என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் பொன்முடி"
- இந்த திராவிட மாடல் ஆட்சியை யாரால் தொட்டு கூட பார்க்க முடியாது.
- தன்னுடைய செய்தி வரவேண்டும் என்பதற்காக சீமான், பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரியாரை சொல்லி திமுக வாக்கு கேட்குமா இல்லை காந்தி நோட்டுகளை கொடுத்து வாக்கு கேட்குமா? என்று சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம் சீமான் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பொன்முடி, "பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடக்கும் ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல இடங்களில் பல நேரங்களில் சொல்லி இருக்கிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
Duplicate போட்டோவை எடிட் செய்து வெளியிட்டவர்தான் சீமான். திராவிடம் என்பது இனம், தமிழ் என்பது மொழி இந்த இரண்டும் இணைந்தும் செயல்படுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று தமிழக முதல்வர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த திராவிட மாடல் ஆட்சியை யாரால் தொட்டு கூட பார்க்க முடியாது. தன்னுடைய செய்தி வரவேண்டும் என்பதற்காக சீமான், பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறார்" என்று தெரிவித்தார்.
- தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
- தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3½ வயது சிறுமி லியோ லட்சுமி பலியானதாக கூறப்படுகிறது. இறந்த சிறுமியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறுமியின் உடல் சொந்த ஊரான விக்கிரவாண்டிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சிறுமியின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
சிறுமி பலியான சம்பவம் மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்திற்கு யாருக்காவது அரசு வேலை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.