search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small grains"

    • 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
    • முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலம் வேதாரண்யம் வட்டாரத்தில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா வட்டார இயக்க மேலாண்மை அலுவ லகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு வட்டார இயக்க மேலாளர் அம்பு ரோஸ்மேரி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வேதாரண்யம் வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், தோப்புத்துறை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி மற்றும் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரித்த ஊட்டச்சத்து நிறைந்த 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தி வைத்திருந்தனர்.

    பின்பு, ஊட்டச்சத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    • திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில் குடிமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • வேளாண் உதவி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில் குடிமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் வேளாண் உதவி இயக்குநர் வசந்தா, வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள், மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அன்றாட உணவில் அரிசி, கோதுமையை அதிக அளவு சேர்த்து கொள்கிறோம். இதிலிருந்து கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே அதிகமாக கிடைக்கிறது. ஆனால் மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, சாமை, திணை, வரகு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றில் காணப்படுகிறது. எனவே ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றில் புதிய ரகங்களாக சோளம் கோ-32, கம்பு ரகங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதிக சத்துக்கள் , மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

    சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு கோடை உழவு, விதைநேர்த்தி, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரம், நுண்ணுாட்டச்சத்து மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார். மேலும் உழவர் கடன் அட்டை குறித்து வேளாண் அலுவலர் சுனில்கவுசிக் பேசினார். முகாமில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விரிவான கையேடு, பேட்டரி தெளிப்பான், இடுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன. இதில் வேளாண் உதவி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காய்கறி விற்பனை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று 2-ம் ஆண்டு ெதாடக்க நாளையொட்டி சிறுதானிய உணவு மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட வேளாண் வணிக இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் மாலை நேர காய்கறி விற்பனை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று 2-ம் ஆண்டு ெதாடக்க நாளையொட்டி சிறுதானிய உணவு மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட வேளாண் வணிக இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கஞ்சமலை பயறு சிறுதானிய உழவர் உற்பத்தியாளர்கள் குழுவினர் சார்பில் சிறுதானிய உணவுகளான தினை சர்க்கரை பொங்கல், வரகு காய்கறி சாதம், குதிரைவாலி சாம்பார் சாதம், சாமை வெண் பொங்கல், தயிர் சாதம், சிறுதானிய இனிப்பு, கார வகை உணவு ஆகியவை 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி வேளாண் அலுவலர் தங்கராசு, விவசாயி மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 40 விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறை குறித்த பயிற்சி நடைபெற்றது.
    • இப்பயிற்சிக்கு, வேளாண்மை அலுவலர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் நெய்யமலை கிராமத்தைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறை குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு, வேளாண்மை அலுவலர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை இணை பேராசிரியர் சரவணன், வேளாண்மை உதவி அலுவலர் கார்த்திக், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோகிலப்பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா ஆகியோர் விவசாயிகளுக்கு, செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.

    • சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
    • சிறுதானியங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது சிறுதானிய உற்பத்தியும் அதிகரிக்க கூடும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே வேளாண்மை துறையின் சார்பில் அந்தியூர் வட்டாரத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (உட்ட மிகு சிறுதானியங்கள்)திட்ட த்தின் கீழ் திட்டம் குறித்தும் சிறுதானியங்களின் பயன்கள் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தியூரில் திட்ட விளக்க வாகன பிரச்சா ரத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இந்திய அரசின் பரிந்து ரையை ஏற்று 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்ட ங்களை வகுத்துள்ளது. மேலும் பொது மக்களி டையே சிறு தானியங்கள் பயன்பாட்டி னை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திட்ட விளக்க விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இத்திட்ட விளக்க வாகன பிரச்சாரத்தில், சோளம், கம்பு, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி, பணி வரகு ஆகிய ஊட்டமிகு சிறு தானியங்களின் பயன்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பல்வேறு நன்மை களை பொது மக்க ளிடம் விளக்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

    சிறுதானியங்களின் பயன்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:-

    மக்களிடம் மாறி வரும் நவீன உணவு பழக்க வழக்கங்களால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படு கின்றது.இதனை தடுக்க சிறுதானி யங்களை அதி கமாக எடுத்து கொள்வதன் அவசியம் குறித்து வேளா ண்மை துறை யின் சார்பில் விழி ப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வரு கின்றது.

