search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளைகள்"

    ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்பதால் காங்கயம் இன நாட்டுமாடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    குண்டடம்:

    குண்டடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் விவசாயம் மற்றும் கால்நடைகளை மூலதனமாக கொண்டு வாழ்கை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் புகழ் பெற்ற காங்கயம் இன நாட்டுமாடுகளை அதிகளவில் வளர்த்து வந்தனர்.

    இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட வறட்சி மற்றும் ரேக்ளா பந்தயத்தடை ஆகியவற்றினால் குண்டடம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நாட்டு மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்றனர்.

    இந்த நிலையில் ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்பதால் காங்கயம் இன நாட்டுமாடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. மேலும் ரேக்ளா பந்தயத்தில் பரிசுபெறும் காளைகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

    இதனால் குண்டடம் பகுதி விவசாயிகள் அதிகமானோர் மீண்டும் நாட்டுமாடுகளை வளர்க்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் நாட்டு காளைகளை ரேக்ளா பந்தயத்திற்கும், ஜல்லிக்கட்டுக்கும் பயிற்சிகள் அளித்து வருகிறார்கள்.

    ×