என் மலர்
நீங்கள் தேடியது "மந்திரி நிர்மலா சீதாராமன்"
- கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இல்லை.
- விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு ஆதரவு இல்லை.
பாராளுமன்றத்தில் இன்று 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 2025-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கேரளாவின் முக்கிய கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2025-ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் கேரளாவின் முக்கிய கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவிற்கு நிவாரண நிதி இல்லை.
எய்ம்ஸ் மருத்துவமனைகள் இல்லை. விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு ஆதரவு இல்லை. நமது கடன் வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன. தொழிற்துறை ஓரங்கட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இது கூட்டாட்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல். ஒன்றிய அரசு மாநிலங்களின் வளர்ச்சியை விட தேர்தல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த அநீதியை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு பினராயி கூறினார்.
- பட்ஜெட்டில் பீகாருக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது
- பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதே சமயம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் இல்லை. குறைந்த பங்களிப்பு செய்யும் மாநிலங்கள் அதிக ஆதாயம் அடைந்துள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்த பட்ஜெட் பீகார் மாநிலத்திற்காக மட்டுமே இருப்பதைப்போல் அமைந்திருக்கிறது.
- மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு கானல் நீராகவே அமைந்துள்ளது.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. தொடக்கத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப் போவதாக நிதியமைச்சர் கூறினார். ஆனால், அவர் அறிவித்த அறிவிப்புகள் பீகார் மாநிலத்திற்கு ஜாக்பாட் அடித்த அளவிற்கு 5 திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருக்கிறார்.
பீகாருக்கு அதிக நிதி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன் திருக்குறளை மட்டும் படித்து விட்டு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை புறக்கணித்திருக்கிறார். விவசாயிகளின் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, கடன் நிவாரணம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சீர்திருத்தம் போன்றவற்றைக் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு 2014 முதல் 2024 வரை ரூபாய் 25 லட்சம் கோடி வாராக் கடனை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூபாய் 14.56 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. இது ஒரு விவசாயிகளின் விரோத பட்ஜெட் ஆகும்.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பை வழங்குகிற சிறு, குறு தொழில்களுக்கு பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்படவில்லை. அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதாமல் அப்பட்டமான பாரபட்சத்தோடு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
உலகத்திலேயே வேகமாக வளர்கிற பொருளாதார நாடு இந்தியா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாகத் தான் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றி பேசுகிற நிர்மலா சீதாராமன், சராசரி தனிநபர் வருமானம் ரூபாய் 2 லட்சத்து 15 ஆயிரமாக இருப்பதை குறிப்பிட மறுக்கிறார்.
1947 முதல் 2014 ஆம் ஆண்டு வரை, மொத்த கடன் சுமை ரூபாய் 55 லட்சம் கோடியாக இருந்தது, கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 100 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசு, மேலும் 14.82 லட்சம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம், ஒவ்வொரு இந்தியர் மீதும் ஏற்கனவே ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரம் கடன் சுமை இருக்கிறது. இதை மேலும் கூட்டுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. அதேபோல, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 74 சதவிகிதமாக இருந்தது, தற்போது அது 100 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் அந்நிய முதலீட்டாளர்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.
நிதிநிலை அறிக்கையில் அரசு முதலீடு, அந்நிய முதலீடு, தனியார் முதலீடுகளை அதிகரிக்கவோ, அதன்மூலம் வளர்ச்சியை உருவாக்கி வேலை வாய்ப்பை பெருக்கி, தேவைகளை அதிகரிக்கவோ, நுகர்வுகளை உயர்த்தவோ நிதிநிலை அறிக்கையில் எந்த திட்டமும் இல்லை. உணவு தானியங்களின் விலை உயர்வு, மருத்துவ செலவு உயர்வு, கல்வி மற்றும் படிப்பிற்கான செலவு உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் 8.1 சதவிகிதமாக அதிகரித்திருப்பது போன்றவற்றால் ஏழை, எளிய மக்கள் வாங்கும் சக்தி குறைந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூபாய் 86,000 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இது மிகமிக குறைவாகும். ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு தர வேண்டிய நிலுவைத் தொகை 4315 கோடி ரூபாய் வழங்கப்படாததால், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் எதுவும் கூறவில்லை.
நிர்மலா சீதாராமன் மிகுந்த மகிழ்ச்சியோடு ஒரு அறிவிப்பை வெளியிட்டார் என்று சொன்னால், அது ரூபாய் 12 லட்சம் ஆண்டுக்கு வருமானம் உள்ளவர்களுக்கு வரியில்லை என்று அறிவித்தது தான். இந்தியாவில் மொத்தம் வருமான வரி செலுத்துபவர்கள் 8 கோடி பேர். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 7 சதவிகிதமாக உள்ளனர். அதில், 5 கோடி பேர் வருமான வரி கணக்கை சமர்ப்பித்து வரி செலுத்தாதவர்கள். மீதமுள்ள 3 கோடி பேர் தான் வருமான வரி செலுத்துபவர்கள். நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் 140 கோடி பேரில் 2 சதவிகித பேருக்கு தான் இந்த வரிவிலக்கு பொருந்தும். மீதமுள்ள 138 கோடி மக்களுக்கு என்ன சலுகை வழங்கினார் என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும்.
