search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart Classroom"

    • ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கந்தம்பாளையம் பகுதியில் அரசு ஊராட்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு பள்ளி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கந்தம் பாளையம் பகுதியை சேர்ந்த அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதற்கு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

    இதையடுத்து 30 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த தொடக்கப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 65 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தினமும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களுடைய பணிநேரம் போக மீதம் உள்ள நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைன் மூலம் ஆங்கிலத்தை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.

    ஆன்லைன் மூலமாக வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுடன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் வகுப்புகளை கற்பதுடன் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்கள்.

    இந்த அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை விட ஒரு படி உயர்ந்து தனியார் பள்ளி மாணவர்களை விட கூடுதலாக ஆங்கிலத்தில் தங்களது பேச்சு, எழுத்து திறன்களை மேம்படுத்தி உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பள்ளியில் உள்ள மாணவர்களின் ஒழுக்கத்திறனை மேம்படுத்தும் விதமாகவும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும், மாணவர்களின் வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அதனை கண்ட இடங்களில் தூக்கி வீசாமல் அதனை சேமித்து வைத்து பள்ளியில் ஒப்படைத்து வருகிறார்கள்.

    அந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்காக விற்பனை செய்து அதில் வரும் நிதியை கொண்டு பள்ளிக்கு பின்பு சிறிய அளவிலான தோட்டம் அமைத்து அதில் செடிகளை வைத்து மாணவர்களே பராமரித்து வருவதாகவும் அவற்றில் இருந்து வரும் காய்கறிகளை பள்ளி சத்து ணவு திட்டத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் பெருமையுடன் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் மூலமாக உதவி கரம் பெற்று ஏழை, எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை ஆங்கில வழியில் உயர்த்துவதுடன் மாணவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்திடவும் அவர்கள் வரும் காலங்களில் மேல் படிப்பிற்கு உதவுவ தாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார். 

    • நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் புதிய கற்றல் அனுபவத்தைத் தருவது ஸ்மார்ட் வகுப்பறைகளாகும்.
    • படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கற்கும் போது மாணவர்கள் மனதில் காட்சிகளாக பதிவாகி விடுகிறது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படம் கற்பதில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் புதிய கற்றல் அனுபவத்தைத் தருவது ஸ்மா ர்ட் வகுப்பறை களாகும். எழுத்துக்கள் மூலம் கற்பதை விடவும் படங்கள் மற்றும் வீடியோ க்கள் மூலம் கற்கும் போது மாணவர்கள் மனதில் காட்சிகளாக பதிவாகி விடுகிறது. இது மாணவ ர்களின் கற்றல் அனுபவ த்தை எளிதாக்கு கிறது.மேலும் ஸ்மார்ட் வகுப்ப றைகள், கணினி, ப்ரொ ஜெக்டர் உள்ளிட்ட வசதி களு டன் இணையதள இணைப்பும் கொண்டி ருப்பது மாணவ ர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரி யர்களுக்கும் மிகப் பெரிய வரமாகும். மாணவ ர்க ளுக்கு தேவையான எல்லா விதமான தகவல்களையும் சில நொடிகளில் திரையில் கொண்டு வர இணையம் உதவுகிறது. ஆனால் இத்தகைய ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் ஒருசில தனியார் பள்ளிகள் மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறைகளைப் பயன்படுத்தி கற்பிக்கின்றன.

    இந்தநிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் அரசின் திட்டத்தில் ஒரு மைல் கல்லாக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரம் நகராட்சி ஆரம்ப மற்றும் நடுநிலை ப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உடுமலை நகராட்சி 26 வது வார்டு டி.வி பட்டினம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொட ங்கப்ப ட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த வகுப்பறையை தி.மு.க. நகர செயலாளர் வேலுச்சாமி, நகர்மன்றத் தலைவர் மத்தீன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும் ஸ்மார்ட் வகுப்ப றைகள் இயக்கம் மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி.குமார்,நகர் மன்ற உறுப்பினர் அஸ்வதி விக்ரம்,நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து நிதியின் மூலம். ரூ 4.16 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • மு.க.ஸ்டாலின் நினைப்பதை செய்யக்கூடிய மாவட்டம் நெல்லை மாவட்டம் தான் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை யூனியன் பகுதியில் 35 பள்ளிகளிலும், களக்காடு யூனியனில் 21 பள்ளிகளிலும், மானூர் ஒன்றியத்தில் 59 பள்ளிகளிலும், நாங்குநேரி யூனியனில் 60 பள்ளிகளிலும், பாப்பாக்குடி யூனியனில் 24 பள்ளிகளிலும் சேரன்மகாதேவி யூனியனில் 9 பள்ளிகளிலும் என மொத்தம் 208 பள்ளிகளில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து நிதியின் மூலம். ரூ 4.16 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நாங்குநேரியில் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்றார்.

    அதனைதொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காணொலி காட்சி மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்து பேசுகையில்,

    'தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த வர்களது குழந்தைகளுக்கு மட்டும் தான் இந்த அறிவுதிறன் வகுப்பறை கிடைத்து வந்தது.

    ஆனால் இந்த திட்டத்தை கிராமங்களிலும், குக்கிராமங்க ளிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கும், நடுநிலைப் பள்ளிகளுக்கும் நம்முடைய பிள்ளைகள், பேரன், பேத்திகள், ஏழை, எளிய வீட்டு பிள்ளைகளுக்கும் ஒரு பைசா கூட செலவில்லாமல் வழங்க முடியும் என்பதை இன்றைக்கு நெல்லைச் சீமை தொடங்கி வைத்திருக்கிறது.

    சட்டப்பேரவை தலை வரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் சிறப்பாக பணியாற்றிக் இந்த திட்டத்தை குக்கிராமங்களுக்கும் கொண்டு சென்றுள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதை செய்யக்கூடிய மாவட்டம் நெல்லை மாவட்டம் தான் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

    தமிழகத்திற்கே ஒரு முன்னோடி மாவட்டமாக கல்வியில் சிறந்து விளக்குகின்ற மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. அறிவு திறன் வகுப்பறை திட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும்.

    கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அவரது வழியில் பள்ளிகளில் காலையில் நல்ல தரமான உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தி யுள்ளார்.

    கிராமபுறங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் நல்ல காற்றோட்டத்துடன் கல்வி பயில, புதிய தொழில் நுட்பத்துடன் விசாலமான வகுப்பறைகளை கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.800 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் கல்வி துறைக்கு ஒரே நேரத்தில் ரூ. 800 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் என்று முத்திரை பதித்துள்ளார்" என்றார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருப்பதி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் செல்வலெட்சுமி, கனகராஜ், சாலமோன் டேவிட், பாஸ்கர், மகேஷ்குமார், அருள் தவசு, ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி, தனிதங்கம், நகர திமுக செயலாளர் வானமாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு மாணவ-மாணவி களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. முன்னதாக நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் அமைச்சர் பெரியசாமி ஆய்வு நடத்தினார். அதன் பின் செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள அறிவு திறன் வகுப்பறையையும் அவர் பார்வையிட்டார்.

    • சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் பள்ளிகளை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து ''சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்'' என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டு, ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஒரு ஆண்டுக்கு இணையதள வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை அமைத்திட ரூ.56 லட்சத்து 60 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் மற்றும் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் ரூ.28 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த விரும்பும் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

    • மேலூர் அல் அமீன் உருது தமிழ் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை தாளாளர் தொடங்கி வைத்தார்.
    • பள்ளியின் தலைவர் காதர்மைதீன் தலைமை தாங்கினார்.

    மேலூர்

    மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடந்தது. பள்ளியின் தலைவர் காதர்மைதீன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். தாளாளர் எம்.ஓ. சாகுல் ஹமீது கட்டிடத்தை திறந்து வைத்தார். ஸ்மார்ட் வகுப்பு காணொலி காட்சியை முன்னாள் மாணவர் மனோஜ்குமார் தொடங்கி வைத்து பேசினார். தலைமை ஆசிரியர் சலீம் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ஷாஜகான், ஜபார், ராஜா முகமது, காஜாமைதீன், சித்திக் ராஜா, பிலால்முகமது, ராஜாமுகமது, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நூர்ஜகான் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் அப்துல்ரஹ்மான் நன்றி கூறினார். மேலூர் தாலுகா அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேலூர் அல் அமீன் பள்ளியில் முதன்முதலாக ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×