என் மலர்
நீங்கள் தேடியது "tag 104723"
இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இளம்பெண் ஜோ சாண்ட்லர் (வயது 25). இவருக்கு சிறு வயது முதலே சாண்ட்விச் மீது கொள்ளை பிரியம். இதனால், பள்ளி கூடத்தில் படிக்கும்போது கூட லஞ்ச் பாக்சில் சாண்ட்விச்சுகளையே எடுத்து சென்றிருக்கிறார். கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார்.
அவரது 2 வயதில் இருந்து இந்த பழக்கம் ஆரம்பித்து உள்ளது. மற்ற உணவுகளை சாண்ட்லரின் பெற்றோர் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதனை ஏற்காமல் அவர் முகம் திருப்பி கொள்வார். மற்ற உணவுகள் உடல்ரீதியாக அவருக்கு ஒத்து கொள்ளவில்லை. எண்ணெயில் பொரிக்கப்பட்டு எடுக்கும் உருளைக்கிழங்கு வறுவலில் தினமும் 2 பேக் எடுத்து கொள்வார்.
வெண்ணெய் தடவிய வெள்ளை பிரட்டையும் சாப்பிடுவார். இதுபற்றி சாண்ட்லர் கூறும்போது, எனக்காக எனது தாயார் வாங்க கூடிய ஒரு பொருள் உருளைக்கிழங்கு வறுவலே. அதனையும், மிருது தன்மை வரும்வரை வாயில் போட்டு உறிஞ்சுவது வழக்கம் என கூறுகிறார்.
பள்ளியில் படிக்கும்போது எனது உணவாக வெண்ணெய் தடவிய பிரட்டின் நடுவே வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு வறுவல்களையே (ஒரு வகையான சாண்ட்விச்) எடுத்து செல்வேன் என கூறுகிறார். அது ஒன்றையே சாப்பிட நான் விரும்புவேன். சில சமயங்களில் காலை உணவாக உலர்ந்த தானியங்களை சாப்பிடுவேன்.
மதிய உணவு, இரவு உணவாக மேற்கூறிய சாண்ட்விச்சுகளையே எடுத்து கொள்வேன். ஒரு சில சமயங்களில் பாலாடைக்கட்டி மற்றும் வெங்காய வறுவல்களையும் சாப்பிடுவேன் என கூறுகிறார். இதனால், ஒரு கட்டத்தில் அவருக்கு மூளை மற்றும் நரம்புகளை பாதிக்க கூடிய தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் நோய் தாக்கம் ஏற்பட்டு உள்ளது. இது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் பாதிப்புகளை கொண்டது.
இதனால் பயந்து போன சாண்ட்லர் உடல்நலம் தேற மருத்துவர் டேவிட் கில்முர்ரி என்பவரை சந்தித்து உள்ளார். அவர் அளித்த சிகிச்சையின் பயனாக, முதன்முறையாக பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் பிற உணவுகளையும் சாண்ட்லர் சாப்பிட தொடங்கியிருக்கிறார். சீச்சீ... இந்த பழம் புளிக்கும் என கூறி வந்த அவர், ஸ்டிராபெர்ரி பழங்கள் எவ்வளவு சுவையாக உள்ளன என என்னால் நம்ப முடியவில்லை என கூறுகிறார்.
இவருக்கு ஏற்பட்டுள்ள வியாதி நியோபோபியா என மருத்துவ உலகில் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின்னர் சாண்ட்லர், புளூபெர்ரி, ஸ்டிராபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களையும், முட்டைகோஸ், கடலைகள் மற்றும் பிற உணவுகளையும் எடுத்து வருகிறார். அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெற உள்ள தனது திருமணத்தில் ஒரு முழு உணவையும் எடுத்து கொள்வேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இதையும் படிக்கலாம்...அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் குறித்த பரபரப்பு தகவல்
தேனி:
தேனி பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிருஷ்ணபிரியா (வயது 20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதி கேரளாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபிரியா தேனியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று வெளியே கடைக்குச் செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிச் சென்றுள்ளார்.
ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் ஊர் திரும்பவில்லை. இதனால் மணிகண்டனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். ஆனால் கிருஷ்ணபிரியா அங்கும் செல்லவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ண பிரியாவை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகில் உள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது23). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், சேத்தூர் காமராஜர்நகரைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது 10 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.
தற்போது கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்கின்றனர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து ஸ்டாலின் ராஜாவை கைது செய்தார். அவரது தாயார் விஜயாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரியில் பஸ் நிலையத்தையொட்டி பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இன்று பகல் 12 மணி அளவில் இந்த நிறுவனத்திற்கு வாலிபர் ஒருவர் சென்றார்.
அந்த வாலிபருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் அங்கு பணிபுரிந்த பெண் ஒருவரின் அருகில் சென்றார். அந்த ஊழியரிடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்தார்.
சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த பெண், வாலிபரை திட்டியபடி அவரை பிடிக்க நிறுவனத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
இதை கண்டதும் அந்த வாலிபர், வடசேரி பஸ் நிலைய பகுதிக்குள் ஓடினார். அந்த பெண்ணும் விடாமல் துரத்தினார்.
