என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "stuck"
- குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது.
- வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் வரும் நேரம், மாலையில் இதே போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் உள்ளிட்ட பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.
வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி செல்லும் பேருந்துகள், பவானி பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல வழியில்லாமல் பயணிகள் தவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள்.
- உணவு குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடி யாமல், தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் அதிக வலி ஏற்பட்டது.
- அறுவை சிகிச்சையில்லாம லேயே எண்டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டியை சேர்ந்தவர் கலா (வயது 32). இவர் தனது பல்லை சுத்தம் செய்வதற்காக ஊக்கை பயன்படுத்தியுள்ளார். அப்போது ஊக்கை தவறுதலாக விழுங்கி விட்டார். உணவு குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடி யாமல், தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் அதிக வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி உறவினர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கலா சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் நெஞ்சு பகுதி உணவு குழாயின் மேல் பகு தியில் அந்த ஊக்கு சிக்கி யிருப்பது கண்டறியப்பட்டது.
டாக்டர்கள் உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்து ஊக்கை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சையில்லாம லேயே எண்டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது. இதனால் கலா மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த சிக்கலான எண் டோஸ்கோபி சிகிச்சையை மருத்துவமனையில் நோயா ளியை அனுமதித்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே குடல் அறுவை சிகிச்சை துறைத்தலை வர் டாக்டர். சிவசங்கர், டாக்டர். கார்த்திகேயன், டாக்டர். சிவசுப்ர மணியம் ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றிகரமாக செய்தனர். இந்த குழுவினரை மருத்துவமனை டீன் டாக்டர். மணி மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர். தனபால் ஆகியோர் பாராட்டினர்.
மேலும் அவரும், அவரது குடும்பத்தி னரும் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
- சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
- 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது.
சேலம் மாநகரில் 5 ரோட்டில் ஈரடுக்கு மேம்பாலம், நான்கு ரோட்டில் மேம்பாலம், லீ பஜார் மேம்பாலம், ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் மேம்பாலம், புதிய பஸ் நிலையத்தில் இருந்து குரங்கு சாவடி, குரங்கு சாவடியில் இருந்து அண்ணா பூங்கா வரை, சேலம் பெங்களூர் பைபாஸில் இரும்பாலை பிரிவு ரோடு, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலை, ஏ. வி.ஆர்.ரவுண்டானாவில் மேம்பாலம் என மாநகரில் எங்கு பார்த்தாலும் மேம்பாலங்களாக காட்சி அளிக்கிறது.
மேம்பால நகரம்
மாம்பழ நகரான சேலம் தற்போது மேம்பால நகராகவும் காட்சியளிக்கிறது. இந்த பாலப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்கு முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் நிம்மதியாக சென்று வருகின்றனர்.
ஆனால் இதற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்ட முள்ளுவாடி கேட் ரெயில்வே மேம்பாலம் தான் தற்போது வரை பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
முள்ளுவாடி ரெயில்வே கேட்
சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது.
இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
குறிப்பாக அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி ,ஏற்காடு, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி ,காரிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகம் அரசு ஆஸ்பத்திரி, கடைவீதி பழைய பஸ் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் வரும் வாகனங்களும் முள்ளுவாடி ரெயில்வே கேட்டை கடந்து பழைய பஸ் நிலையம் செல்கின்றன.
இதே போல அஸ்தம்பட்டி ஏற்காடு, கன்னங்குறிச்சி, வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் செல்லும் பஸ்களும் தனியார் வாகனங்களும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து முள்ளுவாடி கேட்டை கடந்து தான் செல்கின்றன. போக்குவரத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த முள்ளுவாடி கேட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும்.
ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று செல்லும் நிலை தினமும் பலமுறை ஏற்படும். வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேம்பாலம்
கட்டும் பணி தொடக்கம்
இதை அடுத்து முள்ளுவாடி கேட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து அதற்கான பணிகள் ரூ.83 கோடி திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
இந்த பாலம் மூன்று ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரச்சனை களால் பாலம் கட்டும் பணி மிகவும் தாமதமானது.
தாமதம்
3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது. தற்போது மத்திய கூட்டுறவு வங்கி அருகே பில்லர்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
அந்த பணிகள் நிறைவடைந்து சிலாப் பொருத்தும் பணிகள் இன்னும் ஆறு மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் முள்ளுவாடி கேட் மேம்பாலம் இன்னும் பயன்பாட்டிற்கு வர 8 மாதங்கள் வரை ஆகும் என தெரிகிறது.
இந்த பாலப்பணி கட்டுமான தாமதத்தால் ஒவ்வொரு நாளும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் தினமும் தவிக்கும் வாகன பிரச்சினை சொல்லி மாளாத வகையில் உள்ளது.
அணை மேடு பாலம்
இதேபோல சேலத்திலிருந்து அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சென்னை, பெரம்பலூர், அரியலூர், என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அணை மேடு ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த ரெயில்வே கேட்டும் மூடப்பட்டால் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் பொன்னம்மாப்பேட்டை ரெயில்வே கேட் மூடப்படும் போது மீண்டும் போக்குவரத்து சீராக ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் .
குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் ஆறு மணி வரையும் இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் அனைமேடு ரெயில்வே கேட் மற்றும் பொன்னமாபேட்டை ரெயில்வே கேட்டை கடக்க வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இதனை தீர்க்கும் வகையில் அணைமேடு மேம்பாலம் அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இதற்காக ரூ.92.4 கோடி திட்ட மதிப்பிடும் தயாரிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
நீண்ட நாள் எதிர்பார்பு
ஆனாலும் 3 ஆண்டுகளாகியும் இன்னும் 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை. ஆனால் நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் மூடப்படும் போது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவியாய் தவித்து வருகிறார்கள்.
எனவே இந்த ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
- சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
- சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாமக்கல்:
சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவ குமார் (வயது 46) என்பவரும் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை இழுத்தார். அப்போது அவர் எதிர்பாரா தவிதமாக தேரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சிய டைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிவகுமாரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான சிவகுமாருக்கு சுதா (42) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
- அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
சேலம்:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் காட்பாடி முதல் சேலம் வரை சோதனை செய்தனர்.
அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த பேக்கில் 4 பண்டல்களில் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் கஞ்சாவை போலீஸ் நிலையம் கொண்டு சென்று அதை ரெயிலில் கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த நிலையில் வடக்கு காஷ்மீர் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவும்படியும் பந்திபூர் ராணுவ முகாமுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். ஆனால் சாலைகள் முழுவதும் பனித்துகள்களால் மூடப்பட்டு இருந்ததால் ஆம்புலன்சை வீட்டின் அருகே கொண்டு செல்ல முடியவில்லை. எனினும் மனம் தளர்ந்துவிடாத வீரர்கள், அந்த பெண்ணை தூக்குப்படுக்கையில் சுமார் 2½ கி.மீ தூரத்துக்கு இடுப்பளவு பனித்துகள்களுக்கு மத்தியிலும் சுமந்து சென்றனர்.
பின்பு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தக்க நேரத்தில் உதவி புரிந்த ராணுவ வீரர்களுக்கு அந்த பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். #Pregnantwoman #Snowfall
பல்லடம்:
பல்லடம் மகாலட்சுமி நகர் 6-வது வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). இவர் பல்லடம்- திருப்பூர் இடையே உள்ள குன்னாங்கல்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் எந்திர ஆபரேட்டராக இருந்தார். நேற்று மாலை வேலை செய்தபோது எந்திரத்தில் சிக்கினார்.
காயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்