என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "suit"
- சம்பவத்தன்று சுதாகர் தொழில் தொடங்கப் போவதாக கூறி ஜெனிதாமேரிடம் பணம் கேட்டார்.
- 16 பவுன் நகையை தருமாறு சுதாகரிடம் கேட்டார். அவர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ஜெனிதாமேரி. விருத்தாச்சலம் பூதாம்பூரை சேர்ந்தவர் சுதாகர். இருவரும் நண்பர்கள். சம்பவத்தன்று சுதாகர் தொழில் தொடங்கப் போவதாக கூறி ஜெனிதாமேரிடம் பணம் கேட்டார். அவர் வைத்திருந்த 16 பவுன் நகையை சுதாகரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சுதாகர் அந்த நகையை ரூ.3 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில் ஜெனிதா மேரி தனது 16 பவுன் நகையை தருமாறு சுதாகரிடம் கேட்டார். அவர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஜெனிதா மேரி குறிஞ்சிப்பாடி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுப்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் கூடலிங்கம். இவரது மனைவி மஞ்சு (வயது20). இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு திருமணமானது.
கணவர் வேலைக்கு சென்ற பின்னர் அருகில் உள்ள மாமனார் வீட்டிற்கு மஞ்சு செல்வார். சம்பவத்தன்று மஞ்சு நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து மஞ்சு தனது மாமனாரிடம் கூறியுள்ளார். மா மனார் சுந்தரலிங்கத்திடம் தட்டி கேட்டார். அப்போது சுந்தரலிங்கம் அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் மாமனார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே விவகாரத்தில் கூடலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் முத்து, முருகன், முத்து முனி யாண்டி ஆகியோர் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக சுந்தரலிங்கம் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
- லஞ்ச ஒழிப்புத்துறையில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டினார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளராக இருப்பவர் முத்துச்சாமி (வயது55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்ப தாவது:-
கடந்த 21-2-2023-ல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் செல்போனில் தொடர்பு கொண்டு தான் அனுப்பும் நபரிடம் ரூ.10 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் கட்சிகளுக்கு பணம் தருவதில்லை என கூறி மறுத்துவிட்டேன். இந்தநிலையில் அவர் நேரில் வந்து என்னை சந்தித்தார். அப்போது நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டினார். இதுகுறித்து நான் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜிடம் கூறினேன். அதுகுறித்து விசாரிப்பதாக கூறிய அவர், அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்டார். என்னை பற்றி இன்பத்தமிழன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் செய்துள்ளதாகவும், அதனால் தற்போது ரூ.10 லட்சம் கேட்பதாகவும் கொடுக்காவிட்டால் லஞ்சஒழிப்புத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று மிரட்டுவதாகவும் கூறினார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் இன்பத்தமிழன் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
- இது தொடர்பாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வர் சிவகுமார். இவரது மகள் சூர்யபிரியா (வயது22). இவருக்கும், ஆலம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் 20 பவுன் நகை வரதட்சணையாக கேட்டனர். ஆனால் பெண் வீட்டார் முதற்கட்டமாக 12 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவை கொடுக்கப் பட்டது. ஆனால் சக்திவேல் மீதம் 8 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்த பின்புதான் சேர்ந்து வாழ முடியும் என சூர்யபிரியாவிடம் கூறியுள்ளார்.
நிலம் வாங்க ரூ.2 லட்சத்தை வாங்கி வருமாறு மனைவியை துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்ேறார் ஆசைதம்பி-தங்கலட்சுமி, சகோதரி அருள்தேவி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து சூர்யபிரியா விருதுநகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் சக்திவேல் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியை சேர்ந்தவர் காயத்ரி(வயது26). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் எனக்கும், உறவினர் பிரியதர்சன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. பிரியதர்சன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இதனால் நான் எனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டேன்.
