என் மலர்
நீங்கள் தேடியது "ஆதவ் அர்ஜுனா"
- மக்களை சந்திக்கும் முன்பே த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20 விழுக்காடு இருக்கும் என கூறுகிறார்கள்.
- தலைவர் விஜய் மக்களை சந்தித்தால், வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்?
சென்னை:
சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பொதுக்குழுவில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகிவிட்டோம். பலமான உட்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மாநில அரசு மூட பார்த்தது.
டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சிகிறார்கள்.
அண்ணாமலையை செட் செய்து தி.மு.க. வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவோம்.
மக்களை சந்திக்கும் முன்பே த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20 விழுக்காடு இருக்கும் என கூறுகிறார்கள். தலைவர் விஜய் மக்களை சந்தித்தால், வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்?
இன்றுவரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த நம்முடைய தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்.
எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தியது போல், தற்போது த.வெ.க. தலைவர் விஜயை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. பற்றிய உண்மை தெரியவந்த காரணத்தினால் தான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.
Work From Home அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம்.
என்ன சார் போராட்டம் நடத்துறாங்க? எல்லாம் நடிக்கிறாங்க! வெயிட் பண்ணுங்க... இன்னும் ரெண்டே மாசம்... உண்மையான போராட்டம்ன்னா என்னன்னு விஜய் காண்பிப்பார் என்றார்.
- மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- லாட்டரி மார்ட்டினின் இல்லம், அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். மருத்துவ கல்லூரியும் நடத்தி வருகிறார். துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பிரிவில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாத படி பூட்டினர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ளவர்களையும் வெளியில் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர்.
தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தெரிகிறது. மார்ட்டின் வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் உள்ள அறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது.
சோதனையின் போது அலுவலகத்தின் நுழைவு வாயில், மற்றும் அலுவலக அறைகளின் கதவுகளையும் அடைத்திருந்தனர்.
இதேபோல் மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி மருத்துவ கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
சோதனையொட்டி கல்லூரிக்கு வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்த பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கின்றனர்.
கோவையில் மார்ட்டின் வீடு, அலுவலகம், மருத்துவக்கல்லூரி என மொத்தம் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடந்தது.
அமலாக்கத்துறை சோதனையையொட்டி சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. சோதனை முடிவுக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.
கோவையில் நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மத்திய அரசு வழக்கம்போல் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது.
- அரசியல் எதுவும் பேச வேண்டாம் என அவரிடம் முன்னரே தெரிவித்தேன்.
இன்றைக்கு கூடிய சட்டப் பேரவை கூட்டத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
முன்னதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட விசிக துணை பொதுச் செயலாளலர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பெஞ்சல் புயலால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு வழக்கம்போல் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. புயல் நிவாரண நிதியாக நாங்கள் [விடுதலை சிறுத்தைகள்] ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அவருக்கு நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தல் செய்தோம்.
பல முறை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. அவரின் அண்மை பேச்சு கட்சியின் நம்பகத்தன்மைக்கு ஊரு விளைவிக்கும் வகையில் இருந்தது. எனது அறிவுறுத்தலை மீறி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். அரசியல் எதுவும் பேச வேண்டாம் என அவரிடம் முன்னரே தெரிவித்தேன்.
ஆதவ்வின் பேச்சு என் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. திமுகவிடம் இருந்து எந்த அழுத்தமும் எனக்கில்லை. நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்ற எனது முடிவு சுதந்திரமானது. தவெகவுடனும் விஜய் உடனும் விசிகவுக்கு எந்த மோதலும் இல்லை என்று தெரிவித்தார்.
- திருமாவளவனின் வரிகளும் சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜூரா பதிவு வெளியிட்டுள்ளார்.
- விசிகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா அதிரடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா அதிரடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருமாவளவனின் வரிகளும் சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜூரா பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!
'அதிகாரத்தை அடைவோம்' என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.
தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.
தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்.
கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், 'சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்' என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன்.
ஆயிரம் கைகள் மறைத்தாலும்…
ஆதவ(ன்) மறைவதில்லை!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.
- ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியின் பிடி இருக்கிறது.
நாகப்பட்டினம்:
நாகையில் இன்று மதியம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மதுரை பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய டங்ஸ்டன் சுரங்கம் அமைவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.
ஆனால், நாங்கள் இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். வருகிற 12-ந்தேதி டெல்லி செல்கிறோம். திரும்பி வரும்போது நிச்சயம் வெற்றி செய்தியோடு வருவோம் என்றார்.
தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மேடை ஏறி முதலமைச்சர் குறித்து பேசி உள்ளார். இதனை கேட்ட மக்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியின் பிடி இருக்கிறது.
