search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swine fever"

    • அரியவகை காய்ச்சலான நைல் காய்ச்சலும் சிலரை பாதித்தது.
    • ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே அங்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவியது. அதிலும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் என பல வகையான காய்ச்சல்கள் அதிகளவில் பரவியது. மேலும் அரியவகை காய்ச்சலான நைல் காய்ச்சலும் சிலரை பாதித்தது.

    இந்நிலையில் பருவமழை பெய்ய தொடங்கியதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவல் கேரளாவில் மேலும் அதிகரித்திருக்கிறது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த ஜூன் மாதத்தில் எலிக்காயச்சலால் 253 பேரும், டெங்கு காய்ச்சலால் 1,912 பேரும், மஞ்சள் காமாளையால் 500 பேரும், எச் 1 என் 1 தொற்றால் 275பேரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எலி காய்ச்சலுக்கு 18 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும், மஞ்சள் காமாலைக்கு 5 பேரும், எச் 1 என் 1 தொற்றுக்கு 3 பேரும் இறந்துள்ளனர்.

    இந்த மாதத்தில் நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 684 பேர் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 81 ஆயிரத்து 127 பேருக்கு காய்ச்சல் பாதித்துள்ளது. அதிலும் நேற்று ஒரு நாளில் 10 ஆயிரத்து 914 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களில் 186 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

    டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மஞ்சள்காமாலை என பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதால் கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.

    மழை தீவிரம் அடையும் போது நோய்கள் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரின் பன்றி பண்ணையில் இருந்து கடந்த மார்ச் 9-ந் தேதி 2 பன்றிகள் இறந்தன.
    • கடந்த மார்ச் 23-ந தேதி அதன் முடிவு பெறப்பட்டது. அந்த ஆய்வில், இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியம், ஆர்.புதுப்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரின் பன்றி பண்ணையில் இருந்து கடந்த மார்ச் 9-ந் தேதி 2 பன்றிகள் இறந்தன. அதையடுத்து, இறந்த பன்றிகள், பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி நோய்க் குறியியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பன்றியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், சென்னையில் உள்ள மத்திய கால்நடை மருத்துவ கல்லூரி பல்கலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டடது. கடந்த மார்ச் 23-ந தேதி அதன் முடிவு பெறப்பட்டது. அந்த ஆய்வில், இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம், கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில், 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, பன்றி பண்ணையைச் சுற்றி, 1 கி.மீ. தூரத்துக்கு தீவிர கண்காணிப்பிலும், 9 கி.மீ. தூரத்துக்கு, நோய் பரவல் மற்றும் நோய்த் தன்மை பரவாமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

    பன்றி பண்ணையில் ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல், நோய் கிளர்ச்சி குறித்து சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குனர் உத்தரவின்படி, அந்த பண்ணையில் இருந்த 18 பன்றி குட்டிகள், மனிதாபிமான முறையில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் அழிக்கப்பட்டது.

    தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கு, இந்த பன்றி காய்ச்சல் குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினரால் பன்றி பண்ணைகள் கண்காணிக்கப்படும்.

    இந்த பன்றிக் காய்ச்சல், பன்றிகளில் இருந்து, பன்றிகளுக்கு மட்டுமே பரவும் தன்மை கொண்டது. இது மற்ற விலங்குகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ பரவாது. அதனால், பொதுமக்கள் யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    வாணியம்பாடி தொழிலாளி பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடி தெருவை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 48). தொழிலாளி. இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜமாலுதீன் மர்ம காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டார். உறவினர்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத் திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜமாலுதீன் ரத்தத்தில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜமாலுதீன் நேற்று இரவு உயிரிழந்தார். பன்றிக்காய்ச்சலுக்கு அவர் உயிரிழந்தார் என ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி தெரிவித்துள்ளது.

    மற்ற நோயாளிகளுக்கும் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஆஸ்பத்திரியில் இருந்து இன்று காலை ஜமாலுதீன் உடல் வாணியம்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே, வாணியம்பாடி நகராட்சி சுகாதார குழுவினர், சென்னாம்பேட்டையில் மருத்துவ முகாம் அமைத்து சுகாதார பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், சுகாதார பணி மற்றும் துப்புரவு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் தகவல் பரவியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சீனாவில் பன்றிகளுக்கு சுவைன் காய்ச்சல் நோய் தாக்கி இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்காக நோய் அறிகுறி உள்ள பன்றிகளை கொன்று குவித்து வருகிறார்கள். இதன்படி 14 ஆயிரத்து 500 பன்றிகள் இதுவரை கொல்லப்பட்டுஉள்ளன. #swinefever
    பீஜிங்:

    பன்றி உள்ளிட்ட சில விலங்களுக்கு ‘ஆப்ரிக்கன் சுவைன் காய்ச்சல்’ என்ற நோய் பரவுவது உண்டு. இந்த நோயை குணப்படுத்த மருந்துகளோ, முன்கூட்டியே தடுக்கும் மருந்துகளோ இல்லை.

    தற்போது ரஷியாவில் இந்த நோய் பன்றிகளுக்கு பரவி உள்ளது. அங்கிருந்து சீனாவிலும் நோய் தாக்குதல் பரவி இருக்கிறது.

    சீனாவில் கடந்த மே மாதம் நோய் பரவி இருப்பது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது லையூங்கன் நகரில் ஏராளமான பன்றிகளுக்கு இந்த நோய் பரவி உள்ளது.

    உலகில் பன்றி இறைச்சி உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. லையூங்கன் நகரில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. 40 லட்சம் பன்றிகள் அங்கு மட்டுமே வளர்க்கப்படுகின்றன.

    அங்கு பன்றிகளுக்கு இந்த நோய் தாக்கி இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்காக நோய் அறிகுறி உள்ள பன்றிகளை கொன்று குவித்து வருகிறார்கள். இதன்படி 14 ஆயிரத்து 500 பன்றிகள் இதுவரை கொல்லப்பட்டுஉள்ளன.

    தொடர்ந்து பல இடங்களிலும் ஆய்வு நடந்து வருகிறது. தடுப்பு மருந்து இல்லாததால் இந்த நோய் தாக்கினால் சில நாட்களில் பன்றி இறந்துவிடும். நோய் மேலும் பரவாமல் இருப்பதற்கு பாதிக்கப்பட்ட பன்றிகளை கொன்றுவிட வேண்டும். இல்லை என்றால் அவற்றின் மூலம் மற்ற பன்றிகளுக்கும் பரவி விடும்.

    எனவே தான் பன்றிகளை அழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோயினால் சீனாவில் பன்றி பண்ணைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பன்றிகளுக்கு ஏற்படும் இந்த காய்ச்சல் மனிதனுக்கு பரவுவதில்லை. அதே நேரத்தில் இவற்றை கட்டுப்படுத்தாவிட்டால் ஏராளமான பன்றிகள் அழிவதுடன் காட்டு விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே தான் அதை கட்டுப்படுத்த சீனா தீவிரம் காட்டி வருகிறது.  #swinefever
    ×