என் மலர்
நீங்கள் தேடியது "Southern Railway"
- மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
- தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தெற்கு ரெயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
1000 கி.மீ.க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.
மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.
எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரெயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.
- உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது
- இரயில்வே தேர்வு வாரியத்தின் லோகோ பைலட் தேர்வுக்கு 6000. க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "இரயில்வே தேர்வு வாரியத்தின் லோகோ பைலட் தேர்வுக்கு 6000. க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோருக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டுமென்று இரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
- உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ரெயில் ஓட்டுனர் பணியில் தமிழக தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தொடர்வண்டி உதவி ஓட்டுனர் பணிக்கான (Assistant Loco Pilot) ரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு ஆந்திரம், தெலுங்கானம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களை அலைக்கழிக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இந்தப் பணிக்கான முதற்கட்ட கணினி முறை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், இப்போது நடைபெறும் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 6315 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். அவர்களுக்குக் கூட தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்காமல் பிற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது நியாயமல்ல. தமிழக தேர்வர்கள் திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுகின்றனரோ என்று தான் தோன்றுகிறது.
தொடர்வண்டி உதவி ஓட்டுனர் பணி என்பது தொடக்கநிலை பணிகளில் ஒன்றாகும். இத்தேர்வில் பங்கேற்க பல நூறு கி.மீ பயணித்து, அங்கேயே தங்கியிருந்து தேர்வு எழுதிவிட்டு திரும்புவது சாத்தியமல்ல. இது மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார்.
- தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இன்று(15.03.2025) திருப்பெரும்புதூர் விழா ஒன்றில் பேசிய ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது என்பது இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் புரியும்.
தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது, வரிவருவாயில் குறைந்த அளவு நிதிஒதுக்குவது, தமிழ்மொழிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது, சென்னை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் உள்ள முன்பதிவில்லாத பெட்டிகளை ஒன்றிய ரயில்வே துறை குறைக்க நடவடிக்கை எடுத்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான முதற்கட்ட தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6315 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாம் நிலைத்தேர்வுக்கு இவர்களில் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்துள்ளதாக தகவல் வருகிறது.
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தேர்வு எழுதி ஒன்றிய அரசு பணிகளுக்கு வராமல் தடுப்பதே இவர்களின் நோக்கம் என்று புரிகிறது. ஒன்றிய ரயில்வே துறையின் இச்செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்து தமிழ்நாட்டில் அவர்களை தேர்வு எழுத ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- லட்சக்கணக்கானோர் தங்கள் அன்றாட பணிகளுக்காக ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
- திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.
நெல்லை:
தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் தங்களின் அன்றாட பணிகளுக்காக இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
உத்தியோகம், மருத்துவ சிகிச்சை, குடும்ப நிகழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ரெயில்களில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக பின்வரும் ரெயில்கள் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை என மொத்தம் 25 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் மற்றும் திருச்செந்தூர்– திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- கும்பமேளாவினால் தமிழ்நாட்டில் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மகா கும்பமேளாவிற்காக வடக்கு மற்றும் மத்திய ரெயில்வேவுக்கு தெற்கு ரெயில்வே சார்பாக ரெயில் பெட்டிகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண்-67209) திருப்பதி - காட்பாடி பயணிகள் ரெயில் மார்ச் 13 முதல் 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடியில் இருந்து காலை 06.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67206) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் திருப்பதியில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67207) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67208) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் சேவை மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67205) திருப்பதி - காட்பாடி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து இரவு 21.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67210) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 66017) காட்பாடி - ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து காலை 12.55 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 66018) ஜோலார்பேட்டை - காட்பாடி பயணிகள் ரெயில் மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
- இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல்-மே மாதங்களில் விடப்படுகிறது. கோடை விடுமுறையின்போது பேருந்துகள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே, கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் இருந்து 27-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் கோடை கால அதிவேக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் அதிவேக ரெயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கோரிக்கை ஏற்று சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
- நாய்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான முழு பொறுப்பும் பயணிகளுடையது.
- நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை உரிமையாளர்தான் செய்ய வேண்டும்.
சென்னை:
ரெயில்வேயில் உள்ள வசதிகள், ரெயில்கள் இயக்கம், தொழில்நுட்பம், பாதுகாப்பு தொடர்பாக பயணிகளிடம் விளக்கும் வகையில் 'உங்கள் ரெயில்வே பற்றி தெரிந்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் தெற்கு ரெயில்வே தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள், விலங்குகள், பறவைகளை ரெயிலில் எடுத்து செல்வதற்காக உள்ள வசதிகள் குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
யானை, குதிரை, கழுதை, செம்மறி ஆடு, நாய் உள்ளிட்ட பிற விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றை ரெயில்களில் ஏற்றிச் செல்லலாம். அவற்றை ஏற்றிச்செல்வதற்கான விவரங்களை ரெயில் நிலையங்களில் பெறலாம்.
மற்ற விலங்குகளை விட வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய், பூனை போன்றவற்றை பயணிகள் ரெயில்களில் தங்களுடன் அழைத்துச்செல்ல விரும்புகிறார்கள். செல்லப் பிராணியான நாய்களை முதல் ஏசி வகுப்பிலும், ரெயில் மேலாளரின் மேற்பார்வையின் கீழ் லக்கேஜ் மற்றும் பிரேக் வேனில் எடுத்துச் செல்லவும் பதிவு செய்யலாம்.
