என் மலர்
நீங்கள் தேடியது "SRHvLSG"
- லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- நிகோலஸ் பூரன் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தினார்.
ஐதராபாத்:
ஐ.பி.எல். 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.
லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் நிகோலஸ் பூரன் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நிகோலஸ் பூரன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அவர் இதுவரை ஐ.பி.எல். தொடரில் 4 முறை 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 190 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய லக்னோ 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
ஐபிஎல் 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்தார். அனிகெட் வர்மா 36 ரன்னும், நிதிஷ் ரெட்டி 32 ரன்னும், கிளாசன் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், திக்வேஷ் ராதி, பிரின்ஸ் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக, நிகோலஸ் பூரன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 26 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 15 ரன்னில் வெளியேறினார். கடைசியில் இறங்கிய அப்துல் சமத் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டாஸ் வென்று சொன்னபடி ரிஷப் பண்ட் செய்து வெற்றி பெற்றுவிட்டார்.
- ஷர்துல் தாகூர் அடுத்தடுத்து பந்தில் விக்கெட் வீழ்த்தி ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
- டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார்.
ஐபிஎல் 2025 சீசனின் 7-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3-வது ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஷர்துல் தாகூர் வீசிய அந்த ஓவரில் அபிஷேக் சர்மா 6 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஐதராபாத் 2.2 ஓவரில் 15 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்கோர் 7.3 ஓவரில் 76 ரன்னாக இருக்கும்போது டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை பிரின்ஸ் யாதவ் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய கிளாசனும் அதிரடியாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக 17 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன்அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் ரெட்டி 32 பந்தில் வெளியேறினார். இவரை ரவி பிஷ்னோய் க்ளீன் போல்டாக்கினார்.
இதனால் 14.1 ஓவரில் 128 ரன்கள் அடிப்பதற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 200 ரன்னைத் தொடுவது சந்தேகமானது. ஆனால் அனிகெட் வர்மா 13 பந்தில் 36 ரன்களும், பேட் கம்மின்ஸ் 4 பந்தில் 18 ரன்களும் அடித்தனர். என்றபோதிலும், பேட் கம்மின்ஸ் ஆட்டமிழக்கும்போது 17.3 ஓவரில் 176 ரன்கள் எடுத்திருந்தது.
இறுதியாக 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது. ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பிரின்ஸ் யாதவ் 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ பேட்டிங் செய்து வருகிறது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 300 ரன்கள் அடிக்க முடியும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
- அப்படி இருந்தும் ரிஷப் பண்ட் அவர்களிடம் முதலில் பேட்டிங்கை கொடுத்துள்ளது வியப்பு.
ஐபிஎல் 2025 சீசனின் 7-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
பொதுவாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 300 ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது எனக் கருதப்படுகிறது. இதனால் ஐதராபாத் மைதானத்தில் அவர்களுக்கு எதிராக டாஸ் வெல்லும் அணி கட்டாயம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்பதுதான் ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
ஆனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் பண்ட் டாஸ் வென்று ஐதராபாத் அணியிடம் பேட்டிங்கை கொடுத்துள்ளார். ஏன் ஐதராபாத் அணியிடம் பேட்டிங்கை கொடுத்தேன் என்பது குறித்து ரிஷிப் பண்ட் கூறியதாவது:-
முடிந்தவரை விரைவாக அவர்களை அவுட்டாக்கி, இலக்கை துரத்த முயற்சிக்க விரும்புகிறோம். ஆவேஷ் கான் ஃபிட் ஆகி அணியில் இணைந்துள்ளார். இதனால் ஷாபாஸ் அகமது விளையாடவில்லை.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பரவாயில்லை, நாங்கள் அதை சேஸிங் செய்வோம்.
இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
- லக்னோ அணியில் ஆவேஷ் கான் இடம் பிடித்துள்ளார்.
- ஐதராபாத் எவ்வளவு ரன் அடிக்கிறது என்பது கவலை இல்லை- சேஸிங் செய்வோம்- ரிஷப் பண்ட்.
ஐபிஎல் 2025 சீசனின் 7-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். போட்டி 7.30 மணிக்கு தொடங்கும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, அபிநவ் மனோஹர், கம்மின்ஸ், சிமர்ஜீத் சிங்து, ஹர்ஷல் படேல், முகமது ஷமி.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி:-
மார்கிராம், பூரன், பண்ட், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமாத், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ்.
- உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார்.
- சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன.
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் லக்னோ - ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 75* (28), டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள் அடித்து 9.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற்றது.
இதனால் கோபமடைந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா போட்டியின் முடிவில் கேப்டன் கேஎல் ராகுலை திட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரலனாது. இதற்கு ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நீங்கள் 16 கோடி சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை இப்படி திட்டலாமா? என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை திட்டுவது சரியல்ல என்று முன்னாள் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் கிரேம் ஸ்மித் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார். ஏனெனில் அவருடைய அணி முழுமையான தோல்வியை சந்தித்ததால் உணர்ச்சிகள் உருண்டோடின. இருப்பினும் இந்த உரையாடல்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடந்திருக்க வேண்டும். சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன.
என்று கூறினார்.