search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students achieve"

    • சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முதல் சுற்றில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று 11 மாண வர்கள் 2ம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • இம்மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடை பெற்ற சர்வதேச ஒலிம்பி யாட் தேர்வை கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை தேர்வு மையத்தில் எழுதினர்.

    திசையன்விளை, ஜூலை. 8-

    2022-23-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முதல் சுற்றில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று 11 மாண வர்கள் 2ம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    சர்வதேச ஒலிம்பியாட்

    இம்மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடை பெற்ற சர்வதேச ஒலிம்பி யாட் தேர்வை கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை தேர்வு மையத்தில் எழுதினர். இத்தேர்வை 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் மாணவி லாவண்யா பாஸ்கர் தமிழ்நாடு பட்டியலில் 16-வது இடத்தையும், மாணவன் விஜய்குமார்ராய் 38-வது இடத்தையும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மேலும் மாணவி ஜெர்லின் 85-வது இடத்தை யும், மாணவி டீனா பாஸ்கர் 119-வது இடத்தையும், மாணவன் சந்தோஷ் சார்லஸ் 138-வது இடத்தை யும், மாணவி தியானா 161-வது இடத்தை யும், ஜெரோம் பொன்னையா 177-வது இடத்தையும், மாணவி ரக்சஷனா 258-வது இடத்தையும், மாணவன் நோவா 324-வது இடத்தையும், மாணவன் ஹா ராஜா 333-வது இடத்தையும், விபிஷ்னு ராஜகோபால் 339-வது இடத்தையும் பெற்று தமிழ்நாடு மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவர்களுக்கு பாராட்டு

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சர்வதேச ஒலிம்பியாட் தேர்வானையம் சார்பில் சான்றிதழ் வழங்கப் பட்டது.

    • தமிழ்நாடு அரசு பள்ளி விளையாட்டு துறை சார்பாக மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
    • பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இண்டியன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளி விளையாட்டு துறை சார்பாக மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இண்டியன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர்.

    அதில் இசக்கி சந்துரு 53 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், பால் மணி 60 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும்,கோமதி சங்கர் 90 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், சுகுமார் 45 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், கிஷோர் கவிஷ் வெண்கல பதக்கமும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களும் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களை பயிற்சியாளர் மாஸ்டர் கணேஷ் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    • தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காவும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியவும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • சென்னையில் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஹேக் இன்பனைட்டி போட்டி நடைபெற்றது

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காவும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியவும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் மூலம் அனைத்து தேசிய போட்டி மற்றும் அரசின் ஸ்டார்ட்அப் போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.

    இதனிடையே சென்னையில் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஹேக் இன்பனைட்டி போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 குழுவினர் கலந்து கொண்டனர்.

    எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி சார்பில் எம்பெ டெட் அண்ட் ஐ.ஓ.டி அப்ளைட் ஆய்வக மாண வர்கள் கிளாட்சன் ஜோயல் ராஜா, சாம் சார்லஸ், தங்கவேல், டோனல் ஆகிய குழுவினர் மீன் பண்ணையில் மீன் வளத்திற்கான அடிப்படை ஸ்மார்ட் மிதவை ஒன்றை கண்டுபிடித்தனர்.

    இந்த கண்டுபிடிப்புக்கு சிறப்பு பரிசு, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு 8 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்த தானியங்கி மிதவை மூலம் மீன்களுக்கு உணவு, மாசு படிந்த தண்ணீரை கண்டறிதல் உள்ளிட்டவைகளை அது கண்டுபிடிக்க உதவும்.

    இந்தப் போட்டி மூலம் சக ஹேக்கர்களைச் சந்திக்கவும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், அனுபவமிக்க வழிகாட்டி களுடன் சேர்ந்து திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது.

    இப்போட்டியில் பங்கேற்க ஊக்கம் அளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன் ஆகியோரையும் லஷ்மிநாராயணன், உதவி பேராசிரியர் பெரிஸ்கா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஏபிஎஸ் செஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது
    • 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்தார்

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஏபிஎஸ் செஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் மாநில அளவில் 2-வது இடத்தையும், 5-ம் வகுப்பு மாணவன் ஜெகத் பிரபு மாணவர்கள் பிரிவில் மாநில அளவில் 7-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • பிரீமியர் லீக் கராத்தே போட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
    • தமிழகத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    பிரீமியர் லீக் கராத்தே போட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழகத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜு ரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் செயல்பட்டார்.

    போட்டியில் விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் 17 தங்கப் பதக்கம், 14 வெள்ளி மற்றும் 9 வெங்கலம் என அதிகப்படியான பதக்கத்தையும், வெற்றிக் கோப்பையும் வென்று அசத்தினர்.

    வெற்றி பெற்ற மாணவர் களை விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, பள்ளி தாளாளர் விமராஜ், பள்ளி செயலாளர் சுப்பா ரெட்டியார், பள்ளி இயக்குநர் இந்திரா, ராமராஜு, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்த், மற்றும் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா, ஆகியோர் பாராட்டினர்.

    மேலும் கராத்தே போட்டியில் தங்கம், வெள்ளி வெண்கலம் என அதிகப்படியான பதக்கங் களை பெற்றுசாதனைப் படைத்துள்ள அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.
    • தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலமாக கல்லூரி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ஆங்கில துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்றனர். நாடகம், வினாடி-வினா, பாடல், ஓவியம் ஆகிய போட்டிகளில் முதல் பரிசும், தனிமனித நாடகம், சிலை உருவ நாடகம், செய்தித்தாள் உருவாக்கத்தில் 2-வது பரிசும், கட்டுரை போட்டியில் 3-ம் பரிசும் பெற்றனர். பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற இந்த போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 2-வது இடம் பிடித்தனர்.

    இதேபோன்று நெல்லை செயின்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கணினி அறிவியல் மாணவர்களுக்கான போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று 'வெப் டிசைன்' போட்டியில் 2-ம் பரிசு வென்றனர். சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார், துறைத்தலைவர்கள் சாந்தி, வேலாயுதம் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலமாக கல்லூரி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். கல்லூரி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடந்த குப்பைகளை மாணவர்கள் அகற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ செயலர் வைகுண்டராஜன் நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை நடத்திய அண்ணா பிறந்த நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவுநாள் பேச்சுப்போட்டிகள் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் லெரின்டிரோஸ் பாராட்டினர்

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை நடத்திய அண்ணா பிறந்த நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவுநாள் பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பள்ளி, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சன்எபி முதலிடமும், அண்ணல் காந்தியடிகள் நினைவு போட்டியில் பள்ளி மாணவி தர்ஷினி முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் லெரின்டிரோஸ், தலைமை ஆசிரியர் அருள்பர்னாந்து மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டினர். பேச்சுப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ. 5 ஆயிரம் கலெக்டர் வழங்கினார்.

    • சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் யுவராஜ்குருரூபவ், பிரதிவ் வாசன்ரூபவ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் யுவராஜ்குருரூபவ், பிரதிவ் வாசன்ரூபவ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். யுவராஜ் குருரூபவ் முதலிடத்தையும், பிரதிவ் வாசன்ரூபவ் 2-ம் இடத்தையும், அஸ்வின் 3-ம் இடத்தையும் வென்று சாதனை படைத்தனர்.

    முதல் 3 இடத்தை பெற்று சாதனை படைத்த மாணவர்களை வி.எஸ்.ஆர். பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பாராட்டி பரிகளை வழங்கினார்.

    ×