search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling tobacco"

    • புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடம்பூர்-மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் அஞ்சனை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு ஆம்னிவேன் வந்து கொண்டிருந்தது.

    அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான் மசாலாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்க ப்பட்டது.

    மொத்தம் 8 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

    இதனையடுத்து வேனில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கோபி அடுத்த துறையாம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்த முகமது யாசின் (39), கோபி அடுத்த நஞ்சன் கவுண்டன் பாளையம் பகுதி சேர்ந்த மாரிமுத்து (47) என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் கர்நாடகா மாநிலத்தி லிருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆம்னி வேன் மற்றும் 8 கிலோ புகையிலை பொருட்களை யும் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்
    தர்மபுரி:

    தர்மபுரி டவுன் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடைகளில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த குமார், மணிகண்டன் ஆகிய 2 பேர் சிக்கினார்கள்.

    இதேபோல் மதிகோன்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த சரவணன் என்பவர் சிக்கினார். இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேப்பனப்பள்ளி கவுண்டர் தெருவை சேர்ந்த கபர் (வயது 65), கொங்கனப்பள்ளி சாலையை சேர்ந்த சீனிவாசகவுடு (70), ஜாவித்(38), இனியாஸ் பாஷா (52), தொட்டகணவாய் சிவபிரசாத் (40), ராமர்கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்பாபு(40), முஸ்தபா (35) ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதே போல கே.ஆர்.பி. அணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது கே.ஆர்.பி. அணை பகுதியை சேர்ந்த ராமசாமி (51), பெரியமுத்தூரை சேர்ந்த ராமன் (36) ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேத்தாகுடி தெற்கு பகுதியில் அருள் என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது கடையில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல தோப்புத்துறையில் விஜயகுமார் (37) என்பவரது கடையில் சோதனை செய்த போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள், விஜயகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். 
    ×