search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tabacco"

    • தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அப்போது, மொய்தீன் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், முனியசாமி, தனிப்பிரிவு தலைமை காவலர் முருகேசன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, தூத்துக்குடி கோமாஸ்புரம், ராஜீவ்காந்தி ஹவுசிங் போர்டு குவாட்டர்ஸ் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் (வயது 40) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மொய்தீனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொய்தீன் புகையிலை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார்? எங்கு கொண்டு செல்கிறார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முக்கூடல் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசாமி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • மேலும் அவரிடமிருந்து 31 கிலோ புகையிலை பொருட்கள், 55 மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர்.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகே பாப்பாக்குடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓடக்கரை துலுக்கப்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு நின்று கொண்டிருந்த முக்கூடல் அருகே உள்ள மானாபர நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசாமி (வயது 35) என்பவரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவர் கையில் இருந்த பையை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சட்டவிரோத விற்பனைக்காக மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார்கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 31 கிலோ புகையிலை பொருட்கள், 55 மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர்.

    • பாத்திமா மில்கேட் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • பேட்டை போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் கடையில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது.

    நெல்லை:

    நெல்லை பேட்டை மில்கேட் பகுதியை சேர்ந்தவர் செய்யது முகமது பட்டாணி. இவரது மனைவி செய்யதலி பாத்திமா(வயது 52). இவர் மில்கேட் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பேட்டை போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் கடையில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து பாத்திமா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள அகப்பைக்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செ ய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவி ரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அதில் கார் டிக்கியில் 110 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், காரின் உரிமை யாளரான அகப்பைகுளம் 1-வது தெருவை சேர்ந்த செல்வன் விக்டர் (வயது58) என்பவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • உப்பாத்து காலனி பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மயிலப்புரத்தை சேர்ந்த காரல் மார்க்ஸ் என்பவர் தான் புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்துள்ளார் என்பது தெரியவந்தது.

    நெல்லை:

    வீரவநல்லூர் அருகே உள்ள உப்பாத்து காலனி பகுதியில் ஒரு இடத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சுமார் 13 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முக்கூடல் அருகே மயிலப்புரத்தை சேர்ந்த காரல் மார்க்ஸ்(வயது 56) என்பவர் தான் புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்துள்ளார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • கடையின் அருகே உள்ள காலியிடத்தில் திருமலைகுமார் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து மேலத்தெருவை சேர்ந்தவர் திருமலைகுமார்(வயது 40). இவர் அப்பகுதியில் நெல்லை-தென்காசி சாலையில் பலசரக்கு கடை வைத்துள்ளார்.

    இவர் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் வி.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது கடையின் அருகே உள்ள காலியிடத்தில் அவர் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். புகையிலையையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    ×