இந்த நிலையில் எனது நகையை விற்று கார் வாங்கியதோடு பிரியதர்சன், சிவானந்த லட்சுமி என்பவரை 2-வது திரும ணம் செய்துள்ளார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். எனவே இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சம்பந்தப் பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பிரியதர்சன், அவரது பெற்றோர் பரமசிவம்-செல்வி, சகோதரர் பிரசன்ன குமார் உள்பட 8 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- தனது மனைவி யுடன் சண்டை போட்டு க்கொண்டி ருந்தபோது, ஊர்க்கா ரர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
- தடுக்கவந்த மகன் இருதயராஜையும் செந்தில்குமார் கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் கோட்டுச்சேரி கீழகாசா குடியைச்சேர்ந்தவர் ஜேம்ஸ்மேரி (வயது60). இவரது மகன் இருதயராஜ். இருதயராஜ் பந்தல்வேலை செய்துவருகிறார். கடந்த 26ந் தேதி ஜேம்ஸ்மேரி வசிக்கும் பகுதியில், செந்தில்கு மார் என்பவர் தனது மனைவி யுடன் சண்டை போட்டு க்கொண்டி ருந்தபோது, ஊர்க்கா ரர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். அந்த இடத்தில், ஜேம்ஸ்மேரியும் இருந்தார். கடந்த 27-ந் தேதி செந்தில்குமார் ஜேம்ஸ் மேரி வீட்டு வாசலுக்கு சென்று, எங்கள் குடும்ப பிரச்சனையில் ஏன் தலையிடுகிறீர்கள் என கேட்டு, கையில் வைத்திருந்த கட்டையால் ஜேம்ஸ்மேரியை தாக்கினார்.
இதனை தடுக்கவந்த மகன் இருதயராஜையும் செந்தில்குமார் கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 2 பேரும் கோட்டுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி பெற்று, தொடர் சிகிசைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு ஜேம்ஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சூப்பர் மார்க்கெட் பணம் கையாடல் செய்து மோசடி செய்ததாக 2019-ம் ஆண்டு புகார் செய்யப்பட்டது.
- வழக்கை விசாரித்த கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை புதியவீட்டு வசதி வாரியம்குடியிருப்பு பகுதியில் ஆயிரம் விவசா யிகளை உறுப்பினராக கொண்டு கடந்த 2015-ம் ஆண்டு டெல்டா சூப்பர் மார்க்கெட் தொடங்க ப்பட்டது.
இந்த நிறுவனம் சார்பில் 15 பேரை இயக்குநராக கொண்டு அதன் செயல் இயக்குநராக தொழில் அதிபர் ஒருவர்நியமிக்கப்பட்டார்.
இவர் 1-6-2016 முதல் 31-1-2017 வரை உள்ள காலத்தில் சூப்பர் மார்க்கெட் பணம் ரூ.39 லட்சத்து 56 ஆயிரத்து 126 கையாடல் செய்து மோசடி செய்ததாக 2019-ம் ஆண்டு புகார் செய்யப்பட்டது.
அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த தொழில் அதிபரை நேற்று இரவு கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் தஞ்சை 2-வது நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்த பட்டார்.
அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் உரிய கட்டணம் செலுத்தி உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்த 108 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இது வரை உரிமம் பெறாத வியாபாரிகள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும், காய்கறிக்கடைக்காரர்களும் உரிமம் பெற வேண்டும்.
உணவு பொருட்களில் கலப்படம் இருந்தாலோ, தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்பட்டாலோ அது தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பலாம்.
இப்போது நகர்புறங்களில் இட்லி, தோசை மாவுகளை அரைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இட்லி, தோசை மாவை பிரிட்ஜில் வைத்து தான் விற்க வேண்டுமே தவிர வெளியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது.
கரும்பு சாறு, சர்பத் போன்ற குளிர்பானங்களில் மீன்களை பதப்படுத்துவதற்கான ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. அவை சுத்தமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுவதால் குளிர்பானங்களில் அதனை பயன்படுத்தக்கூடாது என்பதால் மீன்களை பதப்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளை தயாரிப்பவர்கள் அவற்றில் நீலநிறத்தை சேர்க்க வேண்டும் என்று ஐஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
சமையல் எண்ணை, பால், தண்ணீர், டீ போன்றவற்றில் கலப்படத்தை தடுப்பதற்காக அவற்றில் இருந்து மாதந்தோறும் மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்காக அனுப்புகிறோம். கடந்த 6 மாதங்களில் சமையல் எண்ணையில் மட்டும் 68 மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். இவற்றில் ஒரு எண்ணை மாதிரியில் கலப்படம் இருப்பதும், 17 மாதிரிகள் தரம் குறைந்ததாக இருப்பதும், 27 மாதிரிகளில் லேபல் மோசடி இருப்பதும் தெரியவந்து உள்ளது. அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்