ஆக, ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பது ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கான அரசு அல்ல. மாறாக, உயர் வருமானம் பெறுகிறவர்களுக்கு ஆதரவாகத் தான் இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
எனவே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை அதிகரித்து, வேலை வாய்ப்பை பெருக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற நோக்கம் கொண்டதாக இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை ஒன்றிய அரசுக்கானதாக இல்லாமல் பீகார் மாநிலத்திற்காக மட்டுமே இருப்பதைப் போல் அமைந்திருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு கானல் நீராகவே அமைந்துள்ளது.
- மத்திய அரசின் 1 ரூபாயில் வருவாயில் வருமான வரி மூலம் 22 பைசா வருவாய் கிடைத்துள்ளது.
- மத்திய அரசின் 1 ரூபாயில் செலவில் மாநில வரிப்பகிர்விற்காக 22 பைசா செலவு செய்யப்படுகிறது.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு 1 ரூபாயில் கிடைக்கும் வருவாய் மற்றும் செலவு சதவிகிதம் வெளியாகியுள்ளது.
1 ரூபாயில் மத்திய அரசின் வருவாய்:
24 பைசா - கடன் வாங்குதல்
22 பைசா - வருமான வரி
18 பைசா - ஜி.எஸ்.டி மற்றும் பிற வரிகள் வருவாய்.
17 பைசா - கார்ப்பரேட் வழி
09 பைசா - வரியில்லா வருவாய்
05 பைசா - மத்திய கலால் வரி
04 பைசா - சுங்க வரி
01 பைசா - கடனில்லா மூலதன வருவாய்
1 ரூபாயில் மத்திய அரசின் செலவு:
20 பைசா - கடன் வட்டி
22 பைசா - மாநில வரிப்பகிர்வு
16 பைசா - மத்திய அரசின் திட்டங்கள்
08 பைசா - மத்திய அரசு நிதியுதவி திட்டங்கள்
08 பைசா - நிதிக்குழு மற்றும் பிற பரிமாற்றங்கள்
08 பைசா -பாதுகாப்பு
08 பைசா - பிற செலவினங்கள்
06 பைசா - மானியம்
04 பைசா - பென்ஷன்
- பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் இருப்பதால், பட்ஜெட் பீகாரை நோக்கி மட்டுமே செல்கிறது.
- நடுத்தர வர்க்கத்தினருக்கு மீண்டும் ஒரு முறை ஏமாற்றம்
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை" என்று அறிவித்தார்.
மேலும் பேசிய அவர், புதிய வரி முறையின் வரி அடுக்கில் சில திருத்தங்களை நான் முன்மொழிகிறேன். ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. ஆனால் ரூ.4-8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி செலுத்த வேண்டும். ரூ.8-12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும் ரூ.12-16 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும் ரூ.16-20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் ரூ.20-24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரியும் 24 லட்சத்திற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கலாம்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், "இது மிகவும் ஏமாற்றம் தரும் பட்ஜெட். டெல்லிக்கு குறிப்பாக பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி தேர்தலுக்கு வாக்காளர்களை கவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ. 8-12 லட்ச வருமானத்துக்கு 10% வரி உள்ளது தெரிவித்துவிட்டு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறுவது மிகவும் குழப்பமாக உள்ளது.
எனவே, நடுத்தர வர்க்கத்தினருக்கு மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் தான். பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் இருப்பதால், பட்ஜெட் பீகாரை நோக்கி மட்டுமே செல்கிறது..
தமிழகம் அல்லது வேறு எந்த தென் மாநிலங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை" என்று தெரிவித்தார்.
- தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை" என்று அறிவித்தார்.
மேலும் பேசிய அவர், வருமான வரிவிதிப்பு எளிமைப்படுத்தப்படும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான வரம்பு 4 ஆண்டுகளாக உயரத்தப்ட்டுள்ளது. வருமான வரி அடுக்குகளில் மாற்றம் கொண்டுவரப்படும். அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக புதிய வருமான வரி சட்ட மசோதா இருக்கும். புதிய சட்ட மசோதாவில் பழைய சட்டத்தின் 50% விதிகள் இருக்கும்.
புதிய வரி முறையின் வரி அடுக்கில் சில திருத்தங்களை நான் முன்மொழிகிறேன். ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. ரூ.4-8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி செலுத்த வேண்டும். ரூ.8-12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும் ரூ.12-16 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும் ரூ.16-20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் ரூ.20-24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரியும் 24 லட்சத்திற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கலாம்" என்று தெரிவித்தார்.