search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Substance"

    • நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் சமூக அலுவலர் மணிகண்டன், கிஷோர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை நாமக்கல் பஸ் நிலையத்தை யொட்டியுள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
    • உயர்ரக போதை பொருளை வாங்கி வந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் அப்பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    இதற்கிடையே கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர்தர ரக போதை பொருளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து போதை தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரளாவை சேர்ந்த வாலிபர்களும் கல்லூரி மாணவர்களும் சீரகபாடியில் தங்கி இருந்து மொத்தம் பேட்டமையின் என்ற உயர்ரக போதை பொருளை விற்பனை செய்வது தெரிய வந்தது . நேற்று அவர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்த போலீசார் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஆலன் கே பிலிப் (23), பி.இ. 2-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவர் மற்றும் பி.இ. இறுதி ஆண்டு படித்து வரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த சித்தாரப்பட்டியை சேர்ந்த மாணவர் உள்பட 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர் .

    அப்போது பெங்களூரில் இருந்து உயர்ரக போதை பொருளை வாங்கி வந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. கண்ணாடி இழை போன்ற ஒரு கிராம போதை பொருளை கசக்கி பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை போதை இருக்கும் என கூறப்படுகிறது .

    அவரிடம் இருந்து 35 ஆயிரம் மதிப்பிலான போதை பொருள் ,நவீன எடை எந்திரம் மற்றும் போதைப்பொருள் டெஸ்டிங் மெஷின் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களாக இந்த மாணவர்கள் அங்கே போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது . தொடர்ந்து 3 பேரிட்மௌம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 3 பேரின் பிண்ணணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? இவர்கள் சேலம் தவிர வேறு எங்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்களா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    மோடியின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது. #Modi #RandeepSujewala
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று உரையாற்றினார். இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடியின் சுதந்திர தின உரை வெற்று முழக்கம் என்பதை நிரூபிப்பதாக உள்ளது. அவர் தனது ஆட்சியின் ஊழல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து எதையும் கூறவில்லை. அதேபோல் வியாபம் மற்றும் பொது வினியோகத் திட்டத்தில் நடந்த ஊழல் பற்றியும் சொல்லவில்லை.



    டோக்லாமில் சீனப் படைகள் ஊடுருவல் முயற்சி குறித்து எதையும் குறிப்பிடவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி ஒரு வார்த்தை கூட அவருடைய உரையில் காணப்படவில்லை. நாட்டில் நிலவிவரும் வெறுப்பு அரசியல் பற்றியும் அவர் பேசவில்லை. ஒட்டுமொத்தத்தில் சாதாரண மக்களுக்கு பயன் அளிக்கும் விதமாக அவர் எதையும் கூறவில்லை. அவருடைய உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

    நாட்டு மக்கள் நல்ல நாட்களுக்காக காத்திருக்கிறார்கள். மோடி, பிரதமர் பதவியில் இருந்து வெளியேறிவிட்டால் அந்த நல்ல நாட்கள் தானாக வந்துவிடும்.

    2013-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சத்தீஷ்காரில் டெல்லி செங்கோட்டை போல் அமைத்த மேடையில் தன்னுடன் விவாதிக்க தயாரா என்று மோடி சவால் விடுத்தார்.

    இன்றோ, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளின் துயரம், அரசின் ஊழல் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என்று ராகுல்காந்தி சவால் விடுத்தும் அதுபற்றி மோடி பேச மறுக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், “பிரதமரின் சுதந்திர தின உரை தேர்தல் கால அரசியல் பேச்சு போலவே உள்ளது. நாட்டு மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்க அவர் தவறிவிட்டார். டெல்லி செங்கோட்டையை சொந்த நலனுக்காக அரசியல் மேடையாக அவர் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது” என்றார்.  #Modi #RandeepSujewala  #Tamilnews 
    ×