search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suddenly"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர், மணியனூர் ,பெருங்குறிச்சி, குப்பிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், வடகரை யாத்தூர், கு.அய்யம்பா ளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், கொந்தளம், கோப்ப ணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    • உத்திரபிரதேசத்தை சேர்ந்தர் ஜமுனா பிரசாத்.
    • இரவு லாரியிலேயே ஓய்வு எடுத்து தூங்கி கொண்டிருந்தார்

    புதுச்சேரி:

    உத்திரபிரதேசத்தை சேர்ந்தர் ஜமுனா பிரசாத். டேங்கர் லாரி டிரைவர். இவர் மும்பையில் இருந்து டேங்கர் லாரியில் மெத்தனால் ஏற்றிக்கொண்டு கடந்த 3-ந் தேதி கோர்க்காட்டில் உள்ள தனியார் கம்பெனிக்கு வந்தார். அன்று இரவு லாரியிலேயே ஓய்வு எடுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்த தனியார் கம்பெனி ஊழியர்கள் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் ஜமுனா பிரசாத் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார்.
    • பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவர் அதே பகுதியில் கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது மனைவி இமாக்குலேட் கீதா (49). இவர் திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. குழந்தைகள் இல்லை. ஆனந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது மனைவி பணிபுரிந்து வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில், இமாக்குலேட் கீதா திருச்சியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்தார். ஆனந்த் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

    நேற்று காலை சுமார் 8 மணியளவில் வீட்டில், பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.
    • தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.

    சிவகிரி, ஆக. 25-

    சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டேல் தெருவை சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 48).

    இவர் தனது மாருதி வேனில் மாலை 4 மணிக்கு சிவகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தன் மகன் ஹரிஹரன் (வயது 16). என்பவரை அழைத்து வர பள்ளி நுழைவு வாயில் முன் தனது மாருதி வேனை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.

    பின்னர் பள்ளி முடிந்து வந்த தன் மகனை அழைத்து கொண்டு மீண்டும் மாருதி வேனில் ஏறி வேனை இயக்க முயன்றார். அப்போது திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.

    உடனே சுதாரித்து கொண்ட மெய்யப்பன் தன் மகனை வேகமாக கீழே இறக்கி விட்டார். மேலும் பள்ளி குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளிவராமல் இருக்க ஓடி சென்று தடுத்து நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது அவ்வழியே வந்த சமூக ஆர்வலர் பாப்புலர்பழனிச்சாமி என்பவரின் தண்ணீர் வாகனத்தில் இருந்த தண்ணீரை கொண்டு மாருதி வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குமாரபாளையம் விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மோதலில் ஈடுப்பட்டனர்.
    • அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    குமாரபாளையம்:

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 -2023-ன்படி குமார பாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1.92 கோடி மதிப்பில் நூலகம், அறிவுசார் மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அந்த இடத்தில் தி.மு.க. நகர செயலாளர் செல்வம் மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் வந்தி ருந்தனர்.

    அப்போது அங்கு வந்த விஜய்கண்ணன், இது நகராட்சி சார்பில் நடத்தப்படும் பூமி பூஜை, இதில் அரசியல் கட்சியினர் பங்கேற்க அனுமதி இல்லை, கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்கலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

    இதனால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இது பற்றி நகர செயலாளர் செல்வம் கூறியதாவது:-

    இது தமிழக அரசு ஒதுக்கிய நிதி, அதுவுமின்றி பொது நிகழ்ச்சி. நாங்கள் பங்கேற்போம்.

    அமைச்சர் நேரு 2 நாட்க ளுக்கு முன்பு வந்த போது, காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க சிறப்பாக பணி யாற்றியதற்காக, சால்வை அணிவித்து பாராட்டினார்.

    மேலும் நகராட்சி சார்பில் நடக்கும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் பங்கேற்க வேண்டும் எனவும் கூறி சென்றார். எனவே அரசு விழாக்களில் நாங்கள் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
    • அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மங்கானூரைச் சேர்ந்தவர் சண்முகம் (54). லாரி டிரைவர். இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு சண்முகம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வந்துள்ளார்.

    நேற்று அவர் பெருந்துறை அருகே சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தில் 2 பேர் திடீர் மாயமானார்.
    • ஜெயகாந்தியின் கடைசி இருமகன்களுக்கு இடையே சம்பவத்தன்றுதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர்.

    கடலூர்:

     பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது47). இவரது மனைவி அமுதா (42). இருவருக்கும் திருமணமாகி 15 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சிவக்குமார் சலூன் கடைக்கு சென்று வருகிறேன், என்று கூறிவிட்டு சென்ற வர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சிவக்குமார் தாய்ஜெயகாந்தி முத்தாண் டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

    இதனிடையே ஜெயகாந்தியின் கடைசி இருமகன்களுக்கு இடையே சம்பவத்தன்றுதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கடைசி மகனான சுரேஷ்குமார் மாயமானார். இதுகுறித்து தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

    ×