என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "suffocation"
- கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
- வகுப்பறைகளில் வாயு கசிந்து வாசனையும் வீசியது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே தளத் தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.
கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள ஆய்வுக் கூடத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. இதேபோல் வாயு எங்கிருந்து கசிந்து வருகிறது, எந்த வகையானது என்பதையும் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது. காலை முதல் மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வரத்தொடங்கினர்.
அப்போது பள்ளியில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டு 4 மாணவிகள் மயங்கினர். மேலும் பலருக்கு மூச்சுதிணறலும் ஏற்பட்டது. வகுப்பறைகளில் வாயு கசிந்து வாசனையும் வீசியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.
இதுபற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதம் செய்தனர். இதனால் பள்ளியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அதே பகுதி எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவிகள் நலமாக உள்ளனர்.
இது பற்றி அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் முருகன், போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் இளங்கோவன், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிஸ், கிருஷ்ணராஜ் திருவொற்றி யூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிக்கட்டா தேஜா, மருத்துவ குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பள்ளியை ஆய்வு செய்தனர்.
மேலும் திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.பி.சங்கர், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், கவுன் சிலர் டாக்டர் கே. கார்த்திக் உள்ளிட்டோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவு எந்த வகையானது, எங்கிருந்து கசிகிறது என்பது தெரியாததால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது. இதையடுத்து பள்ளிக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, ஏற்கனவே பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கினர். ஆனால் இந்த வாயு கசிவு குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. வாயு எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை.
இப்போது மீண்டும் பள்ளியை திறந்த போதும் வாயு கசிவால் மாணவிகள் மயங்கி உள்ளனர். வாயு கசிவை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் பள்ளியை திறக்க வேண்டும்.
இதுபற்றி அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டும். மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 3 வயது பெண் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பிரதீப் நாகர் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஜோரவார்புரா கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 3 வயது பெண் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜாதான் மாநிலம் கோட்டா நகருக்கு அருகில் உள்ள ஜோரவார்புரா என்ற கிராமத்தில் நேற்று (மே 15) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரதீப் நாகர் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஜோரவார்புரா கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார். அவரின் மனைவியும் மூத்த மகளும் காரிலிருந்து இறங்கி அருகில் இருந்த பூங்காவுக்கு சென்ற நிலையில், பிரதீப், தனது இளைய மகள் கோர்விகா சாகர் மனைவியுடன் இறங்கி சென்றுவிட்டதாக கருதி மகள் உள்ளே இருப்பதை அறியாமல் காரை லாக் செய்துவிட்டு பூங்காவுக்கு சென்றுள்ளார்.
அவரின் மனைவியோ மகள் கணவருடன் வந்துகொண்டிருக்கிறாள் என்று நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார். இதனிடையே சுமார் 2 மணி நேரம் கழித்தே குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் உணர்ந்து காருக்கு சென்று பார்க்கையில், குழந்தை மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் காருக்குள் இருந்துள்ளது. உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர்கள் தூக்கிச்சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் காவல்துறையினர், பெற்றோர்கள் குழந்தையின் பிரேத பரிசோதனை செய்யவும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
- வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.
- தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும்.
கொசுவத்திச் சுருள் ஏற்றினால் வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. கொசுவத்திச் சுருள் எரியும் போது வரும் புகையானது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும். மூச்சுத் திணறல், மற்றும் சுவாசக் கோளாறு முதலியவைகளை இந்த புகை உண்டாக்கக்கூடியது.
தினமும் கொசுவத்திச் சுருள் கொளுத்தி வைத்துக் கொண்டு தூங்கும் போது, அந்த புகையை சுவாசிக்க நேரிடும். இது பல நாட்கள் தொடரும் போது நுரையீரல் அடைப்பு நோயை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தையே பாதிக்கச் செய்யலாம். அத்துடன் சரும எரிச்சல், கண் எரிச்சல், அலர்ஜி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு, சில சமயங்களில் புற்றுநோயைக் கூட உண்டாக்கும் ஆபத்து உள்ளது.
சிகரெட் புகையின் பாதிப்பு எப்படியோ அதே போன்றது தான் கொசுவத்திச்சுருள் புகையின் பாதிப்பும். நீங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்குக்கூட (குறிப்பாக பூனை) கொசுவத்திச் சுருளின் புகை ஒத்துக்கொள்ளாது.
கொசுவத்திச் சுருள் புகை மட்டுமல்ல திரவ வடிவிலான கொசு விரட்டி, களிம்பு, தெளிப்பான், ஆவி பிடிக்கும் கருவி இவைகளும் கூட பாதுகாப்பானதல்ல.
