search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stayed"

    வனத்துறை அனுமதியின்றி மாஞ்சோலையில் இரவில் தங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    நெல்லை:

     அம்பை புலிகள் காப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
     
    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சாலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வனத்துறை அனுமதி பெற்று சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். 

    அவர்கள் காலை முதல் மாலைவரை மாஞ்சோலையை சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் அங்கு தங்க அனுமதி கிடையாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  

    கடந்த 28-ந் தேதி மாஞ்சோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அனுமதியின்றி இரவில் அங்கு தங்கி மறுநாள் 29-ந் தேதி மாலை மாஞ்சோலை சோதனை சாவடிக்கு திரும்பி வந்தனர். 

    இதைத்தொடர்ந்து அவர்களுக்கு காலதாமதமாக வந்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    • லாட்ஜில் தங்கியிருந்த சினிமா ஒளிப்பதிவாளர் இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சென்னை திருப்போரூர் நொம்மேலியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் சரத்குமார்(வயது29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் உதவி காமிராமேனாக பணியாற்றி வந்தார்.

    மதுரையில் உள்ள குறும்பட தயாரிப்பு நிறுவ னத்தில் பணியாற்று வதற்காக வந்திருந்த அவர், கூடலழகர் பெருமாள் கோவில் அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார்.

    ஏற்கனவே அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது. அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இந்தநிலையில் அறையில் தங்கியிருந்த சரத்குமார் பிணமாக கிடந்துள்ளார்.

    இது குறித்து அவரது அண்ணன் சதீஷ்குமார், திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் உடல் நல பாதிப்பால் இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தியமங்கலத்தில் காப்பகத்தில் தங்கி இருந்த 2 மாணவர்கள் மாயமானர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி காணாமல் போன மாணவர்களை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் அப்துல்பாஷா. இவரது மகன் அப்துல்ரகுமான் (13). இவர் சத்தியமங்கலம் ராஜன்நகரில் உள்ள கஸ்தூரிபா நிகேதன் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இதேபோல் ஈரோடு பழைய ெரயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியை சேர்ந்த பீர்முகமது மகன் அப்துல்ரசாக் (11). இவரும் அதே காப்பகத்தில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பகத்தை விட்டு வெளியே சென்ற 2 பேரும் பண்ணாரியில் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் 2 பேரும் காப்பகத்தில் இருந்து மீண்டும் மாயமாகினர். பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து காப்பக பொறுப்பாளர் முரளிதரன் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி காணாமல் போன மாணவர்களை தேடி வருகின்றனர்.

    தவளக்குப்பம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்த இளம்பெண் மாயமானார்.

    பாகூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் வனத்தையன். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் கலைச்செல்வி. (வயது 24).

    இவர் புதுவை தவளக்குப்பம் அருகே கொருக்குமேட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கடந்த சில மாதங்களாக தங்கி உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி விடுதியில் இருந்து திடீரென கலைச் செல்வி மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கேட்டபோது, அங்கும் கலைச்செல்வி செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கலைச் செல்வி மாயமானது குறித்து விடுதி பொறுப்பாளர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கலைச்செல்வி காதல் வலையில் விழுந்து காதலனோடு சென்றாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×