என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்.என்.ரவி"
- தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது.
- வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப பாடமாக சேர்க்க பேசி வருகிறேன்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 406 மாணவ, மாணவியருக்கு பட்டங்களும், 49 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கினார். விழாவில் உரையாற்றிய அவர் கூறியதாவது :
புத்தக கல்வி அறிவு மட்டும் இன்றைய சமூகத்தில் போதாதது. அதைத்தாண்டி திறன் சார்ந்த கல்வியும் தேவைப் படுகிறது. நீங்கள் இன்னும் தொடர்ந்து வளர வேண்டும். இந்த பட்டம் முடிவு கிடையாது. உங்கள் திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் நாடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக நாம் இருப்போம். போட்டி நிறைந்த உலகில் நாம் இருக்கிறோம். சுலபமாக வளர்ச்சி இருக்காது. முயன்று முன்னேற வேண்டும். தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது.
திருக்குறளை மற்ற மாநிலங்களின் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். இதற்கு திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டியிருக்கும். அதன் ஒரு கட்டமாக காசி தமிழ் சங்கத்தில், பிரதமர் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இதேபோல், வடகிழக்கு மாநிலங்களின் பாடத் திட்டங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக சேர்க்க முதலமைச்சர்களுடன் பேசி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தில் 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்படுகின்றன.
- ஆளுநரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாடு முழுமையும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நிழல் அரசாங்கங்களை நடத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. தமிழகத்தில் ஆர்.என்.ரவி, கேரளாவில் ஆரிப் முகமதுகான், தெலுங்கானாவில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட ஆளுநர்கள் கடைப்பிடிக்கும் போக்குகள் அரசியல் சாசனத்தை அத்து மீறுபவை.
சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், அரசியல் சாசனம் மீறிய நடவடிக்கைகள், சட்டமன்றங்களை அவமதிக்கும் வகையில் மசோதாக்களை கிடப்பில் போடுவது என ஆளுநர்களின் அத்துமீறல்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியே தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தருவதில் தாமதம். தற்போது அவசர சட்டமும் காலாவதியாகி விட்டது. இது உயிர் குடிக்கும் பிரச்சினை. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30 உயிர்கள் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
தாமதமாகிற ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் உயிர்களோடு விளையாடுகிற விபரீதமாக உள்ளது. ஆனால் ஆளுநர் ரவி இதை உணர்ந்தும் மத்திய அரசின் கைப்பாவையாக மட்டும் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சட்டமன்றம் துவங்கிய முதல் நாளான அக்டோபர் 17, 2022 அன்றே ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது. நவம்பர் 10 வரை பதில் இல்லை, ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கமும் கேட்கப்படவில்லை என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அதற்கு பிறகும் இரண்டு வாரம் ஆளுநர் தரப்பில் அசைவில்லை. ஆளுநரை நேரில் சந்திப்பதற்கும் வாய்ப்பு தரப்படவில்லை.
கடைசியில் நவம்பர் 24 அன்று ஆளுநர் விளக்கம் கேட்கிறார். முழுமையான தடை என்பது சென்னை உயர்நீதி மன்ற ஆணைக்கு முரணானது என்பது ஆளுநர் கேட்ட விளக்கம். தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள்ளாக பதில் தந்து விட்டது.
இது பகுதி தடை தான்; தேவையான அளவிற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பு சட்டத்தின் 7 வது அட்டவணை பட்டியல் 2ல் உள்ள பிரிவுகளின்படியே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதற்கு பிறகும் ஆளுநர் செய்த தாமதத்தால் அவசர சட்டமும் காலாவதியாகிவிட்டது.
மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனாதிபதி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக
- பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
கன்னியாகுமரி:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (சனிக்கிழமை) காலை கன்னியாகுமரி வருகிறார்.
