search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snatched"

    • இவர் மேட்டு மருதூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மருதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
    • அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் லோகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை அறுத்து தப்பி சென்று விட்டார்.

    கரூர்

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல தண்ணீர் பள்ளியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லோகாம்பாள் (வயது 60). விவசாயி. இவர் மேட்டு மருதூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மருதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் லோகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை அறுத்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து லோகாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணிடம் நகை பறித்துசென்றனர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே வேலாயுதம்பட்டி- காரக்குண்டு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 42). இவரது மனைவி ரேணுகாதேவி (35). வேலாயுதம்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிசங்கி லியை பறித்து சென்றுள்ள னர்.

    இதுகுறித்து நத்தம் போலீசில் ரேணுகாதேவி புகார் அளித்தார். அதன்பே ரில் இச்சம்பவம் தொட ர்பாக நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த டேவிட் மனைவி சேவியர் அஞ்சல்மேரி (வயது 60). இவர் தனது 2 வது மகள் வீட்டிற்கு சென்று விட்டு நிலக்கோட்டை- மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜிடம் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பஸ்சில் யாரோ மர்மநபர் ஸ்ரீஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் வைர செயினை பறித்து தப்பி சென்றனர்.
    • ஸ்ரீஹரிணி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    ஈரோட்டைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் ஸ்ரீஹரிணி (வயது 19), இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2 ம் ஆண்டு படித்து வருகிறார், இவர் ராமநாதபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். ஸ்ரீஹரிணி பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு அறைக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது யாரோ மர்மநபர் ஸ்ரீஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் வைர செயினை பறித்து தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வைர செயினை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    தெற்கு உக்கடம்அருகே உள்ள புல்லுகாடு பகுதியை சேர்ந்த அங்கண்ணன். இவரது மனைவி சுகந்தி (39). சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும்பி.பி. வீதியில் நடந்து சென்றனர். அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுகந்தி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றார்.

    இதுகுறித்து சுகந்தி பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவருடன் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • கண்இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.
    • மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பவானி சங்கர் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ரங்கநாயகி(வயது72). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சுப்பு செட்டி வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி செயினை பிடித்தார். அப்போது அந்த வாலிபர்கள் அவர்கள் கையில் கிடைத்த 2 ½ பவுன் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    • ஜெயாகவுரி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
    • கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    குனியமுத்தூர்,

    கோவை வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி ஜெயாகவுரி (வயது 44). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஜெயாகவுரியை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயாகவுரி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த டாக்சி டிரைவர் அருண்குமார் (25) என்பது தெரியவந்தது. விசாரணை முடிந்ததும் போலீசார் கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • அரசு பெண் அலுவலரிடம் நகை பறித்தவரை சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் பிடித்தனர்.
    • இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் முத்துமாரி (32). இவர் தமுக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கணக்காள ராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 15-ந்தேதி மொபட்டில் முத்துமாரி தத்தனேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் முத்துமாரி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.

    இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் நடத்தி விசா ரணையில், முத்துமாரியிடம் நகையை பறித்தது நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி (37) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்று கொள்ளையனை கைது செய்தனர்.

    மூதாட்டியிடம் கைவரிசை

    மதுரை தனக்கன் குளத்தை சேர்ந்தவர் ரங்க ராஜ் மனைவி ராதாபாய் (62). இவர் சம்பவத்தன்று அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் பெரியார் பஸ் நிலையம் வந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராதாபாய் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டார்.

    இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பைக்கில் சென்று நகை பறித்த பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    மதுரை

    திருமங்கலம், உசிலம்பட்டி, வத்தலகுண்டு சுற்று வட்டாரப் பகுதி களில் கடந்த ஒரு மாதத்தில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. பைக்குகளில் வந்தவர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

    திருமங்கலம், நரி யம்பட்டி, உத்தப்ப நாயக்கனூர் பகுதிகளில் நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். விக்கிரமங்கலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும், வத்தலகுண்டு அண்ணாநகரை சேர்ந்த சரோஜா (41), அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா (22), நிலக்கோட்டை அருகே உள்ள தும்மலபட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தர்மா (24) என்பதும் தெரியவந்தது.

    மேற்கண்ட 3 பேைரயும் விக்கிரமங்கலம் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

    எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து ஓடிய வாலிபர் பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    மதுரை:

    மதுரையில் இதய பகுதியான பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    அதுபோல வழிப்பறி சம்பவங்களும் இங்கு அதிகம் நடந்து வருகிறது. போலீசார் அடிக்கடி ரோந்து வந்தாலும் மர்ம நபர்களின் வழிப்பறி அட்டகாசம் குறைந்தபாடில்லை.

    இன்று காலை திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மோகனா என்ற இளம்பெண் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கையில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    அந்த இளம்பெண் கூச்சல் போட்டதால் பொதுமக்கள் வழிப்பறி ஆசாமியை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். திண்டுக்கல் ரோடு வரை விரட்டிச் சென்று அந்த ஆசாமியை பிடித்த பொதுமக்கள் திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    சுமார் 23 வயது மதிக்கத்தக்க அந்த வழிப்பறி ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இளம்பெண்ணிடம் பறித்த செல்போனையும் மீட்டனர்.

    மர்மநபரை கைது செய்த போலீசார் இவருக்கு வேறு வழிப்பறி சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் நடந்த இந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×