என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports competition"

    • அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன.
    • மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் கிராமப்புறங்களில் மாணவா்கள் இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆா்வத்தை ஏற்படுத்தவும் கடந்த 2006ஆம் ஆண்டுதி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

    இந்த விளையாட்டு சாதனங்கள் ஊராட்சி நிா்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மைதானங்கள் பராமரிக்கப்படவில்லை.

    பின்னா் கடந்த 2020ம் ஆண்டில் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கிராமம்தோறும் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.

    தற்போது, அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதா் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் விளையாட்டு பயிற்சி உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டன. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது, விளையாட்டில் சாதிக்க நினைப்பவா்களுக்கு கிராமங்களில் எவ்வித வசதியும் இல்லை. எனவே கிராமப்புற மைதானங்களை பராமரித்து உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். இதற்கு சிறப்புக் குழு அமைத்து மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். கிராமம்வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இளைஞா்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • ரூ.15 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது
    • பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு விளையாட்டு பாட வேளையில், விளையாட தேவையான ரூ.15 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு பொருட்கள் பிடிஏ மற்றும் எஸ்எம்சி சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் தலைமை ஆசிரியர் பாபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • எம்.எல்.ஏ, ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு மாவட்ட அளவில் அதிக இடங்களில் முதல் இடம் பிடித்துள்ளனர்.

    அவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

    வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினார்.

    இதில் ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக் மற்றும் பள்ளியின் கல்விக் குழு தலைவர், உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர்.

    • போலீசாரின் மன அழுத்தத்தை போக்கவும், பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • முதல் பரிசு உத்தமபாளையம் கோட்ட போலீஸ் அணி, 2-ம் பரிசு ஹை டெக் ராயல் அணி, 3-ம் பரிசை கம்பம் கள்ளர் பள்ளி அணிகளுக்கும் வழங்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கவும், பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையிலும் விளையாட்டுப் போட்டிகள் கம்பம் ஏல விவசாயிகள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஓட்டப்பந்தயம், வாலிபால், கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    அதன் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுக்குமாரி கலந்து கொண்டு போலீசார் மற்றும் பொதுமக்கள் சார்பில் பங்கேற்ற இளைஞர்களுக்கு உடல் திறன் பேணிக்காத்தல் அதன்மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

    மேலும் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் முதல் பரிசு உத்தமபாளையம் கோட்ட போலீஸ் அணி, 2-ம் பரிசு ஹை டெக் ராயல் அணி, 3-ம் பரிசை கம்பம் கள்ளர் பள்ளி அணிகளுக்கும் வழங்கப்பட்டது. இதில் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன், ஏலவிவசாயிகள் மேல்நிலை பள்ளி தாளாளர் திருமலைசேகர், ஆர்.ஆர் பள்ளி தாளாளர் அசோக், மற்றும் பயிற்சி பள்ளி அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது
    • இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவினை முன்னிட்டு சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது.இதில் பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்றவர்களின் விவரம்:- சிலம்பம் போட்டியில் எம். சத்யா (தங்கம்), மோகனா (தங்கம்), காவியா (வெள்ளி) ஆகியோர் வென்றுள்ளனர் . இதேபோல் டேக்வாண்டோ பிரிவில்14 ,17 ,19 வயதுக்குட்பட்ட போட்டியில் பி .வர்ணா (வெண்கலம்),எம்.சுதர்சனா (வெள்ளி),சுபினயா (வெண்கலம்),ஆர். பௌத்ரி (வெண்கலம்),ஜி. கௌசல்யா (வெள்ளி), சினேகா (வெள்ளி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தாதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர். போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்த சரவணமுத்துக்கு பள்ளியின் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
    • போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரண்மனைபுதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பொட்டேட்டோ கேதரிங், கலெக்டிங் தி பால்ஸ், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி துவக்கி வைத்தார்.


    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் டிசம்பர் 3ந்தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

    மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், பள்ளிக்கல்வி குழு நிர்வாகி மார்க்கெட் தங்கவேல், மற்றும் ஜெகதீஷ்,குட்டி பழனிசாமி, நடராஜன்,துணை தலைமை ஆசிரியர் சசிகலா, மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார வளமையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீனாட்சி முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் துவக்கி வைத்தார்.போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    • 19 வயது பிரிவினருக்கான மாநில, குழு விளையாட்டு போட்டி 10ந் தேதி வரை நடக்கிறது.
    • 242 பேர் அடங்கிய குழு அணியினர் நாமக்கல் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பர்.

