என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunrisers hyderabad"

    • ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • முதலாவதாக களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதில் முதலாவதாக களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது.

    இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில்7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோற்றது.
    • இந்த மைதானத்தில் கடந்த சீசனில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

    ஐதராபாத் தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 44 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் இஷான் கிஷன் சதத்தோடு 286 ரன்கள் குவித்து மலைக்க வைத்த ஐதராபாத் அணி, எதிரணியை 242 ரன்னில் மடக்கியது.

    அந்த அணியில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ்குமார் ரெட்டி என அபாயகரமான பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். இவர்களில் ஒருவர் நிலைத்து நின்றாலே எதிரணி நிலைமை திண்டாட்டம் தான். சொந்த ஊரில் நடப்பது அவர்களுக்கு கூடுதல் அனுகூலமாகும்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோற்றது. இதில் மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன் ஆகியோரது அரைசதத்தால் 209 ரன்கள் சேர்த்த லக்னோ அணி, வெற்றியை நெருங்கி வந்து கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் டக்-அவுட் ஆகிப்போனார். தவறுகளை திருத்திக் கொண்டு முதல் வெற்றிக்காக போராடுவார்கள்.

    இவ்விரு அணிகள் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் கடந்த சீசனில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டன. இதனால் இந்த தடவையும் ரன்விருந்தை எதிர்பார்க்கலாம். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஆடம் ஜம்பா.

    லக்னோ: எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி, ஷர்துல் தாக்குர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, ஆவேஷ்கான், எம்.சித்தார்த்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நடப்பு சீசனின் முதல் போட்டியிலேயே ஐதராபாத் 286 ரன்கள் குவித்துள்ளது.
    • ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும்.

    ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினார். அவர் மட்டுமல்லாமல் டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார், கிளாசன் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவரில் 286 ரன்கள் குவித்தது.

    ஐ.பி.எல். தொடரில் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் அதிக முறை 250 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது.

    அதற்கு அந்த அணி தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா, ஹெட் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இவர்களையடுத்து இந்த சீசனில் இஷான் கிஷன் இணைந்துள்ளார். அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி உள்ளார். அவரையடுத்து நிதிஷ் ரெட்டி, கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அவர்கள் 300 ரன்களை எடுப்பது வெகு தூரம் இல்லை.

    இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 300 ரன்களை எட்டும் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார்.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, ஒரு சின்ன கணிப்பு. ஏப்ரல் 17 அன்று ஐபிஎல்லில் முதல் 300 ரன்களைப் பார்ப்போம்.

    யாருக்குத் தெரியும், அது நடப்பதைப் பார்க்க நான் கூட அங்கே இருக்கலாம் என கூறியுள்ளார்.

    ஏப்.17-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதுகின்றனர்.

    • ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.
    • ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் 34 பவுண்டரிகளை விளாசினர்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக், ஐதராபாத் அணியை முதலில் பேட் செய்ய பணித்தார். அதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது.

    பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. கடந்த ஆண்டு 3 முறை 250 ரன்களை கடந்து இருந்த ஐதராபாத் ஐ.பி.எல். தொடரில் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் அதிக முறை 250 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது. அதற்கு அடுத்த இடத்தில் இந்திய அணி, கவுண்டி அணியான சுர்ரே (தலா 3 முறை) ஆகியவை உள்ளன.

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் 34 பவுண்டரிகளை விளாசினர். 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரி இதுவாகும்.

    ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி எடுத்த 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். ஏற்கனவே ஐதராபாத் அணி கடந்த ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.

    • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது.
    • அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம்.

    16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் ஒரு போட்டியையும், வெளியில் சென்று ஒரு போட்டியையும் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது.

    இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது வரும் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் இம்முறை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே சன்ரைசர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்து வாங்க இருக்கிறது.

    அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு வீரரை கேப்டனாக தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம். அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியை வழிநடத்திய விதமும், அவர் எடுத்த சில அதிரடியான முடிவுகளும் அவர் ஒரு பயமற்ற, சுயநலமற்ற வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது.

