என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "stagnant"
- தேங்கிய மழைநீரை அகற்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.
- தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.
மழைநீர் அகற்றும் பணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ெரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
மழையால் ெரயில்வே தரை பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளி மாணவர்கள், மில் தொழிலா ளர்கள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல முடியா மல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனை கேள்விப்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ராட்சத மின்மோட்டார்களை வர வழைத்து தேங்கிய மழைநீரை துரிதமாக வெளியேற்றி பாதையை ஒழுங்குபடுத்தினர்.
நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி மழைநீர் வெளியேறி செல்லும் நீரோடையின் அடைப்பை நீக்கி மழைநீர் தங்குதடையின்றி செல்ல உரிய நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. வும், நகரசபை தலைவரும் கூறுகையில், மேம்பால பணிகள் நிறைவடையும் வரை மழை காலங்களில் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள ப்படும்.
மாணவர்கள், மில் தொழிலாளர்கள் இனி அச்சமின்றி கணபதியாபுரம் தரைபாலத்தை கடந்து செல்ல வழிவகை செய்து தரப்படும் என்றனர்.
- தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
- இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியராக நாகவள்ளி என்பவர் பணி புரிந்து வருகிறார்.
இந்த பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை காலங்களில், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், கடந்த வாரம் கல்வி அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.
இதுபற்றி அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு தலைமைஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெரியதாயி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், பள்ளியில் தண்ணீர் புகாதவாறு தற்காலிகமாக தடுப்பு பணி மேற்கொள்வதாகவும், மழைநீர் வடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து நிரந்தர கால்வாய் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
- பல்வேறு பகுதிகளில் தூர்வாரப்படாமல் இருந்த உபரி நீர் கால்வாயால், மழைநீர் ஆங்காங்கே உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.
- மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், இருக்கூர், கோப்பணம் பாளையம், கபிலக்குறிச்சி, பெரிய சோளிபாளையம், திடுமல், கவுண்டம்பாளையம், சிறுநல்லி கோவில், ஜமீன்எளம் பள்ளி, சோழசிராமணி, பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம், ஒத்தக்கடை, பரமத்தி, கபிலர்மலை, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த கனமழை இரவு முழுவதும் பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தூர்வாரப்படாமல் இருந்த உபரி நீர் கால்வாயால், மழைநீர் ஆங்காங்கே உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வயல்களில் மழைநீர்
அதேபோல் பலத்த மழை பெய்த காரணமாக விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் வயல்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்ற முடியாததால் நெல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கிராமப்புறங்களில் வற்றிய நிலையில் இருந்த கிணறுகள், பலத்த கன மழையின் காரணமாக நீரூற்று எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வியாபாரம் பாதிப்பு
மழையின் காரணமாக சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், ஜவுளிக்கடைகள், உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்து உள்ளனர். சாலை ஓர கடைக்காரர்கள், கட்டில் கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பலத்த மழையின் காரணமாக தார் சாலைகளில் இருபுறமும் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பெரிய வாகனங்கள் செல்லும்போது இந்த மழைநீர் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது தெளிப்பதால், இருசக்கர வாகனங்கள் ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்தநிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை 8மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-20,அவினாசி-38.40, பல்லடம் -45, ஊத்துக்குளி-4, காங்கயம்-1.40, தாராபுரம்-20, மூலனூர்-40, குண்டடம்-27, அமராவதி அணை-2, உடுமலை-2, மடத்துக்குளம்-4, திருப்பூர் கலெக்டரேட்- 16, வெள்ள கோவில்-6, திருப்பூர் தெற்கு-5, கலெக்டர் முகாம் அலுவலகம்-45.50. மொத்தம் 276.30 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதனிடையே திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணியில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.
- சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை, ரூ.941 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் திட்டம் 2008-ல் தொடங்கி 2013-ல் முடிவடைந்தது.
- வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி பகுதியில், நான்கு வழிச்சாலை மற்றும் இணைப்புச் சாலையில் வழிந்தோடி வரும் மழைநீர் வெளியேறுவதற்கு போதிய வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தப்படவில்லை.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் 136 கி.மீ நீளம் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை, ரூ.941 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் திட்டம் 2008-ல் தொடங்கி 2013-ல் முடிவடைந்தது. இதில், உடையாபட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏறக்குறைய 38 கி.மீ. இரு வழி புறவழிச்சாலைச் சாலையாகவே உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி பகுதியில், நான்கு வழிச்சாலை மற்றும் இணைப்புச் சாலையில் வழிந்தோடி வரும் மழைநீர் வெளியேறுவதற்கு போதிய வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தப்படவில்லை. இணைப்புச்சாலைக்கும், நான்கு வழிச் சாலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள குறுகிய வாய்க்கால்களும் தூர்வாரி சீரமைக்கப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால், மழை பெய்யும் நேரத்தில் ஒட்டுமொத்த மழை நீரும் வெளியேற வழியின்றி சாலையிலேயே ஏரி போல தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சேசன்சாவடியில் நான்கு வழிச்சாலையில் பழுதடைந்து கிடக்கும் வாய்க்கால்களை சீரமைக்கவும், மழைநீர் வழிந்தோடும் அளவிற்கு விசாலமான புதிய வாய்க்கால்களை அமைக்கவும், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சேசன்சா வடியை சேர்ந்த ஜெய வேல் கூறுகையில், சேசன்சா வடியில் நான்கு வழி சாலை மற்றும் கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை பகுதியிலும், மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதிகள் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே உள்ள குறுகலான வாய்க்காலையும் தொடர்ந்து பராமரிக்காததால் தூர்ந்து போய்விட்டது. எனவே, வாய்க்கால்களை தூர்வாரி புதுப்பிக்கவும் , விசாலமான புதிய வாய்க்கால் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்