என் மலர்
நீங்கள் தேடியது "struck"
- தன்னைத்தானே தாக்கி காயப்படுத்திக்கொண்டவர் இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
விருதுநகர் மேட்டுக்குண்டு சென்னல்குடியை சேர்ந்தவர் சேகர் (48). மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மனைவி மதுரைக்கு அழைத்து வந்தார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கி நின்றனர். அப்போது சேகர் ஆவேசமாக கத்தியபடி தன்னைத்தானே தாக்கிக்கொண்டார்.இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மனைவி மாரீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் முகமது நசீர் (வயது 26). இவர் சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். அதே பகுதியில் ஜெயகாந்தன் என்பவரும் வேன் ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் ஜெயகாந்தனுக்கு வந்த ஒரு சவாரியை முகமதுநசீர் குறைந்த கட்டணத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முகமதுநசீர் திரும்பி வந்ததும், ஜெயகாந்தன் மற்றும் 15 பேர் கும்பல் முகமதுநசீரை தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள மெடிக்கலுக்குள் முகமதுநசீர் சென்றுள்ளார். அங்கும் சென்று அவரை தாக்கியதுடன், மெடிக்கலில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுப்பட்ட கமாலுதீன், மணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஜெயகாந்தன், அம்பிகாபதி உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த நாகக்குடியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது24). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி உமாரஞ்சனி.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் உமாரஞ்சனி கணவரை பிரிந்து அடவக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரது தந்தை நடராஜன் மகளை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வீடு பூட்டி இருந்ததால் சங்கர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வீட்டின் சாவியை கேட்டனர்.
அப்போது சங்கர் சாவியை கொடுக்க மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜன், அவரது உறவினர்கள் பக்கிரிசாமி, மருதுபாண்டி ஆகியோர் சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த சங்கர் நன்னிலம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குபதிவு செய்து சங்கரை தாக்கிய 3 பேரையும் தேடி வருகிறார்.