    திருப்பூர் : 

    பள்ளி கல்வித்துறை சார்பில் நாமக்கல், கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 19 வயது பிரிவினருக்கான மாநில, குழு விளையாட்டு போட்டி 10ந் தேதி வரை நடக்கிறது

    இதில் பங்கேற்க திருப்பூர் மாவட்ட அணிகளுக்கு வழியனுப்பு விழா ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ள திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவிகள் விவரம் வருமாறு: - உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி, உடுமலை லுார்துமாதா கான்வென்ட் மெட்ரிக் பள்ளி (கால்பந்து), ஆர்.வி.ஜி., குறிச்சிக்கோட்டை மாணவர் மற்றும் மாணவிகள் அணி (ஹாக்கி), தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், செயின்ட் அலோசியஸ் பள்ளி (கூடைப்பந்து). காங்கயம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி, காங்கயம், கார்மல் பெண்கள் பள்ளி (கோ கோ), மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கபடி), திருப்பூர் வேலவன் மெட்ரிக் பள்ளி, வித்யவிகாசினி மெட்ரிக் பள்ளி (வாலிபால்).

    பொங்கலூர் பி.வி.கே.என்., அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி (த்ரோபால்), ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி, காங்கயம் கார்மல் பள்ளி (ஹேண்ட்பால்), சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி, வித்யவிகாசினி பள்ளி (பால்பேட்மின்டன்), சென்சுரி பவுண்டேசன் பள்ளி, பிரன்ட்லைன் பள்ளி (பேட்மின்டன் - தனிநபர்), (பேட்மின்டன் - குழு) தி பிரன்ட்லைன் அகாடமி, கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம், ஆதர்ஸ் வித்யாலயா (டேபிள் டென்னிஸ் - தனிநபர்), ஏ.வி.ஏ.டி., பள்ளி, சாமளாபுரம் கொங்கு வேளாளர் பள்ளி (டேபிள் டென்னிஸ் - குழு) ,டீ பப்ளிக் மெட்ரிக் பள்ளி, பிளாட்டோஸ் மெட்ரிக் பள்ளி (டென்னிஸ் - தனிநபர், குழு) உள்ளிட்ட 242 பேர் அடங்கிய குழு அணியினர் நாமக்கல் பயணமாகியுள்ளனர். வருகிற 10-ந் தேதி வரை நடக்கும் போட்டிகளில் இவர்கள் பங்கேற்பர்.

    • குத்துச்சண்டை போட்டியில் 17வயதுக்கு உள்பட்ட பிரிவில் முதலிடம் வென்று தங்கம் பதக்கம் பெற்றனர்.
    • போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் கவிதா ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

    அவிநாசி : 

    பாரதியார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி அண்மையில் திருப்பூர் ஜெய்வபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு மாணவர்கள் குருபிரசாத், கவின், பயாஸ் அகமது ஆகியோர் குத்துச்சண்டை போட்டியில் 17வயதுக்கு உள்பட்ட பிரிவில் முதலிடம் வென்று தங்கம் பதக்கம் பெற்றனர்.

    மாணவன் பிரதீப் ஜூடோ போட்டியில் முதலிடம் வென்று தங்கம் பதக்கம் பெற்றார். இவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.

    மேலும் குத்துச்சண்டை, ஜூடோ ஆகிய போட்டிகளில் 17 பேர் முதல்3 இடங்களை பெற்றுள்ளனர். இதேபோல சமூக அமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு 14 கிலோ மீட்டர் மராத்தான் போட்டியில் 11ம் வகுப்பு மாணவன் தனுஷ் 5ம் இடமும், 10ம் வகுப்பு மாணவன் கமலேஸ் 6ம் இடமும் வென்றனர்.

    போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் கவிதா ஆகியோருக்கு தலைமையாசிரியர் ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

    • மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும், குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் கருப்பசாமி வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

    சிவகிரி:

    மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும், குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் சிலம்பம் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட கம்பு சண்டை, 35 கிலோ பிரிவு போட்டியில் கலந்து கொண்ட சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் கருப்பசாமி வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி செயலாளர், தலைமை ஆசிரியர், ஆசிரிய - ஆசிரியைகள், பெற்றோர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • விளையாட்டு போட்டியில் அரசு கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்
    • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்

    கரூர்:

    கரூரில் மாநில அளவில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் முதல் பரிசை நாமக்கல் மாவட்ட அணியும், இரண்டாம் பரிசை கரூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்பட அனைத்து பேராசிரியர்களும், பாராட்டினர்.




    ×