என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SriLanka Navy"

    • ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
    • அவர்களின் 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

    இந்நிலையில் கச்சத்தீவு- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் 15 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

    • தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    • இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென்று கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (திங்கட்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 9-7-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதோடு அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

    இதை தாங்கள் (மத்திய மந்திரி ஜெய்சங்கர்) நன்கு அறிவீர்கள். மீனவர்கள் தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் மத்திய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமூகத் தீர்வினை எய்திடவும் இயலும்.

    எனவே இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
    • மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு தீர்வு காணவேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

    ராமேஸ்வரம்:

    தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மீனவர்கள் கைது நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகின் உரிமையாளர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர், நாகையன், திவ்யநாதன், மாயவன், பாக்கியராஜ், சக்திவேல், மணிகண்டன், ராமச்சந்திரன், கோதண்டபானி, ராமச்சந்திரன், செல்வமணி ஆகிய 12 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 12 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதைப்போல் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆச்சியம்மாள் என்ற விசைப்படகும் அதில் இருந்த 13 மீனவர்களும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது இலங்கைக் கடற்படை.

    இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது.
    • நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    அறந்தாங்கி:

    தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது இஅலங்கை கடற்படையினர் கைது செய்தது.

    எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக பத்மநாதன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமானவை உள்பட 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    சிறைபிடிக்கப்பட்டவர்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேரும் அடங்குவர்.

    மீனவர்கள் உடனடியாக விடுவிக்கவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சமீபத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர்.

    தமிழக அரசும் இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியுள்ள நிலையில், மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை.
    • அடிக்கடி கைது செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியா- இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

     

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்கிறது.
    • நெடுந்தீவு அருகே 21 தமிழக மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தினமும் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடிப்பதும், அவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை பறிமுதல் செய்து இலங்கை அரசின் நாட்டுடமை ஆக்குவதும் அதிகரித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள் மாற்று தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த 14-ம் தேதி கட லுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசைப்படகுடன் 15 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இன்று ராமேசுவரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் பெரும்பாலான படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் இலங்கை ராணுவத்திற்குச் சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அச்சத்துடன் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அவசரம் அவசரமாக சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் இலங்கை கடற்படையினர் ஆரோக்கிய சுகந்தன் மற்றும் இஸ்ரோல் என்பவரது 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர்.

    அந்தப் படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தர பாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, சந்திவேல், இஸ்ரோல் படகில் இருந்த மீனவர்கள் அந்தோணி லோபாஸ் (34), அடிமை (44), திவாகர் (34), யோஸ்வா (35), அஜித்குமார், பிரவீன் (26), ரெஜீஸ் (35), செந்தில் (44), இருளாண்டி ஆகிய 21 மீனவர்களை கைதுசெய்தனர்.

    இதனைதொடர்ந்து, இன்று காலையில் 2 படகுகள் மற்றும் 21 மீனவர்களை காங்கேசம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பகுதிக்குள் வந்த மீன்பிடித்ததாக கூறி 2 படகுகள் மற்றும் படகில் பிடிக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யக் கூறி, யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இந்திய அரசின் பதிவு எண் இல்லை. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என இலங்கை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதை தடுக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கார்த்திகேயன் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியது.
    • இதனால் அந்தப் படகு நடுக்கடலில் மூழ்கி மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார்.

    புதுடெல்லி:

    ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் 2,000-த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து வந்துது.

    அவர்களைக் கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைகளை நோக்கி திருப்பினர். அப்போதும் விடாமல் இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகில் அவர்களை துரத்திச் சென்றனர்.

    இதில் கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியது. இதனால் கார்த்திகேயனின் படகு நடுக்கடலில் மூழ்கி மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மாயமான ராமச்சந்திரன் என்ற மற்றொரு மீனவரி மீட்கும் பணி நடந்துவருகிறது.

    இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலால் தமிழக மீனவர் உயிரிழந்ததற்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து சம்மன் அளித்த வெளியுறவுத்துறை, இலங்கை கடற்படையினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    • தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
    • மீனவர்களின் விசைப்படகையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது.

    இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.

    முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்கள் 14 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

    இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

    ராமேஸ்வரம்:

    தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் சிறைபிடிப்பு மட்டும் நின்றபாடில்லை.

    இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணக் குடாநாடு பகுதியில் உள்ள மீன்பிடி இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

    எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். #Fishermenarrested
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 150 விசைப் படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராஜாராம் (வயது 28), ராகுல் (23), பாலையா (60), லெட்சுமணன் (57), அருளரசன் (35), அருள் (40) ஆகிய 5 பேரும் கடலுக்கு சென்றிருந்தனர்.

    அவர்கள் நள்ளிரவில் கடற்கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து கப்பலில் வந்தனர்.

    அவர்கள் புதுக்கோட்டை மீனவர்களிடம் இது எங்கள் நாட்டிற்கு சொந்தமான கடல் பகுதி. இங்கு மீன் பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியதோடு, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த அனைத்து மீன்களையும் பறித்துக்கொண்டனர்.

    பின்னர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களின் படகுடன் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் இலங்கையில் உள்ள காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா? அல்லது விடுதலையாவார்களா? என்பது பின்னரே தெரிய வரும்.

    டீசல் விலை உயர்வை கண்டித்து சுமார் 2 வார கால வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றத்திற்கு பிறகு கடந்த 22-ந்தேதி கடலுக்கு சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைப் பிடித்தது. அவர்கள் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அதற்குள் தற்போது மீண்டும் அதே பகுதியை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தது மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்தபோது தினமும் தமிழக மீனவர்கள் சிறைப் பிடிப்பு, மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, தாக்குதல் போன்றவை நடந்து வந்தன.

    தற்போது அவர் பிரதமராக பதவியேற்ற மறுநாளே தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவே அச்சம் தெரிவித்துள்ளனர். #Fishermenarrested

    ×