search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் விளையகூடிய சிறு தானிய உணவுகளை சமைத்து சந்தைபடுத்த சிறப்பு பயிற்சி
    X

    ஏற்காட்டில் விளையகூடிய சிறு தானிய உணவுகளை சமைத்து சந்தைபடுத்த சிறப்பு பயிற்சி

    • ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ராகி, திணை, சாமை,ஆரியம் ஆகிய சிறுதானியங்கள் விளைகின்றன.
    • அவற்றை வைத்து உணவு பொருட்கள் தயாரித்து அதனை மெருகூட்டி எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்த பயிற்சி ஏற்காடு தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ராகி, திணை, சாமை,ஆரியம் ஆகிய சிறுதானியங்கள் விளைகின்றன. அவற்றை வைத்து உணவு பொருட்கள் தயாரித்து அதனை மெருகூட்டி எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்த பயிற்சி ஏற்காடு தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

    சென்னை மகளிர் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் ஏற்காடு சுய உதவி குழு இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில் மலை கிராம மக்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் சாமை கேக், ராகி நூடுல்ஸ்,தினை அல்வா, வரகு பொங்கல் பலவகை சிறு தானிய முறுக்கு மற்றும் பல உணவு பொருட்கள் செய்வது எப்படி என்றும் அதை சந்தைப்படுத்துவது எப்படி? அவை ஒரு சிறிய தொழிலாக செய்ய விரும்பினால் உணவு பாதுகாப்பு துறை மூலமாக வழங்கப்படும் சான்றிதழ் பெறுவது எப்படி என்றும் மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சென்னை மகளிர் கிறிஸ்டியன் கல்லூரி தலைமை ஆசிரியை அரிமா, ஏற்காடு தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஜெய்பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏற்காட்டில் விளைய கூடிய பீன்ஸ் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இது வரை செய்யப்பட்ட ஆய்வில் பீன்ஸில் அதிபடியான புரத சத்து, பல வகையான வைட்டமின் இருப்பதாக கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×