ஒரு வாலிபரை பெண் ஒருவர் துரத்தி செல்வதை கண்டதும் பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த வாலிபரை திருடன் என நினைத்து மடக்கி பிடித்தனர்.
வாலிபர் பிடிபட்டதும், அந்த பெண்ணும் அங்கு வந்து விட்டார். அவர் அந்த வாலிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பயணிகளிடம் கூறினார். மேலும் அவர் பணம் தருவதாக கூறி தன்னை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறி அழுதார்.
பெண் கூறியதை கேட்டதும் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். பிடிபட்ட வாலிபருக்கு அவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் இச்சம்பவம் பற்றி அவர்கள் வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்ததும், அவர்களிடம் வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக வடசேரி பஸ் நிலையத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷான், (வயது 25).
மலையாள டெலிவிஷன் தொடர்களில் ஷான் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண்ணுக்கு டி.வி.யில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஷான் கூறினார். இதனால் அந்த பெண்ணும் ஷானுடன் நெருங்கி பழகினார். இதில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர்.
இந்த நிலையில் ஷானுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த பெண் ஷானை பிரிந்து சென்றார். அவரை சந்திக்கவும் மறுத்தார். காதலையும் உதறினார்.
இதையடுத்து அந்த பெண்ணுக்கு பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
காதலிக்கு வேறு வாலிபருடன் திருமணம் நிச்சயமான தகவல் நடிகர் ஷானுக்கு தெரிய வந்தது. அவர், பெண்ணின் ஆபாச படங்களை அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகனுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டார்.
திருமணம் நின்று போனதற்கு நடிகர் ஷான்தான் காரணம் என்பது பெண்ணுக்கு தெரிய வந்தது. அவர் இதுபற்றி பாலோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஷானை கைது செய்தனர்.
ஷான் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவனந்தபுரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #PocsoAct
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கந்தர்வாலி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு தனியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்கள், அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அந்தப் பெண் கூறிய இடத்திற்குச் செல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, இளம்பெண்ணை மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுபற்றி பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர். #UPWomanMolested #WomanHarassed
நாகர்கோவில் கோட்டார் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா சுபாஷ்(வயது20). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கல்லூரிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லை.
இதையடுத்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசம் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றார்.
களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா(23). இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த நிஷா மாயமாகி இருந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.
மேலும் உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
சென்னை ஆவடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் புதுவையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது புதுவை வ.உ.சி. தெருவை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இளம்பெண் தனது உறவினரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ரமேசை கைது செய்தனர். #tamilnews
உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கோரக்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தார். அவர் அரசு போட்டித் தேர்வுகளுக்கு அங்கு தங்கி இருந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் அப்பெண் தங்கி இருந்த வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அப்பெண்ணும், பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தையும் இறந்து கிடந்தனர்.
அவரது அறையில் கிடந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது அதில், வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுப்பது எப்படி? என்ற வீடியோ இருந்தது.
விசாரணையில் திருமணமாகாத அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்து இணைய தளத்தில் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.
இதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டது. பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். #Gorakhpurwoman #Watchingvideo #Delivery
திருப்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (25) இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவர் அண்ணாநகரில் இருந்து பாண்டியன் நகர் செல்லும் வழியில் உள்ள ஒரு டாஸ்மாக் மது பாருக்கு சென்றார்.
அப்போது அங்கு இருந்த ஒரு ஊழியரிடம் மது பாட்டில் இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு ஊழியர் இருக்கிறது. ஆனால் குவாட்டருக்கு ரூ. 50 கூடுதலாகும் என்றார்.
இதையடுத்து கவிதா திடீரென அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பகல் 12 மணிக்கு தான் மதுக்கடை திறக்க வேண்டும். ஆனால் நீங்கள் எந்நேரமும் மது விற்பனை செய்கிறீர்கள்.
இதனால் எனது கணவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் காலையிலேயே மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்வதில்லை. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காலையிலே இப்படி மது விற்றால் எப்படி குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று வாக்குவாதம் செய்தார்.
இதைக்கேட்ட பார் ஊழியர் கவிதாவை தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த கவிதா தான் கொண்டு வந்திருந்த ஒரு கத்தியுடன் திடீரென கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் வந்தனர். போலீசார் வருவதை பார்த்த பார் ஊழியர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் பாருக்குள் சென்று பார்த்த போது அங்கு 2 பாக்ஸ் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆனாலும் கவிதா தொடர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் திடீரென அவர் சாலையில் அமர்ந்து கொண்டார். போலீசார் அவரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன் எப்படி மது விற்கலாம் என்ற ஆவேசமாக கேள்வி கேட்டார்.
இதையடுத்து போலீசார் கவிதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் எதற்காக கத்தி கொண்டு வந்தார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவரின் குடிபோதையால் மனம் உடைந்த இளம்பெண் மதுபாரில் தகராறு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. #tamilnews