கதவு - ஜன்னல்களெல்லாம் மூடப்பட்ட அறையில் நீங்கள் கொசுவத்திச் சுருளை கொளுத்தி வைத்துக் கொள்ளும்போது, அதில் இருந்து வரும் புகையைத் தான் படுக்கப் போனதில் இருந்து மறுநாள் காலை வரை சுவாசிக்க வேண்டும். காற்றையும், உடலையும் மாசுபடுத்தும் ரசாயனப் பொருட்களை நாம் அதிக நாட்கள், அதிக நேரங்கள் சுவாசிக்க சுவாசிக்க அது நுரையீரல் கோளாறை உண்டு பண்ணிவிடும்.
கொசுத்தொல்லையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரமான கொசுவலைகளை உபயோகிக்கலாம்.
பூண்டு எண்ணெய்யை அறையில் தெளித்தால் கொசு வராது. எலுமிச்சைச் சாறு, துளசி எண்ணெய், வேப்பெண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவைகளையும் தூங்கும் அறைகளில் பயன்படுத்தலாம். வீடுகளில் சமையலுக்கு தினமும் பயன்படுத்தும் பூண்டு உரித்த தோலை சேகரித்து வைத்து அதை அறைகளில் எரித்தால் வரும் புகை கொசுவை விரட்ட பயன்படும். இம்மாதிரி காய்ந்த வேப்பிலை, காய்ந்த துளசி இலை, காய்ந்த யூகலிப்டஸ் இலைகளையும் எரித்து புகை உண்டு பண்ணி பயன்படுத்தலாம். இவைகள் பாதுகாப்பானதும்கூட.
- கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
- தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.
மதுரை:
மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 78). இவர், தெற்குமாசி வீதியில் டி.எம். கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். கடையில் கீழ்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், 2-ம் தளத்தில் குடோனும் உள்ளன.
நேற்று இரவு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகைகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று 7.30 மணி அளவில் கடையின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது.
இதைப்பார்த்த கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதற்கிடையே உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45) முதல் தளத்தில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்யவும், அவர்களை வெளியேற்றவும் விரைந்து சென்றார். அப் போது அங்கு மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிவதாக கூச்சல் போட்டார்.
ஆனால் அதற்குள் முதல் தளத்தில் புகை மூட்டம் அதிகமானது. எதிரே நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு புகை அடைத்துக் கொண்டதால் அவரால் கீழே வர முடியவில்லை. முன்னதாக அந்த தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். கீழ் தளத்தில் இருந்தவர்கள் மோதிலாலின் செல்போனை தொடர்பு கொண்டபோது, அதனை எடுக்கும் நிலையில் மோதிலால் இல்லை. இதனால் அங்கு பதற்றம் அதிகமானது.
இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை திடீர் நகர், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விபத்தில் மோதிலால் சிக்கிக்கொண்ட முதல் தளத்திற்கு சென்றனர். மேலும் தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.
இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் கடையின் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது மோதிலால் ஒரு அறையில் சிக்கி இருப்பது தெரியவந்தது.
அந்த கதவையும் உடைத்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அளவுக்கு அதிகமான புகையை சுவாசித்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள் ளது. பின்னர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மூச்சுத்திணறி பலியான மோதிலாலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.
- வடலூர் ராஜராஜேஸ்வரி திருமண நிலையத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்து வருகிறது,
- பயிற்சியின் இடையில் அவர் பிரட் சாப்பிட்டார். இதையடுத்து அவருக்கு விக்கல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் ராஜராஜேஸ்வரி திருமண நிலையத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்து வருகிறது. வடலூரில் உள்ள பிசிகோ பிட்னஸ் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சேலம் பெரிய கொல்லப்பட்டி, மாரியம்மன் கோயில் தெரு மாதையன் மகன் ஹரிஹரன் (வயது 21) என்பவர் பங்கேற்பதற்காக வந்திருந்தார். இவர் மண்டபத்தில் தீவிர பயிற்சியில் நேற்று இரவு ஈடுபட்டார். பயிற்சியின் இடையில் அவர் பிரட் சாப்பிட்டார். இதையடுத்து அவருக்கு விக்கல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு விழாக்குழுவினர் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார் என்று கூறினார்கள். மேலும், அவர் சாப்பிட்ட பிரட் உணவுக்குழாயில் அடைத்துக் கொண்டு, மாரடைப்பு அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவம் ஆணழகன் போட்டியில் பங்கேற்ற பிற வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- ராஜபாண்டி- சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
- பால்குடித்து தூங்கிய குழந்தைக்கு திடீரென மூச்சுத்தினறல் எடுத்தது,
கடலூர்:
பண்ருட்டி அருகே வல்லம் கிராம த்தைச் சேர்ந்தவர் ராஜ பாண்டியன். இவரது மனைவி சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று வழக்கம்போல் குழந்தைக்கு சுபாஷினி பால் கொடுத்துவிட்டு அருகில் தூங்க வைத்திருந்தார். அப்போது குழந்தைக்கு திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனே அந்த குழந்ைதயை நெய்வேலி மத்திய பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தன இது குறித்து முத்தா ண்டிகுப்பம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.