    எனவே நிச்சயம் அவரால் சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட முடியும். அதோடு வில்லியம்சனை ஏலத்தில் எடுக்க பெரியளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் தங்களது மிடில் ஆர்டரை பலப்படுத்த அவரை நீங்கள் குறைந்த தொகைக்கு கூட ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

    என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

    அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலும் அவரது தலைமையிலான அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.
    • 28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ஐ.பி.எல். 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் கேப்டனாக இருந்தவர் மார்க்ரம். இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என பலவீனமான அணியாகவே அந்த அணி கருதப்பட்டது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி வெளியேறினார். அதன் பிறகு பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.

    28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • ஜெய்பூர் மைதானத்தில் அதிக பட்ச சேசிங் இதுவாகும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியின் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 95 ரன்களும் சாம்சன் 66 ரன்கள் குவித்தனர். இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அப்துல் சமத் அதிரடியாக விளையாடியும் கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது சந்திப் சர்மா அவுட்டாக்கினார். ஆனால் அதை நோ-பாலாக வீசிய காரணத்தால் கடைசியில் ஃப்ரீ ஹிட்டில் சிக்சர் அடித்த அவர் 7 பந்தில் 17 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் ஐதராபாத் அணி முதல் முறையாக 200+ இலக்க ரன்னை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது. ஜெய்பூர் மைதானத்தில் அதிக பட்ச சேசிங் இதுவாகும். 

    • ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது.
    • ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்தியாவில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் ஐதராபாத் அணி புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. லாராவின் பதவி காலம் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரியை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நிர்வாகம் நியமித்துள்ளது.

    முன்னதாக ஆர்சிபி அணி புதிய பயிற்சியாளரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்சை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    • ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இத்தொடரில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.

    ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    இங்கிலாந்தின் சாம் கர்ரன் 18.50 கோடி ரூபாய்க்கு கடந்த தொடரில் ஏலம் போனார் என்பதே மிகவும் அதிகமாகும்.

    • ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது.
    • சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்திருப்பதை அறிந்து டேவிட் வார்னர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்.

    துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது.

    இந்நிலையில் சக அணி வீரரான திராவிஸ் ஹெட்டை பாராட்ட நினைத்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு சன்ரைசர்ஸ் அணி ஷாக் கொடுத்துள்ளது.

    அது என்னவென்றால் 6.8 கோடிக்கு விலை போன ஹெட்டை வாழ்த்துவதற்காக சன் ரைசர்ஸ் அணி நிர்வாகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வார்னர் தேடியுள்ளார். ஆனால் அப்போது தான் சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்திருப்பதை அறிந்து டேவிட் வார்னர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்.

    அது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டேவிட் வார்னர் ஏமாற்றத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், டிராவிஸ் ஹெட் பற்றிய பதிவை பதிவிடுவதற்காக நான் முயற்சித்தேன். ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் என்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல் எக்ஸ் தள பக்கத்திலும் சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்துள்ளதை வார்னர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த வார்னர் 2019 வரை அனைத்து தொடர்களில் 500-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அறிமுகம் செய்தது.
    • இதேபோல, சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகமும் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.

    மும்பை:

    இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கழற்றிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. மும்பை ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தோம் என மும்பை நிர்வாகம் அறிவித்தது.

     இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.

    இதேபோல், சன்ரைசர்ஸ் நிர்வாகமும் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளனர்.

    • ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
    • ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களை குவித்தது.

    இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்றது. முன்னதாக ஆர்.சி.பி. அணி 263 ரன்களை குவித்தது ஐ.பி.எல். வரலாற்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது இருந்தது. நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் டிராவில் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.


     

    டிராவில் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களையும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்களையும், கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கியது. அதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.

    அளவில் பெரிதாக காட்சியளிக்கும் சங்கிலி தங்கத்தால் செய்யப்பட்டதாகவே இருக்கும் என்றும் அதன் விலை ரூ. 80 லட்சம் வரை இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.


    ×