பயணிகள் தாங்கள் பயணிக்கும் பெட்டியில் நாயை அழைத்துச் செல்ல ஏசி முதல் வகுப்பு, கூபே தங்குமிடத்தை பிரத்தியேகமாக முன்பதிவு செய்ய வேண்டும். பயணியின் ஒரு டிக்கெட்டில் ஒரு நாய் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்காக கட்டணமும் வசூலிக்கப்படும்.
ரெயில் புறப்படுவதற்கு 3 மணிநேரத்துக்கு முன்பு நாயை லக்கேஜ் அல்லது பார்சல் அலுவலகத்துக்கு அழைத்து வர வேண்டும். பொது பயணிகள் பெட்டிகளில் நாயை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறையாக முன்பதிவு செய்யாமல் நாய்களை ஏற்றிச்சென்றால் 6 மடங்கு லக்கேஜ் கட்டணம் விதிக்கப்படும்.
எந்த தொற்று நோய்களாலும் நாய் பாதிக்கப்படவில்லை என்று கால்நடை மருத்துவரிடம் பயணத்திற்கு 24 மணி முதல் 48 மணி நேரத்திற்கு முன்பு சான்றிதழ் பெற வேண்டும். முன்பதிவு செய்யும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
நாய்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான முழு பொறுப்பும் பயணிகளுடையது. நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை உரிமையாளர்தான் செய்ய வேண்டும்.
அனைத்து ரெயில்பெட்டிகளிலும் நாய்களை கூடைகளில் எடுத்து செல்லலாம். அதற்காக பயணிகள், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் சரியான அடையாள சான்று வைத்திருக்க வேண்டும்.
நாயை ஏற்றி பெட்டிக்குள் அடைக்கும் முன்பு அதன் உரிமையாளர் நாயை வாய் காப்புடன் சரியாக சங்கிலியால் பிணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- சபரிமலையில் பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சபரிமலையில் பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
* சென்னை எழும்பூர்-கொல்லம் (06061) இடையே புதன்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 7, 14, 21, 28-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
* கொல்லம்-எழும்பூர் (06062) இடையே வியாழக்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 17, 24-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
* எழும்பூர்-கொல்லம் (06063) இடையே வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 18, 25-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 2, 9, 16, 23, 30-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6, 13, 20, 27-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
* கொல்லம்-எழும்பூர் (06064) இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 20, 27-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
* எழும்பூர்-கொல்லம் (06065) இடையே திங்கட்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 21, 28-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2, 9, 16, 23-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
* கொல்லம்-எழும்பூர் (06066) இடையே செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 22, 29-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 6, 13, 20, 27-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3, 10, 17, 24-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
- 5 விரைவு ரெயில்களும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்னைக்கு சென்றுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் ரெயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த வழியாக ஏராளமான ரெயில்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று வருகிறது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லக்கூடிய பொதிகை, முத்துநகர், சேது எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி விரைவு ரயில், அனந்தபுரி, ஆகிய 5 விரைவு ரெயில்களும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்னைக்கு சென்றுள்ளது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
- வெளியூர் பயணத்தின்போது, ஆங்காங்கே பிரபலமான உணவுகளை பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
- சதாப்தி, ராஜ்தானி போன்ற ரெயில்களில் பயணிகளுக்கான கட்டணத்தில் உணவுக்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரெயில் பயணத்தின்போது, பயணிகளுக்கான உணவுகளை வழங்க ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவு விநியோக சேவையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகை கள், பருவகால உணவு வகைகள், பண்டிகைகால உணவுகள் என பல்வேறு தொகுப்பு உணவுகளை ஐஆர்சிடிசி (இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்)யின் இணைய தளம் அல்லது செயலி வாயிலாக பெறலாம்.
வெளியூர் பயணத்தின்போது, ஆங்காங்கே பிரபலமான உணவுகளை பெறும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு, சிறு தானிய அடிப்படையிலான உள்ளூர் தயாரிப்புகள் உள்ளிட்ட ஆரோக்கியம் சார்ந்த உணவு என பயணிகள் தாங்கள் விரும்பிய உணவுகளை தேர்வு செய்யலாம். சதாப்தி, ராஜ்தானி போன்ற ரெயில்களில் பயணிகளுக்கான கட்டணத்தில் உணவுக்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே உணவுக்கான கட்டணம் செலுத்தியும் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்:
தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா எம்.எல்.ஏ., தெற்கு ரெயில்வே புதிய பொது மேலாளர் ஆர். என். சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.அதில் கூறியுள்ளதாவது:-
நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கும் தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயில்களாக இயக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரியாக மாற்ற வேண்டும்.
நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை, பெங்களூர் வழியாக மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். தமிழகத்திற்கு பயனில்லாமல் இயக்கப்படும் திப்ரூகர் - கன்னியாகுமரி ரெயிலை மதுரை, நெல்லை வழியாக இயக்க வேண்டும்.
நெல்லை, தாம்பரம் ரெயிலுக்கு சங்கரன்கோவில் ரெயில் நிறுத்தமும், நெல்லை, பாலக்காடு பாலருவி ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தமும் வழங்க வேண்டும். முருக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் ரெயில் நிலையத்தின் நடைமேடைகளை நீட்டித்து, கூடுதல் நடை மேடைகளுடன் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படுவதாக பொது மேலாளர் கூறினார். தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூரு, மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கவும், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பொது மேலாளர் கூறினார் என தெரிவித்தார்.