- பழனி திடீரென மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார்.
- உடனடியாக அவரை சிகிச்சைக்காக கார் மூலம் கோபி அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கரட்டுப் பாளையம் அருகே உள்ள மேட்டுக்காடு பவர் ஹவுஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் பழனி (39). விவசாயக் கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்திய சாவித்திரி.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழனியை கட்டு விரியன் பாம்பு கடித்து விட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பிறகு பழனி உடல் அடிக்கடி சரி இல்லாமல் இருந்தது.
இதற்காக பழனி கொடிவேரியில் உள்ள பாம்பு கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பழனி திடீரென மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கார் மூலம் கோபி அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு பழனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுமித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த சதுமுகை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகள் சுமித்ரா (15). இவர் டி.என்.பாளையம் அருகே டி.ஜி.புதூரில் உள்ள சத்திரம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சுமித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று காலை அரையாண்டு தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற சுமித்ராவின் உடல் நிலை மோசமானதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் செயற்கை முறையில் கருத்தரிக்க ராஜகுமாரி சிகிச்சை பெற்று வந்தார்.
- நேற்று இரவு ராஜகுமாரிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கரசானூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். விவசாயி. அவரது மணைவி ராஜகுமாரி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை. எனவே சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் செயற்கை முறையில் கருத்தரித்து ராஜகுமாரி சிகிச்சை பெற்று வந்தார். அதன்படி அவர் கர்ப்பமானார். தற்போது ராஜகுமாரி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று இரவு ராஜகுமாரிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தமிழரசன் தனது மனைவியை வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி இறந்தார். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மூச்சுத்திணறல் காரணமாக ராஜகுமாரி இறந்துள்ளார். அவரது வயிற்றில் 2 குழந்தைகள் இருந்தது. அதுவும் இறந்துபோனது என தெரிவித்தனர். இதுகுறித்து வானூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடலூர் அருகே பெண் திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்தார்.
- ஜெகதீசன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி வினோதினி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ள நிலையில் ஒரு பெண் குழந்தை இருந்து வருகிறது. ஜெகதீசன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் வினோதினிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மாலை திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று அதிகாலையில் மிஸ்சியா மரினா ஜெனோவாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
- மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
சென்னை திரு.வி.க.நகர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவருடைய மனைவி மிஸ்சியா மரினா ஜெனோவா (வயது 31). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கர்ப்பிணியாக இருந்த மிஸ்சியா மரினா ஜெனோவா ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர் நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
கடந்த மாதம் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று அதிகாலையில் மிஸ்சியா மரினா ஜெனோவாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள், மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மிஸ்சியா மரினா ஜெனோவா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சென்னிமலை பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீர் புகை மண்டலத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
- உடனே தீயணைப்பு அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.அவர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடிச்சி தீயை அணைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன், உப்பிலிபாளையம் ரோட்டில் குன்று பகுதியில் பேரூராட்சி குப்பைகள் கொட்டப்படும் கிடங்கு உள்ளது.
நேற்று காலை குப்பைகள் கொட்டியுள்ள பகுதியிலிருந்து திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. சிறிது நேரத்தில் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மற்றும் அருகில் வசிக்கும் மக்கள் குப்பைகளில் இருந்து வெளியேறிய புகையால் திணறினர்.
உடனே பேரூராட்சி அலுவலகத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு நிலையத்தினர் உடனடியாக அங்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் குப்பைகளை கிளறி அதில் உள்ள தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். அப்போது பேரூராட்சி பணியா–ளர்களும் உடனிருந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் ஏற்பட்ட திடீர் புகை மண்டலம் சிறிது நேரம் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தியதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். குப்பைகளில் பிடித்த தீ முழுவதும் அணைக்க–ப்பட்டதால் புகை மண்டலம் கட்டுக்குள் கொண்டு–வரப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. குப்பையில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.–––
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்