search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருது"

    • 2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்புற கூட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2022-23 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளலிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மணிமேகலை விருது பெற தகுதியுள்ள சுயஉதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை முறையான கூட்டம் நடத்துதல், சேமிப்பு செய்ததை முறையாக சேமித்தல், வங்கி கடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேலும், மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடமும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, சமுதாய அமைப்பாளர்களிடம் தொடர்புகொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    இந்தாண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.

    திருப்பூர்:

    ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவின் போது, வீரம் மற்றும் சாகச செயல்களை செய்த துணிச்சல் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 'கல்பனா சாவ்லா' விருது, பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.

    பெயர், முகவரியுடன், தங்களின் விரிவான சாதனைப்பட்டியல், அதற்குரிய ஆவணங்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பொதுத்துறை முதன்மை செயலருக்கு, ஜூன், 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருதுக்கு தகுதியுள்ளவர்களை, அரசு நியமித்துள்ள குழு ஆய்வு செய்யும். அவர்களால் பரிந்துரைப்பவருக்கு விருது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் விருதுநகர் கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    விருதுநகர்

    சாத்தூர் சின்ன காமன் பட்டியைச் சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் மேட்ட மலையில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் திடீரென மாயமானார். சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம் பட்டியைச் சேர்ந்தவர் பரலோக தாஸ். இவரது மூத்த மகள் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார். 

    சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கூமாபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியை சேர்ந்த வர் மனோஜ்குமார் (21).  இவர் விருதுநகர் அருகே  ஆமத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மார்க்கெ ட்டிங் செல்வதாக கூறி விட்டு சென்ற மனோஜ் குமார் அதன் பின்னர் எங்கு சென்றார்? என தெரிய வில்லை. 

    பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து அவரது சகோதரர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நரிக்குடி அருகே உள்ள நல்லுக்குறிச்சி சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 21). சம்பவத்தன்று இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை வீரசோழன் போலீசில் புகார் செய்துள்ளார்.
     
    அதில், எனது மகன் கீழசெம்பூரை சேர்ந்த  இளம் பெண்ணுடன் மாயமானது தெரிய வந்துள்ளது. எனவே எனது மகனை மீட்டு தருமாறு தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் விருதுநகர் கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2021-22-ம் ஆண்டிற்கான (1.4.2018 முதல் 31.3.2021 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள்,  வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்,   உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

    விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் “முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு ‘‘உறுப்பினர்செயலர்.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரிய மேடு, சென்னை -3’’ என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்-10.6.2022 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×