மன்னர் ஆட்சி என்றால் தந்தைக்கு பின்னால் மகன், மகனுக்கு பின்னால் மகன் என்பது தான். அவர்களை துடைத்தெரியும் காலம் வந்துவிட்டது. ஆதவ் அர்ஜுனா பேச்சும், வி.சி.க. தலைவர் பேச்சும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கட்சியின் நடைமுறைக்கு இணங்கி செயல்படுவது முக்கியம்.
- அமைப்புக்கு இணங்கி செயல்பட வேண்டியது அவசியமானது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதவ் அர்ஜுனா நல்ல நோக்கத்தில் தான் கட்சியில் வந்து இணைந்தார். பல அரசியல் கட்சிகளில் தொடர்பு இருந்தாலும் தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு இருக்க முடியும்.
ஆனாலும் கூட தலித் மக்களின் உணர்வுகளுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி கட்சியின் மாநாட்டில் இணைத்துக் கொண்டார்.
அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் நியாயமான கோபங்கள், மக்கள் நலன் கருதி நான் வெளியிடும் கருத்துகள், பாதிப்புக்குரிய இடைவெளி ஏற்படுவதாக இருக்கிறது. அதற்கு நான் இடம் கொடுக்க விரும்பவில்லை. எனவே விலகுகிறேன் என கூறியிருக்கிறார்.
இடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு பொது வெளியில் கருத்து சொல்வது வழக்கம் இல்லை. தலைமை அல்லது அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் அவர் விளக்கம் அளிக்கலாம்.
அந்த விளக்கம் ஏற்கப்பட்டு நடவடிக்கை தேவையில்லை என தலைமையோ ஒழுங்கு நடவடிக்கையோ கருதினால் மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட வாய்ப்பு வழங்கப்படும்.
இடை நீக்கம் செய்யப்பட்ட அன்றே வெளியிட்ட அறிக்கை இடை நீக்கம் குறித்து சொன்ன கருத்து கட்சிக்கு எதிராக தலைமைக்கு எதிராக தான் இருந்தது.
விளக்கம் அவருடைய பார்வையில் சரியாக இருந்தாலும் கூட ஒரு கட்சியின் நடைமுறைக்கு ஏற்புடைதாக இல்லை. ஒரு கட்சிக்கு வருபவர் அந்த கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
நமக்கு எல்லாம் தெரியும் என்றாலும் கூட பேசுவது சரி தான் என்றாலும் கூட மக்களுக்காக தான் செயல்படுகிறோம் என்றாலும் கூட கட்சி ஒரு கட்டுபாட்டை விதிக்கிறது. அந்த கட்டுபாட்டிற்குள் இருந்து இயங்க வேண்டும். அதற்கு இணங்குவது தான் முக்கியமானது.
ஒரு கட்சிக்கு வந்து விட்டால் எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் கட்சிக்கு கட்டுபடுவது முக்கியமானது. கட்சியின் நடைமுறைக்கு இணங்கி செயல்படுவது முக்கியம். கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம். குரல் நியாயமானதாக இருக்கலாம்.
அந்த குரல் கட்சியின் வழியாக ஒலிக்க வேண்டும். கட்சியின் நலன்களுக்கு இணங்கி செயல்பட வேண்டும். அதை அவரிடம் பலமுறை சுட்டிக் காட்டி இருக்கிறோம். கட்சியில் இருந்து விலகும் முடிவை அவருக்கு சரி என்ற வகையில் எடுத்துள்ளார்.
கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதோ கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதோ நம்முடைய நோக்கம் இல்லை. நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும் என்பதற்காக தான் இடைநீக்கம் நடவடிக்கை ஆகும்.
ஆதவ் அர்ஜுனா பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார். தலித், பழங்குடி மக்களுக்காக போராட வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் அவசரம் கூடாது. அமைப்புக்கு இணங்கி செயல்பட வேண்டியது அவசியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மலம் கலந்த தண்ணீரை ஒருவாரமாகக் குழந்தைகள், முதியவர்கள் என அந்த மக்கள் குடித்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள்.
- சொந்த குழந்தைகளையே இப்படி வதைக்கும் அளவிற்குக் கொடூர மனிதர்களா அந்த எளிய மக்கள்?
சென்னை:
ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்திற்கு 800 நாட்கள் கழித்து புதிய கதை ஒன்றைக் கட்டமைத்துள்ளது தமிழக காவல்துறை. தலித் மக்களே தங்கள் குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்து அதை அவர்களே அருந்தியிருக்கிறார்கள் என்ற 'அறியக் கண்டுபிடிப்பை' இவ்வளவு நாள் கழித்து துப்பறிந்து கண்டறிந்துள்ளது காவல்துறை.
