search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "streets"

    • தருமபுரம் ஆதீனம் தலைமையேற்று தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
    • தேர் நான்கு வீதிகளில் சுற்றி வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சேந்தங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீஞானாம்பிகை உடனாகிய ஸ்ரீவதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் துலா உற்சவ திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

    இந்த தேரோ ட்டத்தை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்தம் பிரமாசாரிய சுவாமிகள் தலைமையேற்று தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், தென் மண்டல கட்டளை விசாரனை ஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் தேர் நான்கு வீதிகளில் சுற்றி வலம் வந்து கோயில் சந்நதியை வந்தடைந்தது. பக்தர்கள் பக்தியுடன் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியார், கண்காணிப்பாளர் அகோரம், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மோகன், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொன்டனர்.

    • டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என கோஷம்.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் நிறைவு.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் சீர்காழி லயன்ஸ் சங்கம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணிக்கு லயன்ஸ் சங்க வட்டாரத்தலைவர் கே.வேல்முருகன் தலைமை வகித்தார். கே.எஸ்.செயலர் சந்துரு, பொருளாளர் எஸ்.ராமராஜ் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் எம்.சுரேஷ் பேரணியை துவக்கி வைத்தார்.

    பேரணியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கொசுவை ஒழிக்க வேண்டும், டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என கோஷங்கள் இட்டு சென்றனர்.

    முக்கியவீதிகளின் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர். துணை முகாம் அலுவலர் ஏ.மணிகண்டன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ச.ஹரிஹரன் கலந்து கொண்டனர். திட்ட அலுவலரும், உதவி தலைமை ஆசிரியருமான எஸ்.முரளிதரன் நன்றி கூறினார்.

    • சுகாதாரத்துறையினர் கணக்குப்படி கடந்த ஒரு மாதத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒற்றை இலக்கத்துக்கு வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் நகர மற்றும் கிராமப்புறங்களில் சமீபநாட்களாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறையினர் கணக்குப்படி கடந்த ஒரு மாதத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் குறித்த தகவலையும் சுகாதாரத்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். உள்ளாட்சி நிர்வாகத்தினர், வார்டு வாரியாக காலை மற்றும் மாலை நேரங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அக்டோபர் தொடக்கத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்தது. தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒற்றை இலக்கத்துக்கு வந்தது.

    5முதல் 10-க்குள் இருந்த அன்றாட பாதிப்பு நேற்று முன்தினம் ஒன்றாக மாறியது. மாத துவக்கத்தில், கண்காணிப்பில் 101 பேர் இருந்தனர். தற்போதைய நிலவரப்படி 20க்கும் குறைவானவர்கள் சுகாதாரத்துறை பட்டியலில் உள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நேற்று முன்தினம் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் தினசரி பாதிப்பு பூஜ்யம் என்ற நிலையை எட்டும். கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் திருப்பூர் மாறும் என்றனர்.

    • பேரணியை மாவட்ட உதவி ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
    • பேரணி சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நி லைப் பள்ளி, ரோட்டரி கிளப் ஆப் சீர்காழிடெம்பிள் டவுன் இணைந்துநாட்டு நலப்பணி திட்ட மாணவ ர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரணியை. மாவட்ட உதவி ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.

    முகாம் அலுவலர் முரளிதரன், ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள் சுப்பு சொர்ண பால், தங்க.ரவிச்சந்திரன், மலர்கண்ணன், பாலாஜி, முரளி, மோகனசுந்தரம், முன்னாள் செயலாளர்கள் வெங்கடாஜலபதி, விஜயன், குமார், சந்தோஷ் மற்றும் காவல்துறை, போக்குவரத்து காவல்த் துறையினர், கலந்துக் கொண்டனர். பேரணி சீர்காழி முக்கிய வீதி வழியாக சென்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை உதவி திட்ட அலுவலர் மணிகண்டன் செய்தார். நிறைவில் சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் பிரபாகரன் நன்றிக் கூறினார்.

    • பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.
    • பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தல்படி கபிஸ்தலம் அருகே கோவிந்தநாட்டுச்சேரியிலும் மற்றும் கபிஸ்தலம் பாலக்கரையிலும் சர்வதேச பேரிடர் குறைப்பு மற்றும் விழிப்புணர்வு தின சிறப்பு பேரணி நடைபெற்றது.

    கபிஸ்தலம் பாலக்கரையில் நடைபெற்ற பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.

    பேரணியை பாபநாசம் தாசில்தார் பூங்கொடி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.

    இதில் மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகநாதன், ஜெய்சங்கர், காமராஜ், யசோதா சரவணன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    பேரணியில் தன்னார்வ தொண்டு நிறுவன முதல்நிலை பொறுப்பாளர்கள், வருவாய்துறை பணியாளர்கள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றியத்தில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
    • முக்கிய வீதிகளில் சென்று ரெயில்வே கேட் அருகில் உள்ள முள்ளி ஆற்றங்கரையில் விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் இந்து முன்னணி நடத்தும் சிம்ம விநாயகர் ஊர்வலம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாளை விநாயகர் சதுர்த்தி அன்று காலை 6 மணிக்கு நகரில் மற்றும் ஒன்றியத்தில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும். பின்னர் 3-ந் தேதி மாலை 6 மணிக்கு அனைத்து விநாயகர்களும் திருத்துறைப்பூண்டி பிரவி மருந்தீஸ்வரர் கோவிலின் சன்னி தெருவில் இருந்து புறப்பட்டு நகரின் வழக்கமான பாதையில் முக்கிய வீதிகளில் சென்று ரெயில்வே கேட் அருகில் உள்ள முள்ளி ஆற்றங்கரையில் விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் விழா கமிட்டியான தமிழ் பால் சிவகுமார் பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் வினோத் மாவட்ட செயலாளர் இளசு மணி முன்னாள் மாவட்ட செயலாளர் மாதவன் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் பூபதி பா.ஜ.க ஒன்றிய தலைவர் பாலாஜி பா.ஜ.க முன்னாள் நகர தலைவர் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    • பக்தர்கள் அலகு காவடி, கரகம் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
    • துரும்பூர், பாதிரிமேடு முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள துரும்பூர் சர்வசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

    அதுசமயம் முதல் நாள் காலையில் பக்தர்கள் அலகு காவடி, கரகம் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் செடில் திருவிழா நடைபெற்றது.

    இரண்டாவதுநாள் தேர்த்திருவிழா நடை பெற்றது.துரும்பூர், பாதிரிமேடு முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    விழாவில் துரும்பூர், பாதிரமேடு கிராமவாசிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை நாட்டாமைகள், கிராம வாசிகள் மற்றும்விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

    சீனாவில் 7.50 கோடி தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் 4.80 கோடி, ரஷியா 41 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும் புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வீடற்ற செல்லப் பிராணிகளின் நிலை பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் 6.20 கோடி தெருநாய்கள் இருப்பதும், 91 லட்சம் பூனைகள் ஆதரவற்றநிலையில் தெருவில் விடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் 88 லட்சம் தெருநாய்களும், பூனைகளும் காப்பகங்களில் பராமரிக்கப்படுகிறது.

    சீனாவில் 7.50 கோடி தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் 4.80 கோடி, ரஷியா 41 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    ×