    சிறுதானியங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது சிறுதானிய உற்பத்தியும் அதிகரிக்க கூடும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு சின்ன துரை மாணவ -மாணவிகளுக்கு நிலக்கடலை, சுண்டலை வழங்கி துவக்கி வைத்து பேசினார்.
    • தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடைவேளையின் போது சிறுதானிய உணவுகள் மற்றும் பயறு வகைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் பாஸ்கரன், சக்கரபாணி, தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு சின்ன துரை மாணவ -மாணவிகளுக்கு நிலக்கடலை, சுண்டலை வழங்கி துவக்கி வைத்து பேசினார்.

    தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது. சிறுதானியங்கள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன என்றார்.

    முடிவில் கலை ஆசிரியர் அன்புமணி நன்றி கூறினார்.

    • மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.
    • வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2023-24 சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமும், சிறுதானிய உணவு பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தும் வண்ணமும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    பெறப்படும் விண்ணப்பங்களை மாவட்ட அளவிலான குழுவினால் கூர்ந்தாய்வு செய்யப்படும்.

    மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு , உற்பத்தியாளர் குழுக்கள் , கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்யப்படும்.

    தகுதியுள்ள சுயஉதவிக் குழுக்கள் இல்லை எனில் சம்மந்தப்பட்ட குழு கூட்டமைப்பு தீர்மானத்தின் அடிப்படையில் அருகாமையில் உள்ள வேறு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்படும்.

    மகளிர் குழு துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிறுக்க வேண்டும். NRLM MIS இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

    கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு A அல்லது B சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

    சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறு தானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் தொடர்புடைய ஊராட்சி

    ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரை தொடர்புகொண்டு வரும் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல் தூற்றுவது முதல் சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை முழுவதும் எந்திரங்களை பயன்படுத்த முடிவு.
    • புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்ட மேற் கூரையுடன் கூடிய நெல்சேமிப்பு தளங்களை உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலர்
    ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நெல் சேமிப்புக் கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து இழப்பு ஏற்படு வதைத் தடுப்பதற்காகத் தமிழகத்தில்
    213 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்துவது தொடர்பாக பணியாளர்களிடம் கலந்தாலோசனை செய்தோம். இதன் மூலம் பக்கவாட்டில் தார்பாய் மட்டும் போட்டால் போதும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக ்கோட்டையில் ரூ. 1 கோடி மதிப்பில் பரிசோதனை அடிப்படையில் நெல் கொள்முதல் பெருநிலையம் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

    இதில், 400 டன்கள் கொள்ளளவு கொண்ட அனைத்து பணிகளுமே தானியங்கி மூலம் செயல்படுத்தும் விதமாக முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் நெல் தூற்றுவது முதல் சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை முழுவதும் எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தப் பரிசோதனை வெற்றி பெற்றால், தொடர்ந்து இத்திட்டம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லப்படும்.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு 2.31 லட்சம் மெட்ரிக் டன்கள் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இதுவரை 35.73 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 4.41 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 7 ஆயிரத்து 891 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் அறுவடைப்பணிகள் நடைபெறுகின்றன.தமிழகத்தில் 35 ஆயிரத்து 941 நியாய விலைக் கடைகள் நடத்தப்படுகின்றன. புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    கூட்டுறவுத் துறை மூலம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு விவசாயக் கடனாக ரூ. 13 ஆயிரத்துக்கு 442 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு தமிழக முதல்வர் ரூ. 14 ஆயிரம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    நிகழாண்டு உலக சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் கேழ்வரகு சாகுபடி தொடங்கப் படுகிறது. கேழ்வரகை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாகவும், மற்ற சிறுதானிய பயிர்களைக் கூட்டுறவு மூலமாகவும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை பதிவாகாமல் போகும் நிலையில், அவர்களைத் திருப்பி அனுப்பாமல், அதற்கென உள்ள படிவத்தை நிறைவு செய்து கொடுத்து, பொருட்களைச் பெற்றுச் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் பிரபாகரன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • சிறுதானிய பயன்பாடு அவசியம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு கோத்தகிரியில் நடந்தது.
    • கேழ்வரகு , வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் அபரிவி தமான சத்துக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அரவேணு,

    உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் சிறுதானிய பயன்பாடு அவசியம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு கலை நிகழ்ச்சிகள் கோத்தகிரியில் உள்ள தனியார் மண்ட பத்தில் நடந்தது.