தலித் மக்கள் மீதான அதிகாரத்தின் அழுத்தம் இன்னும் எத்தனை காலம் நீளும்.. தலித் மக்களுக்கு எதிரான இந்த விசாரணை அமைப்புகளின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான எனது போராட்டத்தை உடனடியாக துவங்க உள்ளேன். வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும், தற்போது குற்றவாளிகள் என்று காவல்துறை சித்தரித்துள்ள முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவரையும் ஆறு மாதங்களுக்கு முன்பே நான் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தேன். மலம் கலந்த தண்ணீரை ஒருவாரமாகக் குழந்தைகள், முதியவர்கள் என அந்த மக்கள் குடித்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். சொந்த குழந்தைகளையே இப்படி வதைக்கும் அளவிற்குக் கொடூர மனிதர்களா அந்த எளிய மக்கள்? இதை எவ்வாறு மனம் வந்து காவல்துறையால் குறிப்பிட முடிகிறது. புலன் விசாரணை செய்த காவல்துறைக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று வந்த அழுத்தமே புகார்தாரர்களைக் குற்றவாளியாகக் காட்டும் தந்திரத்தைக் கையில் எடுக்க வைத்துள்ளதோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.
இந்த சம்பவத்தின் ஆணிவேராகச் சாதி ஆதிக்கம் இருப்பதையும், காவல்துறை இந்த விவகாரத்தை அப்போதே திசை திருப்பும் வேலையில் இறங்கியதையும் தெரிந்தே, மூத்த வழக்கறிஞர் ப. பா. மோகன் தனியாக நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு சட்டரீதியான போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த மூன்று தோழர்களும் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வரை என் போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிகார வர்க்கத்தை நோக்கி எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இந்த வழக்கு தலித் மக்கள் மீது வலியத் திணிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டியுள்ளது. வலியவர்களின் குரல் அம்பலத்திற்கு வராது என்பது போல இந்த எளிய மக்களின் குரலை அதிகாரம் என்கிற கயிற்றைக் கொண்டு நெறிக்கும் வேலையை காவல்துறை மேற்கொண்டுள்ளது வெட்கக்கேடான செயல்!
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை நிலைநாட்டும் நீதிக்கான பயணத்தை அந்த மக்களுடன் இணைந்து நான் உடனடியாக மேற்கொள்வேன். அதிகாரவர்கத்திற்கு எதிராக அந்த அதிகாரமற்றவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் பணியே எனது இப்போதைய தலையாய பணியாகக் கருதுகிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே என்னுடைய பயணம் இருக்கும். அவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
- விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
- த.வெ.க. திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி த.வெ.க. மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று அதிகம் பேசப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்கள் இதற்கு மாறான சூழலை உணர்த்துகிறது.
வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் உடன் தேர்தல் பணிகள் சார்ந்து மட்டும் பணியாற்ற ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
- விசிக கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் விலகிய நிலையில் இன்று விஜய்யை திடீரென சந்தித்துள்ளார்.
- தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன், ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார். விசிக கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் விலகிய நிலையில் இன்று விஜய்யை திடீரென சந்தித்துள்ளார்.
அப்போது, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பில், தவெக-வில் ஆதவ் அர்ஜுனா இணைவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா விரைவில் தவெகவில் இணைவார் என்றும் இதுதொடர்பான அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும், விஜய் ஆதவ் அர்ஜூனாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தேர்தல் வியூக நிறுவனத்துடன் ஒப்பந்தம்
- நேற்று முன் தினம் விஜய்யை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது.
ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தேர்தல் வியூக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா த.வெ.க.-வில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நேற்று முன் தினம் விஜயை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தார். அப்போது, த.வெ.க.-வில் ஆதவ் அர்ஜுனா இணைவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில் த.வெ.க. கட்சியில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் சிறப்புப் பிரிவு பதவி வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தலைவர், பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனா இருப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.
- ஆதவ் அர்ஜுனாவுக்கு த.வெ.க.வில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா த.வெ.க.-வில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
பனையூரில் உள்ள த.வெ.க. அலுலவகத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் வரவேற்று அழைத்து சென்றார்.
அதன்படி சென்னை பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் இருவரும் த.வெ.க.வில் இணைந்தனர்.
அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளர் நிர்மல்குமாரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு த.வெ.க.வில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியிலிருந்து ஒரு பிரபலமும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆதவ் அர்ஜுனா இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
- அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் த.வெ.க.வில் இணைந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இதேபோல், அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் த.வெ.க.வில் இணைந்தார்.
சென்னை பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் இருவரும் த.வெ.க.வில் இணைந்தனர்.
இந்நிலையில், தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, அதிமுகவில் இருந்து வந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், தவெகவின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேச்சாளர் ராஜ்மோகன், த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.