என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது வாரண்ட்"

    • இஸ்ரேல் அளித்த அறிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
    • இஸ்ரேல் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த காசா இனப்படுகொலை வழக்கில் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீன மக்களின் மரணம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த அறிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    போர் என்ற பெயரில் இஸ்ரேல் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 124 ICC உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் இவர்கள் நுழைந்தால் கைது செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

    • ரூ.23 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
    • மோசடி புகாரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வந்தவர் ராபின் உத்தப்பா. இந்நிலையில், அவருக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடகா மாநிலத்தின் புலகேசிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    முன்னதாக செஞ்சுரிஸ் லைப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் நிர்வாகத்தை ராபின் உத்தப்பா நடத்தி வந்தார். இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பங்களிப்பைக் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் அவர்களின் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவில்லை. ரூ.23 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து உத்தப்பாவை பிடித்து அவரிடம் நேரில் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    ராபின் உத்தப்பா 2006-ல் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார். அவர் 2006 முதல் 2015 வரை 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25.94 சராசரியில் 934 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ராபின் உத்தப்பா அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.

    ஐபிஎல் தொடரில் அவர் 130.41 ஸ்ட்ரைக் ரேட்டுடன் கிட்டத்தட்ட 5000 ரன்களை அடித்துள்ளார். மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் முறையே 2012 மற்றும் 2022 இல் ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவினார்.

    • ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
    • கடன்கள் வடிவில் நிதி அளித்ததால் இயக்குநராக நியமிக்கப்பட்டேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தவர் ராபின் உத்தப்பா. தற்போது கிரிக்கெட் மட்டுமின்றி தொலைக்காட்சி தொகுப்பாளர், வர்ணனையாளர் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில், ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தன் மீதான கைது வாரண்ட் குறித்து ராபின் உத்தப்பா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "எனக்கு எதிரான பி.எஃப். வழக்கு தொடர்பான சமீபத்திய செய்திகளைத் தொடர்ந்து, ஸ்ட்ராபெரி லென்செரியா பிரைவேட் லிமிடெட், சென்டௌரஸ் லைஃப்ஸ்டைல் பிரான்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் பெர்ரிஸ் ஃபேஷன் ஹவுஸ் உடனான எனது தொடர்பு குறித்து சில விளக்கங்களை வழங்க விரும்புகிறேன்.

    2018-19 ஆம் ஆண்டில், நான் இந்த நிறுவனங்களுக்கு கடன்கள் வடிவில் நிதி அளித்ததால் நான் இயக்குநராக நியமிக்கப்பட்டேன். இருப்பினும், நான் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது அந்நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர், டிவி தொகுப்பாளர் மற்றும் வர்ணனையாளர் என்ற வகையில், அந்நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்கேற்க எனக்கு நேரமும் நிபுணத்துவமும் இல்லை. உண்மையில், இன்றுவரை நான் நிதியளித்த வேறு எந்த நிறுவனங்களிலும் நான் நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.

     


    வருந்தத்தக்க வகையில், இந்த நிறுவனங்கள் நான் கடனாகக் கொடுத்த நிதியைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதால், சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு என்னை இட்டுச் சென்றது. நானும் பல வருடங்களுக்கு முன் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.

    வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நிலுவைத் தொகையை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியபோது, எனது சட்டக் குழு பதிலளித்தது. இந்த நிறுவனங்களில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது மற்றும் எனது ஈடுபாடு இல்லாததை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நிறுவனங்களிடமிருந்து வழங்கியது.

    இருந்த போதிலும், வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளனர். மேலும் எனது சட்ட ஆலோசகர்கள் வரும் நாட்களில் இந்த பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். முழுமையான உண்மைகளை தயவுசெய்து முன்வைக்கவும், பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும் ஊடகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அதிபர் பதிவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
    • நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.

    தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கான கைது வாரண்டிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி ராணுவ சட்டத்தை விதிப்பதற்கான தனது முடிவை யூன் சுக் அறிவித்த நிலையில், அவர் அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து அவர்மீது அந்நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அதனை நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.

    கைது வாரண்ட் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கான உத்தரவை சியோல் மேற்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

    தென் கொரியாவில் அதிபருக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் கைது வாரண்ட் இது என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராணுவ சட்டத்தை கொண்டு வர முயன்றதை எதிர்த்து தென் கொரிய புலனாய்வாளர்கள் யூன் சுக் கைது செய்யப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கை விடுத்தனர்.

    ×