அவரை வரவேற்பதற்காக வும் அவரது சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர்மாளிகைக்குவரும்அவருக்குமாவட்ட நிர்வாகம்சார்பில்சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் அவரை வரவேற்கிறார்கள். வரவேற்புநிகழ்ச்சிமுடிந்த தும் அவர் மாலை 6.20 மணிக்குகன்னியாகுமரி கடலில் சூரியன்மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன் பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசெல்கிறார். அங்குஅவர் பயபக்தியுடன் சாமிகும்பிடுகிறார். இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் காலையில் கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்கிறார். அதன் பிறகு அவருடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார். ஜனாதி பதி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கேரளா புறப்பட்டு சென்றதும் கவர்னர் ஆர்.என். ரவி சென்னை புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் வருகையையொட்டியும் கன்னியாகுமரியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு என வைகோ கூறியுள்ளார்.
- இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் கவர்னர்.
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து கவர்னர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்து விட்டன. சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்திவைத்தாலே நிராகரிப்பதாகி விடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. தலைவர்கள் குழு சந்தித்தது.
- நிதி அமைச்சர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என்றனர்.
சென்னை:
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக பேசியிருந்ததாகக் கூறப்படும் ஒலி நாடாவின் (ஆடியோ) உண்மைத்தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி பா.ஜ.க. தலைவர்கள் குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பார்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. தலைவர்கள் குழு இன்று மாலை சந்தித்தது. இந்தச் சந்திப்பின்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
- மாமல்லபுரத்தில் சி-20 சர்வதேச மாநாடு இன்று தொடங்கியது.
- இந்த மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம்:
உலகம் ஒரே குடும்பம் என்ற நோக்குடன் வசுதெய்வ குடும்பகம் என்ற பெயரில் சின்மயா மிஷன் நடத்தும் சி-20 சர்வதேச 3நாள் மாநாடு மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் அரங்கத்தில் இன்று தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சி-20 இந்தியா-2023 என்பது ஜி20-ன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும்.
இந்த சி-20 மாநாட்டில் ஆன்மிகம், ஒருமைப்பாடு மேலாண்மை, கலாசாரம், எளிமைத்துவம், மோதல் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் உணர்வு உள்ளிட்ட முன்னுதாரணங்களைப் பற்றி ஆராய்ந்து விவாதிக்க உள்ளனர்.
நாளை இசையமைப்பாளர் இளையராஜாவும், நாளை மறுநாள் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.
- இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை கவர்னர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்.
சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை? இது ஜனநாயக நாடா அல்லது கவர்னரின் சர்வாதிகார நாடா என கேள்வி எழுப்பினார்.
- இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
- பதவி நீக்கத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
சென்னை:
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, பதவி நீக்கத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ரவி நிறுத்தி வைத்துள்ளார் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அழுத்தத்தால் ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
- செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவு
- அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து
ஆளுநர் நடவடிக்கையை முதல்வர் தனக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும்: வானதி சீனிவாசன்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்க கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜி மீதான வழக்கை சுட்டிக்காட்டி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ரவி கிடப்பில் போட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான வானதி சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது:-
எந்தவொரு அரசியலமைப்பு கூறுகளை காப்பாற்ற ஆளுநர் இருக்கிறாரோ, எங்கு சட்டத்தினுடைய ஆட்சி நடைபெறுவதற்கு அரசு தடையாக இருக்கிறதோ, அப்போது இதுபோன்று நடவடிக்கை எடுக்க ஆளுநர் உள்ளாக்கப்படுகிறார்.
முதன்முதலாக செந்தில் பாலாஜி மீது அதிகமான குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பித்து வைத்தது இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இன்று செந்தில் பாலாஜி நீக்கப்பட்டிருக்கிறார் என்றால், இது அவர் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்க்க வேண்டும்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழாக என்னென்னவெல்லாம் அதிகாரங்கள் சட்டத்தினுடைய ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமே தவிர, இதை அரசியலா பார்க்கக் கூடாது.
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
- பிடே உலக கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது.
- இன்று நடந்த டைபிரேக்கரில் நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சென் வென்றார்.
சென்னை:
பிடே உலக கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.
இந்த இறுதிப்போட்டியின் முடிவில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், உலக கோப்பை செஸ் போட்டியில் 2-வது இடம்பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரக்ஞானந்தா, உங்களின் பிரமிக்கவைக்கும் புத்திக்கூர்மை மிக்க ஆட்டங்களால், ஒவ்வோர் இந்தியரின் இதயத்தையும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நீங்கள் மறுமலர்ச்சி தன்னம்பிக்கை இந்தியாவின் பிரதிபலிப்பு. இந்த தேசம் உங்களை மிகவும் நேசிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
- தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்.
- மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார்.
அவர் பதவி ஏற்றது முதல் தமிழக அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதனால் மோதல் போக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு அனுப்பும் கோப்புகளில் உடனுக்குடன் கவர்னர் கையெழுத்து போடுவதில்லை. ஒவ்வொரு கோப்பு மீதும் பல்வேறு விளக்கங்களைப் பெற்று அதில் திருப்தி அடைந்தால்தான் கவர்னர் கையெழுத்து போடுகிறார். மற்ற கோப்புகளை நிலுவையில் வைத்து அதை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விடுகிறார்.
அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், நான் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம் என்று சொல்லி இருந்தார்.
தற்போது 25 சட்ட மசோதாக்களுக்கு அவர் கையெழுத்திடாமல் உள்ளார்.
ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அதற்கு கவர்னர் முதலில் ஒப்புதல் அளிக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பிறகு 2-வது முறையாக சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பிய பிறகுதான் வேறுவழியின்றி அந்த மசோதாவில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
இதேபோல், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகர வளர்ச்சி குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் கவர்னரின் கை யெழுத்துக்காக நிலுவையில் உள்ளது.
இதுமட்டுமின்றி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழக சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவையும் நிலுவையில் உள்ளது.
இந்த சட்ட மசோதா உள்பட 25 சட்ட மசோதாக்களுக்கு அதிகமான கோப்புகள் மீது கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு போதிய விளக்கம் அளித்தும், நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அதன்மீது முடிவெடுத்து கையெழுத்திடாமல் கவர்னர் உள்ளதால் தமிழக அரசு அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளது.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாட் டிற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200-வது பிரிவின்கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். கவர்னர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழக அரசு இந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது.
இந்த வழக்கு அனேகமாக சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
- தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்திய விடுதலை போராட்டத்துக்காக சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்திய விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள்.பல்வேறு மதம், மொழி, சாதி, இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்தியர்களையும் ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய தேசிய காங்கிரசை வழிநடத்தியவர் மகாத்மா காந்தி. அவரது விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழக நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையிலும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு விடுதலையை பெற்றுத் தந்தது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் என்றும், மகாத்மா காந்தி அல்ல என்றும் கூறியிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கை பெருமையாக பேசுவதற்கு பதிலாக அவரை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுவது வரலாற்றுத் திரிபுவாதமாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை அங்கீகரித்து அவரது வாழ்த்துகளை பெற்றவர் சுபாஷ் சந்திரபோஸ். விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை முறையை கையாண்டவர் மகாத்மா காந்தி. அதற்கு மாறாக, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தியவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர்களது பங்களிப்பை அனைத்து இந்தியர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு போற்றி பாராட்டி வருகிறார்கள்.
இவ்விருவரிடையே பேதம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை ஆர்.என். ரவி கூறியிருப்பது வரலாற்றை சரியாக அறிந்தும் அதை திரித்து பேசுவது மலிவான அரசியலாகும். இதை அவர் அரசியல் உள்நோக்கத்தோடு செய்து வருகிறார்.மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தியாகி என்று போற்றுகிற பாரம்பரியத்தில் வந்த ஆர்.என். ரவி போன்றவர்கள் இத்தகைய கருத்துகள் கூறுவதை எவரும் அனுமதிக்க முடியாது.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியாக உலகம் போற்றி மகிழும் மகாத்மாவின் பெருமைகளை சிறுமைப்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற ஜன. 27 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிப்பார்கள். அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் தங்களது மாவட்டத்துக்குட்பட்ட ஏதாவது ஒரிடத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் அடையாளமாக உலக நாடுகள் மத்தியில் போற்றத்தக்க வகையில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுபவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. அவரை கொச்சைப்படுத்துவது 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்துவதாகும். அதை அனுமதிக்க முடியாத வகையில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தீவிர முனைப்புடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.