search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுர குமார திசநாயக"

    • முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.
    • திச நாயகா தலைமையிலான கூட்டணி 141 இடங்களை கைப்பற்றியது.

    இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் அதிபர் அனுரா குமார திச நாயகா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) கட்சி முன்னிலை வகித்தது.

    இதைத் தொடர்ந்து நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகித்து வந்தது. எதிர்கட்சிகளை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்களும் சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. இந்த மேஜிக் எண்ணை அக்கட்சி எளிதில் எட்டி பிடித்தது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் அனுரா குமார நித நாயகா தலைமையிலான கூட்டணி 141 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாராளுமன்ற அதிகாரத்தை இந்த கூட்டணி தன்வசப்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 61.56 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெற்றது.

    • யாழ்ப்பாணம் ஊர்க்கா வந்துறை தொகுதியில் டக்ளஸ் தேவனாந்தா கட்சி வெற்றி பெற்றது.
    • யாழ்ப்பாணம் மாவட்டம் கிளி நொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி வாகை சூடியது.

    இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் அதிபர் அனுரா குமார திச நாயகா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ( என்.பி.பி,) கட்சி முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகித்து வந்தது.

    எதிர்கட்சிகளை விட அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தது. நேரம் ஆக ஆக அக்கட்சி அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் இருந்தது. ஓட்டுகள் பாதி எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 63 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தது.

    இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11 சதவீத வாக்குகளும், முன்னாள் அதிபர் ரணில் விக்கிரம சிங்கே ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக முன்னணி 5 சதவீத வாக்குகளும் பெற்று மிகவும் பின் தங்கி இருந்தது.

    முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா வெறும் 2.98 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி பரிதாப நிலையில் இருந்தது.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் 123 இடங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்களும் சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. இந்த மேஜிக் எண்ணை அக்கட்சி எளிதில் எட்டி பிடித்தது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இத்தேர்தலில் முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.

    ஈழத்தமிழர்களின் தலைநகராக போற்றப்படும் திரிகோணமலை, மூதூர், சேருவில் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த 3 தொகுதிகளிலும் இலங்கை தமிழரசு கட்சி தோல்வியை சந்தித்தது.

    திரிகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2 இடங்களிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர், மானிப்பாய், கோபாய் தொகுதிகளிலும் ஆளும் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது.

    யாழ்ப்பாணம் ஊர்க்கா வந்துறை தொகுதியில் டக்ளஸ் தேவனாந்தா கட்சி வெற்றி பெற்றது.

    யாழ்ப்பாணம் மாவட்டம் கிளி நொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி வாகை சூடியது.

    ராஜபக்சே குடும்பத்தினரின் கோட்டையாக கருதப்படும் அம்பாந்தோட்டை தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி கடுமையான தோல்வியை தழுவியது.

    இந்த தொகுதியிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. இக்கட்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெறும் 3 உறுப்பினர்களை மட்டுமே பெற்றது.

    ஆனால் இந்த தேர்தலில் இலங்கை பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளதால் அக்கட்சி மிக எளிதாக பாராளுமன்றத்தை கைப்பற்றி உள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகா வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதிலும் தேசிய மக்கள் சக்தி விசுவரூப வெற்றி பெற்று இருக்கிறது.

    இலங்கை பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற முடியும். தற்போது தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

    தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.
    • பிராந்திய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன

    இலங்கை அதிபராகப் பதவியேற்றுள்ள இடதுசாரி தலைவர் அனுர குமார திசநாயக கொள்கை ரீதியாக சீனாவுக்கே அதிக ஆதரவு அளிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.

    அதிகரித்து வரும் பிராந்திய பிரச்சனைகளுக்கு இடையே இலங்கையின் வெளியுறவுக் கொள்கை நாட்டின் இறையாண்மையைப் பேணுவதையே பிரதானமாக கொண்டு அமையும். புவிசார் அரசியல் சண்டைகளில் நாங்கள் பங்குபெறப் போவதில்லை. எந்த பக்கமும் நாங்கள் சாயமாட்டோம்.

     

    குறிப்பாக இந்தியா சீனா இடையில் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இரண்டு நாடுகளின் நடப்பையும் நாங்கள் போற்றுகிறோம். எங்கள் அரசின் கீழ் இனி வரும் காலங்களில் இரு நாடுகளுடனும் நெருக்கத்தை அதிகரிக்க முயற்சிப்போம். மேலும், ஐரோப்பிய யூனியன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனும் நட்புறவு ஏற்படுத்த விழைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றம் கலைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

    இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் இவர் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது. இதில் நள்ளிரவு (நேற்று) முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். அத்துடன் நவம்பர் மாதம் 14-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

    அனுர குமார திசநாயகா அதிபராக பதவி ஏற்றதும் பாராளுமன்றம் கலைப்பு அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தத நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பதவிக்கலாம் 2025 ஆகஸ்ட் வரை உள்ளது. இருந்த போதிலும் 11 மாதங்களுக்கு முன்னதாக நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் கடந்த 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெறத்தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.

    இதில் நீண்ட இழுபறிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக (வயது 56) வெற்றி பெற்றார். இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகா நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து இலங்கையின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெண் தலைவரான ஹரினி அமரசூரியாவை அதிபர் அனுரா குமார திசநாயகா நியமதித்தார். இதையடுத்து, அவர் இலங்கை பிரதமராக நேற்று பதவியேற்றார். இதன் மூலம் இலங்கை வரலாற்றில் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    54 வயதான ஹரினி அமரசூரியா சமூக ஆர்வலர், பல்கலைக்கழக பேராசிரியர், அரசியல் தலைவர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார்.

    பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹரினி அமரசூரியாவுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பி.க்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுனாராச்சி ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    • இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவி ஏற்றுக் கொண்டார்.
    • இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.

    இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். இவர் இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார்.

    கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் அதிபர் அனுர குமார திசநாயக முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

    • அனுர குமார திசநாயக நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.
    • பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்.

    கொழும்பு:

    இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பதவியை ராஜினாமா செய்ததாக தினேஷ் குணவர்தனே தெரிவித்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.

    இந்த நிலையில் அதிபர் அனுர குமார திசநாயக தலைமையில் 4 இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.


    மேலும் இன்று இரவு இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுர குமார திசநாயக உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் 55 முதல் 66 நாட்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண் டும். இதனால் இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • முதல் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
    • அனுர குமார திசநாயகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகினர்.

    இலங்கையின் 9 ஆவது அதிபராக அனுர குமார திசநாயக இன்று காலை பதவியேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டு அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசநாயகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "நமது அண்டை நாடான இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்ற திரு. அனுரா குமார திசநாயகே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."

    "கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் புதிய இலங்கை அதிபர் அவர்கள் செயல்பட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    ×