என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "specialty"
- புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வட கரையாத்தூர் ஊராட்சி ஜேடர்பாளையம் அருகே பள்ளாபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பயிற்சி மையம்
பயிற்சி மையத் தொடக்க விழாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து
கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா, மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கி ணைப்பாளர் ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா குணசேகரன், கபிலர்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்கல்வி
பயிற்சி மையத்தில் வடகரையாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பு ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையத்தில் தொடர் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பயிற்சி மைய தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை வட்டார பள்ளி செல்லா குழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.
- மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது.
- வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் ரோட்டில் கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது . இது குறித்து நாமக்கல் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மின் விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் நகரம், வளையப்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதன்சந்தை, புதுசத்திரம், காளப்பராயப்பன்பட்டி, பேளுகுறிச்சி, கொல்லி மலை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் ரோட்டில் கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் வீடு மற்றும் கடைகள் மின் இணைப்புகளுக்கு வீட்டு வரி ரசீது, பத்திர நகல் , வாரிசுதாரிடம் இருந்து ஆட்சேபனை இன்மை கடிதம் கொண்டு வரவேண்டும். விவசாய மின் இணைப்பு–களுக்கு பத்திர நகல் அல்லது பட்டா, கிராம நிர்வாக அலுவலரின் உரிமை சான்று, புலவரைபடம், தாழ்வழுத்த ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
தொழில்துறை மின் இணைப்புகளுக்கு தாழ்வ–ழுத்த ஒப்பந்த பத்திரம், சொத்து வரி ரசீது, பத்திர நகல் போன்ற சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பெயர் மாற்றம் செய்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ராகி, திணை, சாமை,ஆரியம் ஆகிய சிறுதானியங்கள் விளைகின்றன.
- அவற்றை வைத்து உணவு பொருட்கள் தயாரித்து அதனை மெருகூட்டி எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்த பயிற்சி ஏற்காடு தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ராகி, திணை, சாமை,ஆரியம் ஆகிய சிறுதானியங்கள் விளைகின்றன. அவற்றை வைத்து உணவு பொருட்கள் தயாரித்து அதனை மெருகூட்டி எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்த பயிற்சி ஏற்காடு தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
சென்னை மகளிர் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் ஏற்காடு சுய உதவி குழு இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில் மலை கிராம மக்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் சாமை கேக், ராகி நூடுல்ஸ்,தினை அல்வா, வரகு பொங்கல் பலவகை சிறு தானிய முறுக்கு மற்றும் பல உணவு பொருட்கள் செய்வது எப்படி என்றும் அதை சந்தைப்படுத்துவது எப்படி? அவை ஒரு சிறிய தொழிலாக செய்ய விரும்பினால் உணவு பாதுகாப்பு துறை மூலமாக வழங்கப்படும் சான்றிதழ் பெறுவது எப்படி என்றும் மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சென்னை மகளிர் கிறிஸ்டியன் கல்லூரி தலைமை ஆசிரியை அரிமா, ஏற்காடு தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஜெய்பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏற்காட்டில் விளைய கூடிய பீன்ஸ் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இது வரை செய்யப்பட்ட ஆய்வில் பீன்ஸில் அதிபடியான புரத சத்து, பல வகையான வைட்டமின் இருப்பதாக கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்