search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Syed Mushtaq Ali Trophy"

    • முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது.
    • இதனையடுத்து விளையாடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    ராஞ்சி:

    16-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை, மொகாலி, ஜெய்ப்பூர், ராஞ்சி உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ராஞ்சியில் நேற்று நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ரெயில்வே-அருணாச்சலபிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உபேந்திர யாதவ் ஆட்டம் இழக்காமல் 103 ரன்னும், அசுதோஷ் ஷர்மா 53 ரன்னும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 8 சிக்சர்) நொறுக்கினர்.

    அசுதோஷ் ஷர்மா 11 பந்துகளில் அரைசதத்தை எட்டி சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் (சர்வதேச மற்றும் உள்ளூர் 20 ஓவர் போட்டி) அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ்சிங்கிடம் இருந்து தட்டிப்பறித்தார். 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

    ஒட்டுமொத்த அளவில் கடந்த மாதம் நடந்த ஆசிய விளையாட்டில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்ததே உலக சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் ஆடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் அடங்கியது. இதனால் ரெயில்வே அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • இதற்கு முன்பாக ஒரு ஓவருக்கு ஒரு ஷாட்பால் தான் வீச வேண்டும் என்ற நிலை இருந்தது.
    • ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

    மும்பை:

    சையத் முஷ்டாக் அலி டிராபியில் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு இரண்டு பவுன்சர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ இன்று அறிவித்தது.

    அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இதுவும் ஒன்று. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நடப்பாண்டு முதல் சையது அலி முஸ்தாக் டி20 தொடரில் ஒரு ஓவருக்கு இரண்டு ஷாட் பாலை வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சையது முஸ்தாக் அலி தொடரில் பேட்டிற்கும் பந்திற்கும் சரிசமமான நிலையை இந்த ஷாட் பால் உருவாக்கும். பேட்ஸ்மேன் நன்றாக அடித்துக் கொண்டு இருந்தால் இனி பவுலர்கள் இரண்டு ஷாட் பாலை வீசி அவர்களை கட்டுப்படுத்தலாம்.

    இதற்கு முன்பாக ஒரு ஓவருக்கு ஒரு ஷாட்பால் தான் வீச வேண்டும் என்ற நிலை இருந்தது. இதேபோன்று சையது அலி முஸ்தாக் தொடரை அக்டோபர் 16ஆம் தேதி நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு விஜய் ஹசாரே கோப்பையை பிசிசிஐ நடத்தும். இதேபோன்று இந்தக் கூட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

    மேலும் வரும் உலகக் கோப்பை தொடருக்கு மைதானங்களை புனரமைக்க இந்த கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக இரண்டு மைதானங்களில் நிலையை மாற்றவும் உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு அனைத்து மைதானங்களையும் நவீனப்படுத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்கவும் சில விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளது.

    • கொல்கத்தாவில் நடந்த இறுதிப்போட்டியில் மும்பை, இமாசல பிரதேசம் அணிகள் மோதின.
    • டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    கொல்கத்தா:

    சையத் முஷ்டாக் அலி டி 20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஈடன் கார்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இமாசல பிரதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஏகாந்த் சென் 37 ரன்னும், ஆகாஷ் வசிஷ்ட் 25 ரன்னும் எடுத்தனர்.

    மும்பை அணி சார்பில் தனுஷ் கோடியான், மோஹித் அவஸ்தி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய மும்பை அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.

    சர்ப்ராஸ் கான் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல்முறையாக மும்பை அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருதை தனுஷ் கோடியான் வென்றார்.

    சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் கேரளாவின் விஷ்ணு வினோத் அரை சதமடித்து 65 ரன்கள் எடுத்து அசத்தினார்.
    புதுடெல்லி:

    சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான காலிறுதிச் சுற்றுக்கு தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், குஜராத், ஐதராபாத், கேரளா, விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள்  தகுதிபெற்றன.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற காலிறுதியில் தமிழ்நாடு, கேரளா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கேரள அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ரோஹன் 51 ரன்கள் எடுத்தார். விஷ்ணு வினோத் 26 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்தார்.

    தமிழக அணி சார்பில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 46 ரன், விஜய் சங்கர் 33 ரன், ஹரி நிஷாந்த், சஞ்சய் யாதவ் தலா 32 ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஷாருக் கான் 19 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதன்மூலம் தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

    இதேபோல், குஜராத், ஐதராபாத்துக்கு இடையே நடந்த காலிறுதியில் ஐதராபாத் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதியில் ஐதராபாத் அணி தமிழ்நாடு அணியுடன் மோதுகிறது.

    ராஜஸ்தான், விதர்பா அணிகளுக்கு இடையே நடந்த காலிறுதியில் விதர்பா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கர்நாடகம், பெங்கால் அணிகளுக்கு இடையே நடந்த காலிறுதிப் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் கர்நாடகா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் கர்நாடகா அணி விதர்பா அணியை எதிர்கொள்கிறது.
    சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில், தமிழக அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாசலபிரதேச அணி வெற்றி பெற்றது. #SyedMushtaqAliTrophy
    புதுடெல்லி,

    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூரத்தில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-இமாசலபிரதேச அணிகள் மோதின.

    ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் 58 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இமாசலபிரதேச அணி தரப்பில் அங்கித் மைனி 3 விக்கெட்டும், கன்வார் அபினய் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இமாசலபிரதேச அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரஷாந்த் சோப்ரா 68 ரன்னும், ரிஷி தவான் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். #SyedMushtaqAliTrophy
    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்றில் சவுராஷ்டிரா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ரயில்வேஸ் அணி. புஜாராவின் அதிரடி சதம் வீணானது. #SyedMushtaqAliTrophy #Pujara
    இந்தூர்:

    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கியது.

    சி பிரிவில் இடம் பிடித்துள்ள சவுராஷ்டிரா மற்றும் ரயில்வேஸ் அணிகள் இந்தூரில் மோதின. டாஸ் வென்ற ரயில்வேஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து சவுராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹவிக் தேசாய், புஜாராவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். தேசாய் 34 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா 46 ரன்னில் வெளியேறினார்.

    மறுபுறம், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக கருதப்பட்ட புஜாரா அதிரடியாக ஆடி 60 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இது டி20 போட்டியில் புஜாராவின் முதல் சதமாகும். இறுதியில், சவுராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 188 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து களமிறங்கிய ரயில்வேஸ் அணியில் மிருணாள் தேவ்தார் 49 ரன்னும், பிரதம் சிங் 40 ரன்னும் எடுத்தனர். இறுதிவரை போராடிய அபினவ் தீக்சித் 37 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புஜாராவின் அதிரடி சதம் வீணானது. #SyedMushtaqAliTrophy #Pujara
    ×