search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97927"

    • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை துணைத் தலைவர் ரவி தலைமையில் இணைச் செயலாளர் சக்திவேல் முன்னிலையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இனைச்செயலாளர் ராணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா எம்.பி பிரிட்ஜ் பூசன் சரண்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்,
    • மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தேர்தலை ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக நடத்த வேண்டும்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் சீண்டலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இதில் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் (வாகன பிரிவு) தலைவர் சுப்பிரமணி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி மணி. இந்திய மாணவர் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் யோகராஜ், இந்திய பொதுவுடமை மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மன்னரசன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், இணைச் செயலாளர் வெங்கட், பொருளாளர் ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜனதா எம்.பி பிரிட்ஜ் பூசன் சரண்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்,

    மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தேர்தலை ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    மக்கள் அதிகாரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.

    • அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்

    அரியலூர்,

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவை கண்டித்தும் உரிய விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் பங்கேற்று ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் காந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் இளவேனில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் கல்பனா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகேஸ்வரி, தமிழ்நாடு ஜாக்டோ- ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் புகழேந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாருக்குள்ளான எம்.பி. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்தி றனாளிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் 4 மணி நேரம் முறையாக பணி வழங்க வேண்டும்.
    • மாதத்தில் 15 நாட்கள் வேலை வழங்க வேண்டும்

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மாங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாங்கரை ஊராட்சியில் மாற்றுத்தி றனாளிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் 4 மணி நேரம் முறையாக பணி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசும் பணித்தள பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கிக் கணக்கில் முறையாக ஊதியத்தினை செலுத்த வேண்டும், மாதத்தில் 15 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் மாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில், பென்னாகரம் காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன், ஊராட்சி செயலர் மாதையன் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் மாங்கரை ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் மேற்கொள்ளும் போது அந்தந்த பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணிகள் வழங்க ஏற்பாடு செய்வதாகவும், பணியின் போது மருத்துவ வசதி குடிநீர் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டப் பொருளாளர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கரூரான் சிறப்புரையாற்றினார்.

    இதில் வட்ட துணை தலைவர் மாரியப்பன், நிர்வாகிகள் பவுனேசன், சக்திவேல், முனியம்மாள், சரவணன், இளங்கோவன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி வேண்டி காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும்.

    புதுச்சேரி:

    மல்யுத்த வீராங்கனை களுக்கு நீதி வேண்டி, காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், காரைக்கால் மதகடி பகுதியில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. காரைக்கால் கடற்கரை சலையில் உள்ள மதகடி பகுதியில் நடைபெற்ற, இந்த கண்டன ஆர்ப்பா ட்டத்தில், மல்யுத்த விராங்கணைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் யாராக இருப்பினும், அரசு அவர்களை உடனே பாரபட்சம் இன்றி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.

    மேலும் இந்த போராட்டத்தில் நியாயம் கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்கு உரிய நியாயத்தை அரசு பெற்றுத்தரவேண்டும். நாட்டுக்காக பதக்கம் பெற்றுத்தந்த வீராங்கணைகளை மதித்து நடக்கவேண்டும். இந்த வழக்கின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தி, மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி மற்றும் நியாயம் பெற்றுததரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு வளமீட்பு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குப்பை ஏற்றி வரும் வண்டிகள் எங்கள் பகுதியில் வரக்கூடாது என வாக்குவாதம் செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு எவெரடி நகர் பகுதியில் வளமீட்பு பூங்கா 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் அருகே உள்ள ஜெகன் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வளமீட்பு பூங்கா என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் (குப்பைகளை தரம் பிரித்தல்) செயல்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை சுற்றி 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாகவும், குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், தொற்று நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளதாகவும் கூறி, வளமீட்பு பூங்காவை மாற்று இடத்தில் அமைக்க வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கு முன்பு வளமீட்பு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, தலைவர் ருக்மணி மோகன்ராஜ் இதற்கான சமரச பேச்சுவார்த்தை மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெறுவதாக தெரிவித்ததின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டு அதற்கான சமரச பேச்சுவார்த்தை நேற்று மீஞ்சூர் பேரூராட்சி கூட்ட அரங்கில் செயல் அலுவலர் வெற்றி அரசு தலைமையில் நடைபெற்றது. இதில் மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு ஜெகன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பேரூராட்சி சார்பில், வளமீட்பு பூங்காவில் 2வது வார்டு குப்பைகளை மட்டும் தரம் பிரிப்பதாகவும், தற்காலிகமாகமாக செயல்படுவதாகவும், குப்பைகள் தரம் பிரிக்க வேறு இடத்திற்கு மாற்றப்படும் வரை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வளமீட்பு பூங்கா என்ற பெயரில் பேரூராட்சி குப்பைகளை கொண்டு வந்து கொட்டி தரம் பிரிக்க விடமாட்டோம், குப்பை ஏற்றி வரும் வண்டிகள் எங்கள் பகுதியில் வரக்கூடாது எனவும், வளமீட்பு பூங்காவை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், ஒரு போதும் எங்கள் பகுதியில் அனுமதிக்க மாட்டோம், நோய் பரவுவதற்கு அனுமதிக்க விடமாட்டோம் எனவும், முதலாவது எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற நடவடிக்கை எடுங்கள் என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கூட்டத்தை புறக்கணித்து, திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதாக கூறி சென்றுவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதில் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பாஜக எம்.பி பிரிட்ஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரியும், நீதி கேட்டு போராடிய வீராங்கனைகளை தாக்கிய டெல்லி போலீசாரைகண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    அப்போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் யோகராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மணிகண்டன், இடைகமிட்டி தலைவர் சுகந்தன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் கண்டக்டர் களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும், மண்ட லங்களுக்கு இடையே இடமாறுதல் செய்யும் அதிகாரம் அந்தந்த பொது மேலாளர்களுக்கே வழங்க வேண்டும், பழைய பேருந்து களை பராமரிப்பு செய்ய தேவையான தரமான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும், பணி நேரம் சட்ட விரோத மாக 12 மணி நேரமாக மாற்றப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தின் போது போக்கு வரத்துதுறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினா். போக்குவரத்து பணியாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • பெரம்பலூரில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • கூட்டமைப்பு தலைவரை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு மற்றும் கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மல்யுத்த கூட்டமைப்பு தலைவரை பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    • கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    • முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் துறைமங்கலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகில் சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் ராஜா, ரமநாயகம், இணைசெயலாளர்கள் மணிவேல், ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10சதவீத ஆபத்து படி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ் ்சாலைத்துறையிலேயே வாரிசு பணி வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் செய்து ரூ. 5 ஆயிரத்து 200 முதல் 20 ஆயிரத்து 200 வரையும், தர ஊதியம் ஒரு ஆயிரத்து 900 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.முன்னதாக மாவட்ட இணைசெயலாளர் மதியழகன் வரவேற்றார். முடிவில் உட்கோட்ட தலைவர் பழனிசாமி நன்றி கூறினார். தொடர்ந்து கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனுவினை முதல்வர், நெடுஞ்சாலைதுறை அமைச்சர், கண்காணிப்பு பொறியாளர், முதன்மை இயக்குநர், முதலமைச்சரின் செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோருக்கு தபால் அனுப்பினர்.

    • விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாரியப்பன் தலைமை தாங்கினார்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது இருசமூகத்தின ரிடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப், மாநில துணை பொதுசெயலாளர் ஆற்றலரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். மாவட்ட துணை செயலாளர் செல்லப்பாண்டி, தொகுதி செயலாளர் தமிழ்செல்வன், துணை செயலாளர் சிந்தனைவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×