • இன்று உலகின் ஒவ்வொரு நிபுணரும், ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்தியாவை பற்றி மிகவும் ஆர்வத்தடன் உள்ளனர்.

    ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைக்க இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வந்துள்ளார்.

    இன்று முதல் 11-ந்தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மோடி,  

    தொழில்நுட்பம் மற்றும் தரவு [Information] சார்ந்த நூற்றாண்டு இது. ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் தரவு ஆகியவற்றின் உண்மையான சக்தியை இந்தியா உலகுக்கு காட்டுகிறது. இன்று உலகின் ஒவ்வொரு நிபுணரும், ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்தியாவை பற்றி மிகவும் ஆர்வத்தடன் உள்ளனர்.

    எங்கள் அரசு வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் மந்திரத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் பலன் அடைந்துள்ளது. இந்தியாவின் யு.பி.ஐ. டி.பி.டி, திட்டம் மற்றும் இது போன்ற பல பல தரவுகள் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் வலிமையை காட்டுகின்றன.

     

    இந்தியா 11-வது பெரிய பொருளாதாரமாக மாற 7 தசாப்தங்களானது. அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது என்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அரியானாவில் உள்ள பானிபட் நகருக்கு செல்கிறார் மோடி.  அங்கு அவர் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.) மூலம் பீமா சகி யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி முதல் கட்டமாக 35,000 பெண்களும், அடுத்த கட்டமாக 50,000 பெண் களும் எல்.ஐ.சி. முகவா்களாக தோ்வு செய்யப்பட உள்ளனா்.

    பீமா சகி யோஜனா 

    18 முதல் 50 வயதுள்ள பெண்கள், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரை படித்து இருந்தால் விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தொடக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முகவா் கமிஷன் தொகை மட்டுமல்லாது கூடுதலாக ஊக்கத்தொகை பெற முடியும். முகவா்கள் அதி கபட்சமாக ரூ.21,000-வரை மாத வருவாய் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

    • படிவத்துக்கு ஒப்புதல் அளித்த திட்டப் பயனாளிகள் சரிபார்ப்பு அதிகாரிகளும் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
    • சன்னி லியோனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருமணமான பெண்களுக்கான சத்தீஸ்கர் பாஜக அரசு மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன் பெயரில் ஒருவர் கணக்கு தொடங்கி அதில் இந்த திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 பெற்று வந்துள்ளார்.

    சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. வீரேந்திர ஜோஷி என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இந்த மோசடி குறித்த செய்திகள் மூலமே அதிகாரிகள் கவனத்துக்கு இது வந்துள்ளது. வீரேந்திர ஜோஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது படிவத்துக்கு ஒப்புதல் அளித்த திட்டப் பயனாளிகள் சரிபார்ப்பு அதிகாரிகளும் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

     

     

    இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வங்கிக் கணக்கை முடக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த மோசடி குறித்து ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் சாடியுள்ளது. மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பணம் பெரும் 50 சதவீத பயனாளிகள் போலியானவர்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆனால் முந்தைய ஆட்சிக் காலத்தில் காங்கிரஸால் வழங்க முடியாத மாதாந்திர உதவிகளை இப்போது அம்மாநிலப் பெண்கள் பெறுவதால் காங்கிரஸ் வேதனையில் இருப்பதாக துணை முதல்வர் அருண் சாவோ தெரித்துள்ளார். சன்னி லியோனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    ×