    கருத்தரங்கில் எதிர்கா லத்தில் உணவும், தண்ணீரும் பற்றாக்குறை ஏற்படும் சூழலிலும் சிறுதானியங்கள் தான் நம்மை பாதுகாக்கும் உணவாகும் என வலியுறுத்தப்பட்டது.

    மனிதருக்கு தேவையான சரிவிகித உணவை புஞ்சை தானியங்களான பயிர்கள் மட்டுமே தர முடியும். இதனை உற்பத்தி செய்ய குறைந்த அளவே தண்ணீர் போதுமானது. மேலும் சிறுதானியங்கள் பருவ கால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கி வளரும் தன்மை கொண்டதாகும்.

    கேழ்வரகு , வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் அபரிவி தமான சத்துக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு அவசியமான உணவாகும். உடல் நரம்புகளுக்கு சக்தியை அதிகரித்து இதயம் சம்பந்தமான நோய்கள், வாய்ப் புண், வயிற்றுப்புண், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவைக்கு சிறுதா னியங்கள் நிவாரணியாகவும் விளங்குகிறது.

    துரித உணவு மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக உலகத்தில் 50 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளாக இருப்பதாகவும், 50 சதவீதம் தாய்மை பேறு அடையக்கூடிய வயதில் உள்ள பெண்களில் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வறிக்கை கூறுவதாக கருத்தரங்கில் தெரிவிக் கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.

    • செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.
    • பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் போராட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிரான பேரியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.

    ஒருங்கிணைப்பாளர்கள் தனபதி , வேணு ராஜசேகர், தங்க குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் , செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

    இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் 15 ஆம் தேதி சத்து மிகுந்த பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவுகளை தயாரித்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டம் நடத்த வேண்டும்.

    பாரம்பரிய அரிசி சிறுதானியங்களை கட்டுபடியான விலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மேல்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் வேலுமணி, ரவிச்சந்திரன், பாரதிதாசன், விக்னேஷ், அரு சீர் தங்கராசு, அருண் சுபாஷ், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம், செயல்பாடுகள் குறித்த தொழில்நுட்ப பயிற்சி.
    • சிறுதானியங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்ட உயிர் உரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கோடங்குடி ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செயல்பாடுகள் பற்றிய தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமை தாங்கினார்.

    வேளாண்மை துணை அலுவலர் பிரபாகரன், வேளாண்மை உதவி அலுவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் வரவேற்றார். சிறுதானியங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்டம் உயிர் உரங்கள் பயன்பாடுகள் குறித்த கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதனை விவசாயிகள் கண்டு களித்தனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் மதுமனா செய்திருந்தார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    • விவசாயிகளுக்கு உற்பத்தி குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அவிநாசி வட்டார ஊராட்சிகளுக்கு வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • உதவி தொழில்நுட்ப மேலாளா் (அட்மா திட்டம்) பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    திருப்பூர் :

    சத்துமிகு சிறு தானியங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திட்ட விளக்க பிரசார வாகனங்கள் அவிநாசி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டன.

    பொதுமக்களிடம் சத்துமிகு சிறு தானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு உற்பத்தி குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அவிநாசி வட்டார ஊராட்சிகளுக்கு வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதைத் தொடா்ந்து, அவிநாசி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மூன்று பிரசார வாகனங்களை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் தலைவா் சின்னக்கண்ணான் என்ற ஆறுமுகம், பேரூராட்சி மன்ற உறுப்பினா் சிவபிரகாஷ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

    வேளாண்மை அலுவலா்கள் செல்விசுஜி, சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி அலுவலா்கள் சின்னராஜ், நாகராஜ், தினேஷ், சம்பத்குமாா், வினோத்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் (அட்மா திட்டம்) பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    ×